Friday, November 9, 2012

calculatingkuligan


காலண்டரை பார்க்காமலே குளிகன்  அறியும் வழி


சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட நேரமே சரியான பகல் பொழுது, இதையே பஞ்சாங்கத்தில் அகஸ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பகல் பொழுதை (அகஸ்) எட்டாக பிரித்து அதில் வரும் பாகத்தை கிழமை அடிபடையில் குளிகை கணக்கிட வேண்டும்.

தினசரி நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ள
குளிகை காலம் பொதுவாக ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டு  இருக்கும், இதை அப்படியே பின்பற்றுவது சரியல்ல.பொதுவாக குளிகை காலம் ஆறு மணி சூரிய உதயத்தையும் மாலை ஆறு மணி சூரிய அஸ்தமனத்தையும் வைத்து கணக்கிடப்பட்டு வழக்கில் உள்ளது. இந்த குளிகை காலம் அந்தந்த ஊரின் அகஸ் (பகல் பிரமாணம்) மற்றும் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பஞ்சாங்கங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குளிகன் காலம் கணக்கிடுவது மிக மிக சுலபம்

நாம் எந்த கிழமைக்கு கணக்கிட வேண்டுமோ அந்த கிழமையில் இருந்து சனி கிழமை எத்தனை நாட்கள் வருகிறதோ அந்த பாகம் தான் குளிகன் காலம்.
எடுத்துக்காட்டாக :   திங்கள் கிழமை குளிகன் கணக்கிட வேண்டும் என்றால் திங்கள் தொடங்கி சனி வர  6 நாட்கள் ஆகும்அப்பொழுது  6 வது பாகத்தில் குளிகன்  காலம் வரும்

இதன் முலம் குளிகன்  ஒரு  குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும்இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எடுத்துக்காட்டாக : வரும்  திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில்  சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்
அகசு = 6.15 – 6.39 = 12.24 /நி(பகல் பொழுது)
12.24
நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்
744
எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று குளிகன்   6 வது பாகத்தில் உள்ளது, எனவே முதலில் 5வது பாகத்திற்கான முடிவை அறிய

5*   93 நிமிடங்கள் = 7 மணி 45  நிமிடங்கள் 
முடிவு நேரம் 6 * 93 நிமிடங்கள் = 9 மணி 18 நிமிடங்கள்
இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி  வருவது அன்றைய குளிகன்  காலமாகும்
அன்றைய சூரிய உதயம் 6.15 + 7.45 = 14. 00 முதல்
6.15 + 09.18   =15.33 வரை ஆகும்.
முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று குளிகன்  14. 00 முதல்15.33 வரை ஆகும்.

yemakandam

காலண்டரை பார்க்காமலே எம கண்டம்  அறியும் வழி


பொதுவாகவே ராகு காலம், யமகண்டம் சமயங்களில் எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யலாகாது   என்பது ஹிந்து சாஸ்திரப்படி நம்ப கூடிய ஐதிகம்இந்த கட்டுரையில் எம கண்டம் எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம்..

சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட நேரமே சரியான பகல் பொழுது, இதையே பஞ்சாங்கத்தில் அகஸ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பகல் பொழுதை (அகஸ்) எட்டாக பிரித்து அதில் வரும் பாகத்தை கிழமை அடிபடையில் எமகண்டம்  கணக்கிட வேண்டும்.

தினசரி நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ள
எமகண்டம்  பொதுவாக ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டு  இருக்கும், இதை அப்படியே பின்பற்றுவது சரியல்ல.பொதுவாக எமகண்டம்  ஆறு மணி சூரிய உதயத்தையும் மாலை ஆறு மணி சூரிய அஸ்தமனத்தையும் வைத்து கணக்கிடப்பட்டு வழக்கில் உள்ளது. இந்த காலம் அந்தந்த ஊரின் அகஸ் (பகல் பிரமாணம்) மற்றும் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பஞ்சாங்கங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்பொழுது
எமகண்டம் எப்படி கணக்கிடுவது என்பதை  பற்றி பார்ப்போம் 
 
எமகண்டம் என்பது
ஞாயிறு அன்று  -    ஐந்தாவது பாகத்திலும்,
திங்கள் -   நான்காவது   பாகத்திலும்
செவ்வாய்- மூன்றாவது  பாகத்திலும்
புதன் - இரண்டாவது பாகத்திலும்
வியாழன் - ஒன்றாவது   பாகத்திலும்
வெள்ளி - ஏழாவது பாகத்திலும்
சனிஆறாவது பாகத்திலும்  வரும்

இதை நினைவில் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய முறை

எமகண்டத்தை கணக்கிட கிழ் வரும் வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வாக்கியம்

"விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் த்தியமும் வெளிப்படுத்தும்".

மேற்படி வாக்கியத்திலுள்ள சொற்களின் முதல் எழுத்து அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையைக் குறிக்கும்.

இதன்ப்படி வியாழன்- ஒன்றாவது பாகத்திலும், புதன் - இரண்டாவது பாகத்திலும், செவ்வாய் மூன்றாவது பாகத்திலும், திங்கள் நான்காவது பாகத்திலும், ஞாயிறு- ஐந்தாவது பாகத்திலும்,    சனி- ஆறாவது பாகத்திலும், வெள்ளி- ஏழாவது பாகத்திலும் வரும்  என நினைவில் கொள்ளலாம்.

இதன் முலம் எமகண்டம்  ஒரு  குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும்இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எடுத்துக்காட்டாக : வரும்  திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில்  சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்
அகசு = 6.15 – 6.39 = 12.24 /நி(பகல் பொழுது)
12.24
நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்
744
எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.
திங்கள் அன்று எமகண்டம்  4 வது பாகத்தில் உள்ளது, எனவே முதலில் 3வது பாகத்திற்கான முடிவை அறிய
3*   93 நிமிடங்கள் = 4 மணி 39  நிமிடங்கள் 
முடிவு நேரம் 4 * 93 நிமிடங்கள் = 6 மணி 12 நிமிடங்கள்
இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி  வருவது அன்றைய எமகண்டம் காலமாகும்
 
அன்றைய சூரிய உதயம் 6.15 + 4.39 = 10. 54 முதல்
6.15 + 06.12   =12.27 வரை ஆகும்.
முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று எமகண்டம் 10. 54 முதல்12.27 வரை ஆகும்.

calculateragukalam

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

 நன்றி : வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

பொதுவாகவே ராகு காலம், யமகண்டம் சமயங்களில் எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யலாகாது   என்பது ஹிந்து சாஸ்திரப்படி நம்ப கூடிய ஐதிகம்இந்த கட்டுரையில் ராகு காலம்  மற்றும் எம கண்டம் எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம்.....

சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட நேரமே சரியான பகல் பொழுது, இதையே பஞ்சாங்கத்தில் அகஸ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பகல் பொழுதை (அகஸ்) எட்டாக பிரித்து அதில் வரும் பாகத்தை கிழமை அடிபடையில் ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை கணக்கிட வேண்டும்.

தினசரி நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ள இந்த காலங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டு  இருக்கும், இதை அப்படியே பின்பற்றுவது சரியல்ல.பொதுவாக இந்த காலங்கள் ஆறு மணி சூரிய உதயத்தையும் மாலை ஆறு மணி சூரிய அஸ்தமனத்தையும் வைத்து கணக்கிடப்பட்டு வழக்கில் உள்ளது. இந்த காலங்கள் அந்தந்த ஊரின் அகஸ் (பகல் பிரமாணம்) மற்றும் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பஞ்சாங்கங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்பொழுது ராகு காலம் எப்படி கணக்கிடுவது என்பதை  பற்றி பார்ப்போம் 

 
ராகு காலம் என்பது

 
ஞாயிறு  அன்று   எட்டாவது பாகத்திலும்,
திங்கள்இரண்டாவது  பாகத்திலும்
செவ்வாய்- ஏழாவது பாகத்திலும்
புதன் - ஐந்தாவது பாகத்திலும்
வியாழன் - ஆறாவது பாகத்திலும்
வெள்ளி - நான்காவது பாகத்திலும்
சனி - மூன்றாவது பாகத்திலும்  வரும்,

இதை நினைவில் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய முறை,

ராகு காலத்தை கணக்கிட கிழ் வரும் வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வாக்கியம். 

திருவிழா மயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்லுதல் ஞாயமா?

மேற்படி வாக்கியத்திலுள்ள சொற்களின் முதல் எழுத்து அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையைக் குறிக்கும்.

இதன்ப்படி திங்கள் - இரண்டாவது பாகத்திலும், சனி மூன்றாவது பாகத்திலும், வெள்ளி நான்காவது பாகத்திலும், புதன் ஐந்தாவது பாகத்திலும், வியாழன் ஆறாவது பாகத்திலும், செவ்வாய் ஏழாவது பாகத்திலும், ஞாயிறு  எட்டாவது பாகத்திலும் வரும்  என நினைவில் கொள்ளலாம்.

இதன் முலம் ராகு காலம் ஒரு  குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும்,  இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எ.கா: வரும்  திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில்  சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்
அகசு = 6.15 – 6.39 = 12.24 /நி(பகல் பொழுது)
12.24
நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்
744
எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று ராகு காலம் 2 வது பாகத்தில் உள்ளது எனவே முதலில் 1 வது பாகத்திற்கான முடிவை அறிய

1 *   93 நிமிடங்கள் = 1 மணி 33 நிமிடங்கள் 
முடிவு நேரம் 2 * 93 நிமிடங்கள் = 3 மணி 6 நிமிடங்கள்
இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி  வருவது அன்றைய ராகு காலமாகும்
அன்றைய சூரிய உதயம் 6.15 + 1.33 = 7. 48 முதல்
6.15 + 3.06  =9.21 வரை ஆகும்.
முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று ராகு காலம் 7. 48 முதல் 9.21 வரை ஆகும்.