Tuesday, April 22, 2014

பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்ற தேர்தல் -2014 ( கட்சிகளின் செயல்ப்பாடு ஒரு அலசல்)

இன்னும் ஒரு சில தினங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடலாம் என்பதற்கு முன், முக்கிய கட்சிகள் செயல்ப்பாடுகள் பற்றிய ஒரு அலசல் .

காங்கிரஸ்

இவர்கள் பத்தாண்டு காலத்தில், உண்மையில் கொண்டு வந்த திட்டங்கள் பல, இருந்தும் இவர்கள் மேல் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் காரணம்.

1) எங்கும் ஊழல் எதிலும் ஊழல். (விளையாட்டில் தொடங்கி இராணுவம் வரை ஊழல்)

2) அண்டை நாடுகளிடம் நம் இந்திய நாட்டை அடகு வைத்தது. (சீனா, பாகிஸ்தான், இலங்கை என அண்டை நாட்டு இராணுவத்தினர் நம் நாட்டிற்குள் வந்து நம்மை வேட்டையாடி சென்ற போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது)

3) தமிழக மீனவர்கள் விஷயத்தில் மெத்தன போக்கு.

4) ஆந்திரா மாநிலத்தை பிரிக்க எடுத்த நடைமுறைகள்..

5) பெட்ரோல்/டீசல் விலையை எண்ணெய் நிறுவங்கள் விலை நிர்ணயம் செய்ய வழி வகுத்தது. இதனால் பெட்ரோல்/டீசல் விலை கட்டுக்கு அடங்காமல் போனதால், விலைவாசி உயர்வு.

6) அந்நிய நேரடி முதலிடு ஒப்புதல் அளித்தல்

பா.ஜ.க.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கொள்கை விஷயத்தில் ஒரே நடைமுறையே தான் பின்பற்றுகிறது. முக்கிய பிரச்சனைகளில் இவ்விரண்டு கட்சிகளும் சேர்ந்தே முடிவு எடுத்திருக்கிறது. என்பதிற்கு சமிபத்தில் நடந்த தெலங்கான மசோதா ஒரு எடுத்துகாட்டு.

நாட்டில் மோடி அலை விசுவதாக ஒரு போலி மாயை ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில் அப்படி ஒன்றும் விச வில்லை, நாட்டில் காங்கிரஸ் மேல் அத்திருப்தி அலை தான் விசி கொண்டு இருக்கிறது. இதை சாதகமாக்கி கொண்டு நாட்டில் மோடி அலை விசுவதாக ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறார்கள்.

பா.ஜ.க வின் பிரதமர் வேட்ப்பாளர் மோடி மேல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும் குற்றசாட்டுகள்.

--> கோத்ரா கலவரத்தை முன்னின்று நடத்தியது

--> RSS கைப்பாவை

--> டாட்டா, அம்பானி அவர்களின் எடுப்பிடி.

நேற்று வரை மன்மோகன் சிங் அவர்களுக்கு ஆதரவு அளித்த ரிலையன்ஸ் டாட்டா போன்ற பண முதலைகள் தான் இன்று மோடி அவர்களுக்கு ஆதரவு கொடுத்து விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறது. ஆதலால் மோடியும் இந்த பண முதலைகளின் ரிமோட் கண்ட்ரோல் போல் தான் செயல் படுவார்.

ஆம் ஆத்மி

மக்களுக்காக தொடங்க பட்ட கட்சி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட கட்சி, சாமான்ய மக்களின் கட்சியில் ஏன் பெரும் கோடீஸ்வரர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.....?

மேலும் இந்த கட்சி சார்பில் நன்கொடைகள் வாங்குகிறார்கள், இது வரை 29,08,39,214 ரூபாய் நன்கொடையாக வாங்கி இருக்கிறார்கள்(ஆதாரம் : http://www.aamaadmiparty.org/donation-list). இந்த பணம் எதற்காக..? மக்களுக்காகவா அல்ல கட்சி வளர்க்கவா ....?

இந்த கட்சி ஓட்டுகளை பிரிக்க மட்டும் பயன்படும் கட்சி. இந்த கட்சியால் மத்தியில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க முடியாது. இதற்க்கு ஓட்டு போடுவதை விட நோட்டாவுக்கு ஓட்டு போடலாம்.

தே.மு.தி,க
 

 தி.மு.க, ஆ.தி.மு.க விற்கு மாற்று கட்சியாக நினைத்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்., மக்கள் தமிழகத்தின் எதிர் கட்சி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்கள். இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக அரசை குறை கூறும் இவர்கள், எத்தனை முறை சட்ட சபையில் இந்த மக்களுக்காக குரல் கொடுத்தார்கள்?, மக்கள் பிரச்சனைகளுக்காக எத்தனை போராட்டங்கள் முன்னிரு நடத்தினார்கள்?

