Saturday, March 11, 2017

Abdul Kalam Quotes


Failure of Irom Sharmila is the failure of the people ....

இந்த நாடு மற்றும் தன் மாநிலம் நாசமா போனால் எனக்கென, எவன் செத்தால் எனக்கென்ன......., எனக்கு என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என இவர் 16 வருடங்கள் முன் நினைத்து இருந்தால், இன்று வாழ்க்கை தொலைத்து எப்படி ஒரு தோல்வி அடைந்து இருந்து இருக்க மாட்டார்.....

எந்த மக்களுக்காக இவர் தொடர்ந்து 16 வருடங்களாக உண்ணா விரதமிருந்து போராடினாரோ, அவர்களே அவரை படுத்தோல்வி அடைய வைத்து இருக்கிறார்கள்..... 

அரசியலில் இது புதிதல்ல.....  திருடனையும், கொள்ளைக்காரனை தான் மக்கள் விரும்புகிறார்கள்...இவர்கள் மாறப்போவது .இல்லை..... 

வெறும் அரசியல்வாதிகளை குறை கூறி பயனில்லை.... கெட்டவர்கள் என தெரிந்தும்  அவர்களுக்கே வாக்களிக்கும் மக்கள் தான் மூடர்கள்....

என்று மக்கள் சாதி, மதம், பணம்,கட்சி பாகுபடியின்றி தேர்தலில் போட்டியிடும் நபரின் முன்னாள் செயல்பாடுகள்,  வளர்ச்சிக்கான திட்டமிடல், தொலை நோக்கு  திட்டங்கள்  என ஆராய்ந்து ஒரு வேட்பாளரை தேர்ந்தேடுகிறார்களோ..... அன்று தான் உண்மையில் ஒரு நல்ல அரசு வரும், ஒரு நல்ல சமுதாயம் மலரும் இந்தியாவும் முன்னேறும்........ 

அது வரை மக்களுக்காக உழைப்பவர்கள் தோல்வி அடைவது ஒன்றும் பெரிய விஷயமில்லை......

#நன்றிகெட்டமக்கள், #இரோம்_ஷர்மிளா  

-பிரவின் சுந்தர் பு.வெ.