Sunday, June 28, 2015

THE SECRET OF WORK

செயல்புரிவதன் ரகசியம்

அன்பு என்னும் வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடுபோல் வேலை செய்வான் . ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால் நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையாகாது. உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் செய்யப் படுகின்ற வேலைகளும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை. இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் . அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை. உண்மை இருப்பு, உண்மை அறிவு, உண்மை அன்பு மூன்றும் ஒன்றோடு ஒன்று நிரந்தரமாக இணைந்தவை. இந்த மூன்றும் ஒன்றிலேயே உள்ளன. இதில் எங்கே ஒன்று உள்ளதோ அங்கு மற்றவை இருந்தே தீரும். இவை இரண்டற்ற ஒன்றேயான ஸத்சித் ஆனந்தப் பொருளின் மூன்று நிலைகள். அந்த ஒரு பொருளே நடைமுறை நிலைக்கு வரும்போது, இருப்பு அல்லது ஸத் என்பதை நாம் உலகமாகக் காண்கிறோம். அறிவு அல்லது சித் உலகப் பொருட்களைப் பற்றிய அறிவாக மாறுகிறது; ஆனந்தம் மனித இதயம் அறிந்த உண்மையன்பு அணைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே உண்மையன்பு என்பது காட்டுபவரிடமோ காட்டப்படுபவரிடமே வேதனையை உண்டாக்கும் வண்ணம் ஒரு போதும் செயல்படாது.

ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவள் முழுக்கமுழுக்கத் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கிறான் அவளுடைய நடத்தை ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் கண்காணிக்கிறான். அவள் அவனது அருகிலேயே அமர வேண்டும், அவனது அருகிலேயே நிற்க வேண்டும், உண்பதும் போவதும் வருவதும் எல்லாமே அவனுடைய கட்டளைப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவளது அடிமையாகி விட்ட அவன், அவளும் தன் அடிமையாக வேண்டும்.என்ற ஆசைப்படுகிறான் இது அன்பு அல்ல. இது அடிமைகளின் பக்குவப்படாத ஒருவிதப் பற்று; அன்பு போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது, அவ்வளவுதான். இது அன்பு அல்ல, ஏனெனில் இது துன்பத்தைத் தருகிறது. இவன் விரும்பியதை அந்தப் பெண் செய்யாவிட்டால் அது இவனை வேதனைக்கு உள்ளாக்குகிறது. அன்பிற்கு ஒருபோதும் வேதனை தரும் எதிர்விளைவு இருக்காது. அன்பு ஆனந்தத்தை மட்டுமே எதிர்விளைவாகத் தருகிறது. ஆனந்தத்தைத் தராத அன்பு அன்பல்ல. அது வேறு ஏதோ வொன்றைத் தவறாக அன்பென்று நினைப்பதாகும். வேதனை, பொறாமை சுயநல உணர்ச்சிகள் எவையும் எதிர்விளைவாக உண்டாகாவண்ணம் உங்கள் கணவன், மனைவி, மக்கள், உலகம் பிரபஞ்சம் அனைத்தையும் நேசிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் பற்றின்றி இருக்கத் தகுந்த நிலையில் இருக்கிறீர்கள்.

அர்ஜுனா என்னைப் பார் நான் செயல்புரிவதை ஒரு கணம் நிறுத்தினாலும் இந்தப் பிரபஞ்சம் அழிந்து போகும். செயல்புரிந்து நான் அடைவதற்கு எதுவும் இல்லை. நானே இறைவன். பின் நான் ஏன் வேலை செய்யவேண்டும் ? ஏனெனில் நான் உலகை நேசிக்கிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இறைவன் பற்றின்றி இருக்கிறார். ஏனென்றால் அவர் அன்பு செய்கிறார். உண்மையன்பு நம்மைப் பற்றற்றவர்கள் ஆக்குகிறது. எங்கெல்லாம் பற்று இருக்கிறதோ, உலகப் பொருட்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதோ, அங்கே இருப்பதெல்லாம் வெறும் ஜடப் பொருளணுக்களின் இரண்டு தொகுதிகளுக்கிடையே உள்ள பௌதீகக் கவர்ச்சியே அது; இரண்டு உடம்புகளை நெருக்கமாக, மிக நெருக்கமாக எப்போதும் ஈர்த்துக் கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்று அது. போதிய அளவு அந்த இரண்டு உடம்புகளும் நெருங்க முடியாவிட்டால் வேதனை விளைகிறது. உண்மையன்பு ஒரு போதும் பௌதீகக் கவர்ச்சியைச் சார்ந்திருப்பதில்லை. அத்தகைய அன்பு கொண்டவர்கள் ஆயிரம் மைல்கள் இடைவெளியில் இருக்கலாம். ஆனால் அவர்களது அன்பு ஒருபோலவே இருக்கும் அது அழிவதில்லை, எந்த வேதனையான எதிர்விளைவையும் உண்டாக்குவதில்லை.