தே.மு.தி.க விடம் மக்களுக்கு உள்ள கேள்விகள்
-------------------------------------------------------------------------

சட்டசபைக்கு ஏன் செல்வதில்லை என்று கேட்டால்?, அங்கு சென்றால் மட்டும் நாங்கள் சொல்லுவதை கேட்கவா போகிறார்கள் என்று அதன் தலைவர் கூறிகிறார்.

மக்கள் பிரச்சனையை சட்ட சபையில் பேச தான் தங்களை மக்கள் தேர்ந்து எடுத்தார்கள்,

சரி, இன்று மோடி, மிகவும் திறமையானவர்,நல்லவர், வல்லவர் என்றும், அவர் பிரதமராக வந்தால் தமிழ்நாட்டிற்கு நம்மை செய்வார் என்று கூறும் விஜயகாந்த் அவர்கள், ஏன் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுடன் ம.தி.மு.க போல் அதரவு கொடுக்க முன் வில்லை,....?

பேரம் படிந்த பின்பு தான் மோடி அவர்கள் திறமையானவராக தெரிகிறாரா..?

அன்று அ.தி.மு.க விற்கு குருட்டுத்தனமாக அதரவு அளித்தது போல் தான் இன்று பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இவர் செல்லும் இடமெல்லாம் அதரவு கேட்கிறார். அன்று அ.தி.மு.க போல், நாளை பாஜக வும் தமிழக பிரச்சனைகளில் இவரை ஏமாற்றிவிட்டால் அப்பொழுதும் இவர் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விடுவார் அதனால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை, வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தி.மு.க வும் அ.தி.மு.கவும் போட்டி போட்டி கொண்டு காத்திருகிறது.
அதைப்போல் சொந்த கட்சியில் இருந்து கொண்டு தனக்கு எதிராக செயல்ப்பட்டு கொண்ட ஆதிருப்தி எம்.எல்.ஏ களை கண்டிக்க முடியாத இவர், நாளை கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தைரியமாக குரல் கொடுப்பாரா...? சிந்திப்பிர்....!

பா.ம.க

ஜாதி பின்னணி கொண்ட கட்சி, இவர்களும் கடந்த காலங்களில் மத்திய அரசிடம் கூட்டணியில் இருந்து கொண்டு வளமான துறைகளை எடுத்து கொண்டு தமிழக மக்களை மட்டுமல்லாமல் தனது சொந்த ஜாதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் ஏமாற்றிய கட்சி,

ராமதாஸைப் பொறுத்தவரை வன்னியர் என்ற போர்வையில், வன்னியர்களை பலிகடாவாக்கி, தானும், தனது குடும்பமும் வாழ வேண்டும் என்று நினைப்பாரே தவிர, வன்னியர்களின் நலன் சார்ந்து எதையும் செய்ய மாட்டார். தற்போது நடைபெறுகிற தேர்தலில் தனது மகன் போட்டியிடும் தருமபுரி தொகுதியில் தான் மட்டுமின்றி, மனைவி, மகள்கள், மருமகளுடன் சென்று வாக்காளர்களிடம் மடிப் பிச்சை கேட்கின்றனர். அதேநேரத் தில் தங்களது கட்சி சார்பில் போட்டி யிடும் இதர வன்னிய வேட்பாளர் களின் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாதது ஏன்?

அதேபோன்று தனது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே பாமக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பின்னர் அத்தொகுதிகளை தேமு திக- விடம் விட்டுக்கொடுத்தார். ஆனால், புதுச்சேரியில் போட்டி யிடும் தனது மச்சான் மகன் அனந்த ராமனை விட்டுக்கொடுக்க முன் வரவில்லையே. இதிலிருந்தே புரிய வில்லையா, ராமதாஸின் சுயநலம் எந்த அளவுக்கு உள்ளது என்று

தி.மு.க.
 

 பழமையான தலைவரை கொண்ட கட்சி, தொடர்ந்து 15 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் உள்ள கட்சி, தமிழகத்திற்கு தங்க நார்சாலை திட்டத்தை கொண்டு வந்தது, இந்திய முழுவதும் ஒரு ரூபாயில் பேசலாம், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி கொடுத்தது போன்ற பல திட்டங்கள் சொல்லலாம். இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பெரும் தோல்வி கொடுத்தார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தரவில்லை. காரணம்

வெளியில் மக்களுக்காக நன்மை செய்வது போல் காட்டி கொண்டாலும் உண்மையில் இவர்கள் செய்த ஊழல்கள் ஏராளம், சம்பந்த பட்ட திட்டங்கள் முலம் மக்கள் அடைந்த பலன்கள் விட மந்திரிகள் அடைந்த பலன்கள் ஏராளம்.

வளமான துறைகளை தேர்ந்து எடுத்து கொண்டு தங்களை மேலும் வளமாகக்கி கொண்டார்கள்.

