Showing posts with label குளிகை காலம். Show all posts
Showing posts with label குளிகை காலம். Show all posts

Friday, November 9, 2012

calculatingkuligan


காலண்டரை பார்க்காமலே குளிகன்  அறியும் வழி


சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட நேரமே சரியான பகல் பொழுது, இதையே பஞ்சாங்கத்தில் அகஸ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பகல் பொழுதை (அகஸ்) எட்டாக பிரித்து அதில் வரும் பாகத்தை கிழமை அடிபடையில் குளிகை கணக்கிட வேண்டும்.

தினசரி நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ள
குளிகை காலம் பொதுவாக ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டு  இருக்கும், இதை அப்படியே பின்பற்றுவது சரியல்ல.பொதுவாக குளிகை காலம் ஆறு மணி சூரிய உதயத்தையும் மாலை ஆறு மணி சூரிய அஸ்தமனத்தையும் வைத்து கணக்கிடப்பட்டு வழக்கில் உள்ளது. இந்த குளிகை காலம் அந்தந்த ஊரின் அகஸ் (பகல் பிரமாணம்) மற்றும் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பஞ்சாங்கங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குளிகன் காலம் கணக்கிடுவது மிக மிக சுலபம்

நாம் எந்த கிழமைக்கு கணக்கிட வேண்டுமோ அந்த கிழமையில் இருந்து சனி கிழமை எத்தனை நாட்கள் வருகிறதோ அந்த பாகம் தான் குளிகன் காலம்.
எடுத்துக்காட்டாக :   திங்கள் கிழமை குளிகன் கணக்கிட வேண்டும் என்றால் திங்கள் தொடங்கி சனி வர  6 நாட்கள் ஆகும்அப்பொழுது  6 வது பாகத்தில் குளிகன்  காலம் வரும்

இதன் முலம் குளிகன்  ஒரு  குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும்இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எடுத்துக்காட்டாக : வரும்  திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில்  சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்
அகசு = 6.15 – 6.39 = 12.24 /நி(பகல் பொழுது)
12.24
நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்
744
எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று குளிகன்   6 வது பாகத்தில் உள்ளது, எனவே முதலில் 5வது பாகத்திற்கான முடிவை அறிய

5*   93 நிமிடங்கள் = 7 மணி 45  நிமிடங்கள் 
முடிவு நேரம் 6 * 93 நிமிடங்கள் = 9 மணி 18 நிமிடங்கள்
இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி  வருவது அன்றைய குளிகன்  காலமாகும்
அன்றைய சூரிய உதயம் 6.15 + 7.45 = 14. 00 முதல்
6.15 + 09.18   =15.33 வரை ஆகும்.
முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று குளிகன்  14. 00 முதல்15.33 வரை ஆகும்.