இத்தகைய பற்றின்மை ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அடையக்கூடிய ஒன்று இந்த நிலையை அடையும் போது அன்பின் லட்சியத்தை அடைந்து விடுகிறோம்;சுதந்திரர்களாகி விடுகிறோம்; இயற்கையின் கட்டுக்கள் நம்மிடமிருந்து விலகிவிடுகின்றன. உலகம் உண்மையாக எப்படி இருக்கிறதோ அப்படியே நாம் காண்போம். அதன் பின் இயற்கை நம்மை எந்தச் சங்கிலியாலும் கட்டுவதில்லை. நாம் முழுக்க முழுக்கச் சுதந்திரர்களாகி விடுவோம்; செயல்களின் பலன்களைப் பொருட்படுத்த மாட்டோம். அந்தப் பலன்கள் என்ன என்பதைப்பற்றி யாருக்குக் கவலை!

நீ உன் குழந்தைகளுக்குத் தருபவற்றிற்கு எதையாவது திருப்பிக் கேட்பாயா? உன் குழந்தைகளுக்காக உழைப்பது உனது கடமை, அதோடு விஷயம் முடிந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, நகருக்கோ, நாட்டிற்கோ நீங்கள் எதையாவது செய்யும்போதும் இதே மனநிலையைக் கைக்கொள்ளுங்கள்; அதாவது எதையும் பிரதியாக எதிர்பார்க்காமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்வதுபோலவே செய்யுங்கள். பிரதி பலனைப்பற்றி எந்த எண்ணமும் இல்லாமல், செய்கின்ற அனைத்தையும் உலக வேள்வியில் ஓர் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கின்ற நிலையில் உங்களால் எப்போதும் இருக்க முடியுமானால், நீங்கள் செய்கின்ற வேலை உங்களைப் பற்றுக்கொள்ளச் செய்யாது. பிரதியாக எதையாவது எதர்பார்க்கும்போதுதான் பற்றுவருகிறது. அடிமைகளைப்போல் வேலை செய்தால் சுயநலமும் பற்றுமே உண்டாகிறது. மனத்தின் எஜமானர்களாகச் செயல்புரிந்தாலோ பற்றின்மையால் வரும் ஆனந்தம் விளைகிறது.

-------------------------------------------***************------------------------------
 
The word "love" is very difficult to understand; love never comes until there is freedom. There is no true love possible in the slave. If you buy a slave and tie him down in chains and make him work for you, he will work like a drudge, but there will be no love in him. So when we ourselves work for the things of the world as slaves, there can be no love in us, and our work is not true work. This is true of work done for relatives and friends, and is true of work done for our own selves. Selfish work is slave's work; and here is a test. Every act of love brings happiness; there is no act of love which does not bring peace and blessedness as its reaction. Real existence, real knowledge, and real love are eternally connected with one another, the three in one: where one of them is, the others also must be; they are the three aspects of the One without a second — the Existence - Knowledge - Bliss. When that existence becomes relative, we see it as the world; that knowledge becomes in its turn modified into the knowledge of the things of the world; and that bliss forms the foundation of all true love known to the heart of man. Therefore true love can never react so as to cause pain either to the lover or to the beloved.

 Suppose a man loves a woman; he wishes to have her all to himself and feels extremely jealous about her every movement; he wants her to sit near him, to stand near him, and to eat and move at his bidding. He is a slave to her and wishes to have her as his slave. That is not love; it is a kind of morbid affection of the slave, insinuating itself as love. It cannot be love, because it is painful; if she does not do what he wants, it brings him pain. With love there is no painful reaction; love only brings a reaction of bliss; if it does not, it is not love; it is mistaking something else for love. When you have succeeded in loving your husband, your wife, your children, the whole world, the universe, in such a manner that there is no reaction of pain or jealousy, no selfish feeling, then you are in a fit state to be unattached. 

Krishna says, "Look at Me, Arjuna! If I stop from work for one moment, the whole universe will die. I have nothing to gain from work; I am the one Lord, but why do I work? Because I love the world." God is unattached because He loves; that real love makes us unattached. Wherever there is attachment, the clinging to the things of the world, you must know that it is all physical attraction between sets of particles of matter — something that attracts two bodies nearer and nearer all the time and, if they cannot get near enough, produces pain; but where there is real love, it does not rest on physical attachment at all. Such lovers may be a thousand miles away from one another, but their love will be all the same; it does not die, and will never produce any painful reaction.