திரு தயாநிதி மாறன் தொலை தொடர்பு துறையில் பல சாதனைகள் செய்தார் என்பதை மறுக்க முடியாது, அதே போல். BSNL முலம் 250 க்கும் மேற் பட்ட இணைப்புகளை இலவசமாக தனது விட்டில் பெற்று கொண்டு தனது சகோதிரர் தொலைகாட்சி நிறுவனத்திற்கு இலவசமாக பெற்று தந்து, அதன் முலம் bsnl க்கு பெரும் நஷ்டத்தை ஏற்ப்படுத்தி கொடுத்தார், இன்றும் BSNL நஷ்டத்தில் தான் சென்று கொண்டு இருக்கிறது

2G ஊழலை துவக்கி வைத்தவர் இவர் தான். (துவக்கிய காலம் பா.ஜ.க ஆட்சி செய்த காலம்)

சேது சமுத்திர திட்டம் இன்று வரை ஆய்வில் தான் உள்ளது, ஆனால் இது வரைக்கும் இத்திட்டத்திற்கு செய்த செலவு 800 கோடி ரூபாய். இதில் சம்பந்த பட்ட மத்திய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.

2G ஊழலில் குற்றம் சாட்ட ப்பட்ட திரு ராஜா அவர்களுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்க பட்டு இருக்கிறது.

திருமதி கனிமொழி அவர்கள் ராஜ்ய சபா எம்.பி , இப்படி பெரும் ஊழல்களில் சம்பந்த பட்டவர்களுக்கு மிண்டும் மிண்டும் வாய்ப்பு தரும் பெரும்தன்மை கொண்ட கட்சி தி.மு.க. ( ஏன் ராஜா, டி.ஆர் பாலு, கனிமொழி,அழகிரி போன்றவர்கள் தவிர கட்சியில் வேறு யாரும் இல்லையா என்று மக்கள் கேட்க கூடாது).

இலங்கை தமிழர்களுக்காக டெசோ அமைப்பை உருவாக்கி தன்னை தமிழர்களின் காவலானாக காட்டி கொண்டாலும், அவர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் இனவெறி தாக்குதல் நடத்த நேரடியாக (இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயற்சி அளித்து ) உதவி செய்தார், மேலும் மத்திய அரசு கொடுத்த ஆதரவை வெளியில் எதிர்ப்பது போல் காட்டி கொண்டாலும் திரை மறையாக முழு ஒத்துழைப்பை கொடுத்தார்.

தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் ஏதுவும் துவங்க கூடாது என்பதற்காக ரிசேர்வ் வங்கி முலம் தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு எந்த கடனும் தர கூடாது என்று எல்லா வங்கிகளுக்கு உத்தரவு பெற்று கொடுத்தவர் இவர் தான்.

மத்தியில் தி.மு.க கூட்டணியில் ஒரு ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக மக்கள் இன்னும் இரண்டு வருடம் எந்த நற்பயனையும் பெற முடியாது.....

அ.தி.மு.க

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, மாற்றம் விரும்பிய மக்கள் ஜெயலலிதா எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக அதரவு அளித்து, அவர்களை முதல்வராக ஆக்கினார்கள், உள்ளாட்சி தேர்தலிலலும் எங்களை வாய்ப்பு அளித்தால் உங்கள் சேவை மேலும் திரிதமாக செய்வோம் என்றார்கள், அதையும் மக்கள் செய்தார்கள். கடைசியாக நாங்கள் சொல்லும் நபர் பிரதமர் ஆனால் தமிழகம் மிருளும் என்கிறார்கள். மக்கள் இம்முறையும் இவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது சந்தேகம் தான்.

இந்த ஆட்சி மேல் மக்கள் கூறும் குறைகள்.

1) மின் வெட்டிக்கு நிரந்தர தீர்வு இதுவரை காணாதது... இதனால் சிறு முதலிட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள் , பலர் அவர்கள் தொழில்கள் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தார்கள்.

2) மத்திய அரசிடம் எதிர்மறை போக்கால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களில் தொய்வு.

3) குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு இதுவரை காணாதது......

4) மத்திய அரசு அளிக்கும் நிதி அனைத்தையும் இலவசங்களுக்கு செலவு செய்வது(இலவசங்களுக்கு செலவு செய்யாமல் புதிய மின் திட்டங்கள் துவக்கலாம்)....

இவர்கள் கூட்டணியில் மத்திய ஆட்சி அமைந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்கள் நிறைய கிடைக்கலாம். தமிழகம் முன்னேற பாதைகளுக்கு செல்லலாம். அப்படி இல்லையென்றால் நேற்று தி.மு.க விற்கு ஏற்பட்ட கதி தான். நாளை அதி.மு.க விற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில.....)

1) முதலில் ஊழலில்லா அரசு...
2) பெட்ரோல்/டீசல் விலைய அரசை நிர்ணயம் செய்ய வேண்டும்.
3) நாட்டில் விவசாயம் வளர சீரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
4) அனைவருக்கும் தரமான கல்வி.....
5) வெளிநாட்டில் தயாரிக்க படும் பொருட்கள் விட உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு சலுகைகள் தர வேண்டும்.