Thursday, January 6, 2011

Philosophy of Life

ஒரு கல்லூரியில் வாழ்க்கைத் தத்துவ வகுப்பு.

பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

பின்னர் பேராசிரியர் ஜாடிக்குள் சிறு சிறு கற்கண்டுகளைப் போட்டார்.. வெல்லக்கட்டிகளின் இடைவெளியில் கற்கண்டுகள் புகுந்து இடத்தை அடைத்துக்கொண்டன.. பின்னும் வினவினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

அதன் பின்னர், சீனியை ஜாடிக்குள் விட்டார்.. மென் துகள்கள் வெல்லக்கட்டிகளுக்கும், கற்கண்டுகளுக்கும் இடையில் இருந்த வெளியை நிரப்பின.. மீண்டும் கேள்வி எழுப்பினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

இம்முறை, மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.. "ஆம் அய்யா..!"

புன்னகைத்த பேராசிரியர், இம்முறை ஜாடிக்குள் இரண்டு கோப்பை பாலை ஊற்றி, "இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?" என்று வினா எழுப்பினார்..

மாணவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. எவராலும் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.. ஏற்கனவே சிலமுறை கூறி, தவறாகிப் போய்விட்டதல்லவா..?

பேராசிரியர் இப்போது சொன்னார்..

மாணவச் செல்வங்களே.. இதுதான் வாழ்க்கை.. வெல்லக்கட்டிகள் உங்கள் வாழ்வின் மகத்தான விடயங்களை குறிப்பவை.. கடவுள், பெற்றோர், கல்வி, உறவுமுறை, நற்பழக்கங்கள் போன்றவை..

கற்கண்டுகள், உங்கள் வேலை, இல்லம், கார் போன்ற முக்கியமான அம்சங்களைக் குறிப்பவை.

சீனி, மற்ற சிறு சிறு விடயங்களின் மாதிரி வடிவம்.. திரைப்படம், கேளிக்கை, உல்லாசப்பயணங்கள் போன்றவை.

உங்கள் வாழ்வில் சீனிக்கே முன்னுரிமை கொடுத்தால், வெல்லக்கட்டிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.. கற்கண்டுகளால் உங்கள் வாழ்வை இட்டு நிரப்ப வகையில்லாமல் போய்விடும்..

எனவே எதை முதலில் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வாழ்வை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் திட்டமிடுங்கள்..!

No comments:

Post a Comment