To attain this unattachment is almost a life-work, but as soon as we have reached this point, we have attained the goal of love and become free; the bondage of nature falls from us, and we see nature as she is; she forges no more chains for us; we stand entirely free and take not the results of work into consideration; who then cares for what the results may be?

Do you ask anything from your children in return for what you have given them? It is your duty to work for them, and there the matter ends. In whatever you do for a particular person, a city, or a state, assume the same attitude towards it as you have towards your children — expect nothing in return. If you can invariably take the position of a giver, in which everything given by you is a free offering to the world, without any thought of return, then will your work bring you no attachment. Attachment comes only where we expect a return.

God is one

ஒரு குட்டி கதை..



ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழயில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன. வழயில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில மாதங்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்து ஊரின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் கூடுகட்டி தங்கின.

அப்போது கீழே அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை புறாக்கள் கண்டன. வேறு வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் சண்டை போட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு குஞ்சி புறா தாய் புறாவிடம் கேட்டது ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று.

அதற்கு அந்த தாய் புறா சொன்னது நாம் இங்கு இருந்தபோதும் புறா தான், சர்ச் போன போதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறாதான் , ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் "இந்து". சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்துவன்", மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது.

குழம்பிய குட்டி புறா அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் என்றது. அதற்க்கு தாய் புறா இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கிழே இருக்கிறார்கள் என்றது.

Monday, June 1, 2015

EACH IS GREAT IN HIS OWN PLACE



கர்மயோகம் - அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!



இறைவனை வழிபடுவதற்காக உலகத்தைத் துறந்து செல்கின்ற ஒருவன் உலகத்தில் வாழ்ந்து உலகின் நன்மைக்காகச் செயல் புரிந்துகொண்டிருப்போர் எல்லாம் இறைவனை வழிபடாதவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுபோலவே குடும்பத்தில் மனைவி மக்களோடு வாழும் இல்லறத்தான் உலகைத் துறந்து வாழும் துறவியரைப் பயனற்ற நாடோடிகள் என்று கருதக்கூடாது. அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் பெரியவரே இந்தக் கருத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.

ஓர் அரசன் தன் நாட்டிற்கு வரும் துறவிகளை எல்லாம் உயர்ந்தவன் யார்? உலகைத் துறந்து துறவியானவனா? உலகில் வாழ்ந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா? என்று கேட்பது வழக்கம் அறிவாளிகள் பலர் அந்தச் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வந்தார்கள் சிலர் துறவிகளே சிறந்தவர்கள் என்றனர். அரசன் அவர்களின் கூற்றை நிரூபிக்கச் சொன்னான் அவர்களால் முடியாமல் போகவே அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டான் வேறு சிலர் வந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானே சிறந்தவன் என்று கூறினர். அதையும் அரசன் நிரூபிக்கச்சொன்னான் அவர்கள் நிரூபிக்காதபோது அவர்களையும் இல்லறத்தார்களாக வாழும்படிக் கட்டளையிட்டான்.

கடைசியாக ஒரு நாள் இளம்துறவி ஒருவர் அரசனிடம் வந்தார். அவரிடமும் அரசன் தன் கேள்வியைக் கேட்டான் அதற்கு அந்தத் துறவி மன்னா அவரவர் நிலையில் இருக்கும்போது இருசாராரும் சம அளவில் உயர்ந்தவர்களே என்றார் அரசன் அதை நிரூபியுங்கள் என்றான் அதற்கு அந்த இளம் துறவி நான் அதை நிரூபிக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ வேண்டும் அப்போது நான் கூறியதை நிரூபிக்க வசதியாக இருக்கும் என்றார் அரசன் அதனை ஏற்றுக்கொண்டு துறவியுடன் புறப்பட்டான் இருவரும் அந்த நாட்டைக் கடந்து மேலும் பல நாடுகளைக் கடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள் அப்போது அந்த நாட்டின் தலைநகரில் ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் வாத்திய இசையும் பாட்டும் ஆரவாரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்டோரா போடுபவனின் குரலும் இடையில் கேட்டது மக்கள் கண்ணைப் பறிக்கும் ஆடைகளோடு கூடியிருந்தனர். அவர்கள் முன்னால் அவன் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மன்னனும் துறவியும் அங்கே சென்றனர் அந்த நாட்டு மன்னனின் மகளுடைய சுயம்வரம் நடைபெறப் போகிறது என்பதையே அவன் அங்கே அறிவித்துக் கொண்டிருந்தான்.

சுயம்வரத்தில் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில் பண்டைய வழக்கமாக இருந்தது. தனக்குக் கணவனாக வரப்போகின்றவன் இப்படியிருக்க வேண்டும் என்று ஒவ்வோர் அரச குமாரியும் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாள் சிலருக்கு ஈடற்ற அழகன் வேண்டும், சிலருக்கு அறிவில் சிறந்தவன் வேண்டும், சிலருக்குப் பெரிய செல்வந்தன் வேண்டும். அண்டை அயல்நாடுகளின் ராஜகுமாரர்கள் எல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்கு வருவார்கள் சிலவேளைகளில் அவர்கள் தங்களுடன் ஓர் அறிவிப்பாளனையும் அழைத்து வருவார்கள் அவன் அந்த ராஜகுமாரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அந்த இளவரசி அவனை மணந்து கொண்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதை அறிவிப்பான் ராஜகுமாரி அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அமர்ந்தபடி ஒவ்வொரு ராஜகுமாரனிடமும் வந்து அவனைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்பாள் திருப்தி அடையாவிட்டால் முன்னே செல்லுங்கள் என்று பல்லக்கு சுமப்பவர்களிடம் கூறுவாள் நிராகரிக்கப்பட்ட ராஜகுமாரர்களைப் பின்னர் பார்ப்பதே இல்லை தனக்குப் பிடித்தவனைக் கண்டுகொண்டால் உடனே அவன் கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவிப்பாள் அவன் அவளை மணப்பான்.

நமது துறவியும் மன்னனும் சென்ற அந்த நாட்டின் இளவரசிக்கும் இந்தச் சுயம்வர விழா தான் நடந்து கொண்டிருந்தது. அவள் உலகிலேயே பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள் அவளை மணந்து கொள்பவன் அவளுடைய தந்தைக்குப் பிறகு அந்த நாட்டின் அரசன் ஆவான் அவள் பேரழகன் ஒருவனை மணக்க விரும்பினாள் இதற்கு முன்பும் எத்தனையோ சுயம்வரங்கள் நடந்தன அவளுக்கு யாரையும் பிடிக்க வில்லை அவளால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை இந்தச் சுயம்வரம் முன் நடந்த எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாக இருந்தது. முன்பை விட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர் ராஜகுமாரி பல்லக்கில் அமர்ந்து ஒவ்வொருவராகப் பார்த்தாள் ஆனால் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டாள் இந்த முறையும் சுயம்வரம் தோல்வி தானோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.

அப்போது அந்த மண்டபத்திற்குள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும் அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது சூரியனே வானத்தை விட்டுப் பூமியில் வந்ததுபோல் இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று அவர் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே வந்த இளவரசி அவரது அழகில் தன்னைப் பறிகொடுத்து கையிலிருந்த மாலையை அவர் கழுத்தில் சூட்டினாள் இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துளவி அதிர்ச்சியுற்றவராக என்ன முட்டாள்தனம் இது ? நான் ஒரு துறவி எனக்னென்ன திருமணம் என்று கூறிமாலையைக் கழற்றிக் கீழே எறிந்தார். இதைக் கண்ட அந்த நாட்டு அரசர் இந்தத் துறவி ஏழையாக இருப்பதால் இளவரசியை மணந்துகொள்ள பயப்படுகிறான் என்று நினைத்து என் மகளை மணந்து கொண்டதும் இந்த நாட்டில் பாதி உனக்குச் சொந்தமாகும் நான் இறந்த பிறகு முழு நாடும் உனக்கே என்று கூறி அந்த மாலையை எடுத்து மறுபடியும் அந்தத் துறவியின் கழுத்தில் போட்டான் துறவியோ மீண்டும் மாலையைக் கழற்றிக் கீழே வீசியெறிந்து மடத்தனம் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் இதற்குள் இளவரசி அந்தத் துறவியிடம் அளவற்ற காதல் கொண்டுவிட்டாள் ஒன்று நான் அவரை மணந்து கொள்ள வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று கூறியபடியே அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவர் பின்னாலேயே சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் துறவி தான் அழைத்து வந்த அரசனைப் பார்த்து மன்னா! நாம் அந்த இருவரையும் தொடர்ந்து செல்வோம் என்று கூறினார். பின்னர் இருவரும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.

இளவரசியை மணக்க மறுத்த இளந்துறவி நகரத்தை விட்டுப் பல மைல் தொலைவு நடந்துபோய் விட்டார். ஒரு காட்டின் அருகே வந்ததும் அதற்குள் நுழைந்தார் தொடர்ந்து வந்த இளவரசியும் காட்டிற்குள் நுழைந்தாள். நமது துறவியும் அரசனும் பின்தொடர்ந்தனர். அந்த இளந்துறவிக்குக் காடும் குறுகிய பாதைகளும் அத்துபடியாக இருந்தது சட்டென்று அவற்றுள் ஏதோ ஒருவழியில் நுழைந்து மறைந்துவிட்டார் இளவரசியால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை காடு முழுவதும் அலைந்து திரிந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெளியேறவும் வழியறியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள் அப்போது நமது துறவியும் அரசனும் அவளிடம் சென்று அழாதே நீ வெளியே செல்ல நாங்கள் வழி காட்டுகிறோம் இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் வழி காண்பது சிரமம் இதோ பெரிய மரம் ஒன்று உள்ளது இதனடியில் இன்றிரவு தங்கலாம் காலையில் உனக்கு வழி காட்டுகிறோம் என்றனர்.

அந்த மரத்தில் ஒரு குருவியும் அதன் மனைவியும் மூன்று குஞ்சுகளும் ஒரு கூட்டில் வாழ்ந்து வந்தன அந்தச் சின்னஞ்சிறு குருவி மரத்திற்குக் கீழே வந்து தங்கியுள்ள மூவரையும் பார்த்துத் தன் மனைவியிடம் என் அன்பே இப்போது என்ன செய்வது நம்வீட்டில் சில விருந்தினர் வந்துள்ளனர் இது குளிர்காலம் வேறு நெருப்புக்கூட இல்லையே என்று கவலையுடன் கூறியது பின்னர் எங்கோ பறந்து சென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுள்ளியைக் கொண்டுவந்து அந்த மூன்று பேருக்கும் முன்னால் போட்டது அவர்கள் மேலும் சில சுள்ளிகளைச் சேர்த்துத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்தார்கள்.

அப்போது குருவிக்கு மனநிறைவு ஏற்பட வில்லை மீண்டும் அது தன் மனைவியைப் பார்த்து அன்பே இப்போது என்ன செய்வது? அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லையே நாமோ இல்லறத்தினர் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தாக வேண்டும் என் உடம்பை அவர்களுக்கு உணவாகத் தருகிறேன் என்று கூறியபடி அவர்கள் வளர்த்திருந்த நெருப்பில் பாய்ந்து மாண்டது மரத்தடியிலிருந்த மூவரும் அந்த குருவி நெருப்பில் வீழ்வதைப் பார்ததார்கள் தடுக்கவும் முயன்றார்கள் ஆனால் குருவி மிக வேகமாக நெருப்பில் வீழந்துவிட்டது.

அந்தக் குருவியின் மனைவி தன் கணவனின் செயலைப் பார்த்தது. பின்னர் இங்கோ மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு சிறிய பறவையின் உடல் எப்படி அவர்களது பசியைத் தீர்க்கும் அது போதாது என் கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியான என் கடமை அவர்களுக்கு என் உடலும் கிடைக்கட்டும் என்று கூறித் தானும் தீயில் வீழ்ந்தது.

நடந்தவை அனைத்தையும் மூன்று குஞ்சுகளும் கண்டன . தங்கள் விருந்தினர்களுக்குப் போதுமான உணவு இல்லாததைக் கண்ட அவை நம் பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் அப்படியும் உணவு போதவில்லை பெற்றோரின் பணியைத் தொடர்வது நம் கடமை நமது உடலும் போகட்டும் என்று பேசிபடியே மூன்றும் அந்த நெருப்பிற்குள் வேகமாக வீழந்து இறந்தன.

நடந்ததைக் கண்டு திகைத்த அந்த மூவருக்கும் அந்தக் குருவிகளின் உடலைத் தீண்டவும் மனம் வரவில்லை உணவு எதுவும் இன்றியே அவர்கள் இரவைக் கழித்தனர். பொழுது விடிந்ததும் துறவியும் அரசனும் இளவரசி வெளியேற வழிகாட்டினர் அவள் தன் தந்தையிடம் திரும்பினாள்.

பின்னர் நமது துறவி அரசனிடம் மன்னா தான் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்டாய் அல்லவா? நீ இல்லறத் தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல் எந்த வினாடியும் பிறருக்காக உன்னைத் தியாகம் செய்வதற்குத் தயாராக வாழ வேண்டும் உலகைத் துறந்து வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளந்துறவியைப்போல் இரு இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பித்து விடு துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ பணத்தையோ பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே அவரவர் நிலையில்அவரவர் பெரியவரே ஆனால் ஒருவரின் கடமை மற்றவரின் கடமை ஆகாது என்றார்.