ஒன்றைப் புரிந்து கொள். மனிதன் சட்டங்களை உருவாக்குகிறானா அல்லது சட்டங்கள் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பணத்தை உருவாக்குகிறானா, பணம் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பெயரையும் புகழையும் உருவாக்குகிறானா, பெயரும் புகழும் மனிதனை உருவாக்குகிறதா?
முதலில் மனிதனாகு. அப்போது பிற எல்லாம் தாமாகவே உன்னை தேடி வருவதைக் காண்பாய். தெரு நாயைப்போல் உறுமிக்கொண்டு சண்டையிடுவதை விட்டு விடு. நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றைப் பெறு. மனிதனாக பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது, நீ அழுதாய். நீ உலகை விட்டுச் செல்லும் போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழத்தக்க நல்ல காரியங்களைச் செய். இதைச் சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை.
- வங்காளப் பத்திரிகையான உத்போதனுக்காக "கிழக்கும் மேற்கும் " என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி.....
No comments:
Post a Comment