Monday, July 6, 2015

Godavari Puskaralu

கோதாவரி புஷ்கரம்
=======

இந்தியாவில்  புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்

பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் (பிரணீதா) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகிய தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் ராசி நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் சிம்ம ராசியில் (ஜூலை 14 காலை 6.26)  பிரவேசிப்பதால் கோதாவரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது,  வரும் ஜூலை 14 அன்று தொடங்கி ஜூலை 25 அன்று முடிகிறது. 

கோதாவரி புஷ்கரம்  நடைபெறும் இடங்கள்.
-----------------------------------------------------------------
கோதாவரி புஷ்கரத்தில் கலந்துக்கொள்ள  தெலங்கான மாநிலத்தில் கரீம் நகர் (Karimnagar), காளிஷ்வரம் (Kaleshwaram), பாசர்(basar)  and பத்தராசலம்(Bhadrachalam),  ஆந்திரா மாநிலத்தில்  நரசாபுரம் (Narasapuram), கொவ்வூர் (Kovvur) and ராஜமுந்திரி (Rajahmundry) செல்லலாம்.  

பத்தராசலம் மற்றும் ராஜமுந்திரியில் கோதாவரி நதிக்கரையில் தெலங்கானா, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.

கோதாவரி புஷ்கரம்  இணையத்தளம்

கோதாவரி புஷ்கரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு http://godavaripushkaralu.co.in என்ற இணையத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment