Sunday, November 20, 2016

What we expect from Modi, after January 1st 2017.

ஜனவரி வரை பொறுத்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக கருப்பு பணத்தை ஒழித்து ஏழை மக்கள் சந்தோசமாக வாழ வகை செய்வேன் என்றும் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் முதலீடு செய்வேன்.... என்று மோடி அவர்கள் சொல்கிறார்...

சரி அவர்கள் கூற்றை ஏற்று கொண்டு ஜனவரி வரை பொறுத்துக்கொள்கிறோம்....

ஜனவரி பிறகு அவர்களுக்கு 15 லட்சம் வேண்டாம், அவர்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், கல்வி, இலவச மருத்துவமனை என்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா....? கண்டிப்பாக செய்வேன் என்று மோடி அவர்கள் உத்தரவாதம் தர தயாரா..?

கண்டிப்பாக தர முடியாது, ஏனென்றால் கல்வி,மருத்துவமனை இன்று தனியார் மற்றும் அரசயில் வியாதிகளிடம் தான் உள்ளது.... இது என்று அரசுடமை ஆகுமோ அன்று தான் ஏழைகளுக்கு தீர்வு கிடைக்கும்...

இல்லை கொழுந்து விட்டு எரியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா, விலைவாசி கட்டுக்குள் வருமா...,

கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது ஏயென்றால் பெட்ரோல்/டீசல் விலை நீர்நினைப்பது அரசு அல்ல தனியார் முதலைகள் (அம்பானி மற்றும் அதானிகள்) தான்..... இந்த சட்டத்தை திரும்ப பெற்று பெட்ரோல்/டீசல் விலை நிர்ணயிக்கும் சட்டம் மீண்டும் அரசை ஏற்குமா.....?

அப்படி செய்தால் கண்டிப்பாக விலைவாசி கட்டுக்குள் வரும்..... அது செய்ய மோடிக்கு துணுவு உண்டா ..?....

1,70,000 கோடி வராத கடன் வைத்துள்ள பெரும் கருப்பு பண முதலைகளிடம் வராத கடன் வசூலிக்க தைரியம் உண்டா.....?

இல்லையென்பது ஊரறிந்த ஒன்று தான்..... அவர்களுக்கு மேலும் பல லட்சம் கோடிகள் கடன் தர மட்டும் தான் மோடி அவர்கள் தயார்....

இப்படி பெரும் திருட்டு முதலாளிகளுக்கு மேலும் மேலும் கடன் தந்து கொள்ளடிப்பதை விட.....நாட்டில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு கொடுங்கள் சில லட்சங்கள் கடனாக, அவர்களும் தொழில் தொடங்க வழி விடுங்கள்....

நாட்டில் வேலையில்லா நிலைமை ஒழியும்.... நாட்டின் பொருளாதாரம் வரும்.....

இங்கு இருப்பவனுக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் கொடுக்க படுகிறது...... அவன் பிறர் வாய்ப்பை கெடுப்பது மட்டுமில்லாமல் வரியைப்பு செய்து நாட்டை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறான்....

இந்திய பொருளாதாரம் உண்மையில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கருப்பு பணமட்டும் அழிந்தால் போதாது.... கருப்பு பொருளாதாரம் தடை செய்யப்பட வேண்டும்.... போலி முதலாளித்துவம் ஒழிய வேண்டும்.....

இவையெல்லாம் செய்ய மோடியால் முடியாது.......

மக்களே சிந்திப்பீர்..... 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்பது ஒரு மாயத்தோற்றம்..... ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை சூறையாடும் மிக பெரிய சூழ்ச்சி..... விழித்துக்கொள்ளுங்கள்....

இந்த பாழாப்போன அரசியல் வியாதிகள் கார்ப்பரேட் முதலாளிகளின் கை கூலியாக இருக்கும் வரை நமக்கு விடிவில்லை.....

- இவன்
பிரவின் சுந்தர் பு.வெ. (Praveen Sundar P.V.)

மோடியின் முதலை கண்ணீர்...

இந்த வருட ஆஸ்கார் விருது கண்டிப்பாக திரு மோ(ச)டி அவர்களுக்கு தான் வழங்க வேண்டும்...... என்னமா நடிக்கிறார்..... chanceless.....

// என் மக்கள் வீதிகளில் நிற்கும் கொடுமை என்னை மிகவும் வாட்டுகிறது. நான் என்ன செய்வேன்..என்று மீண்டும் கலங்க..பிரதமர் இல்ல ஊழியர்கள் பிரதமர் சாப்பிட மறுக்கும் விஷயத்தை அமித்ஷாவிடம் கூற அதிர்ந்து போனாராம்.... //

நானும் அப்படியே shock ஆயிட்டேன்..... ஷங்கர், மணிரத்னம் கூட இவ்வளவு அழகாக வசனம் எழுதி நடித்து இருந்து இருக்க மாட்டார்கள்.... Chanceless acting...
சரி விஷயத்துக்கு வருவோம்......

கருப்பு பணம் எப்படி உருவாகிறது, யாரிடம் எவ்வளவு உள்ளது, எப்படியெல்லாம்,எங்கெல்லாம் கை மாறி மீண்டும் நம் நாட்டிற்கு அந்நிய முதலீடு என்ற பெயரில் எப்படி வருகிறது என்பது பற்றி எல்லாம் பிரதமருக்கு தெரியாதா....?

நாட்டில் உள்ள 86% பணம் செல்லாதாக்கி விட்டால் மக்கள் இன்னல் படுவார்கள் என்பது அவருக்கு தெரியாதா..... அதற்கு முன்னேற்பாடுகள் செய்யமால் இவ்வளவு அவசரமாக இதை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தமென்ன...?

கருப்பு பணம் ஒழிக்கயென்றால் அதன் பிறிப்பிடமான அம்பானி மற்றும் அதானி அவர்களோடு நட்பில் இருந்து கொண்டு எப்படி ஒழிப்பார்.....?
வெளிநாடு செல்ல உபயோகப்படுத்துவது அதானியின் சொந்த வானுர்தி.....!
ஆஸ்திரேலியாவில் உதவாது நிலக்கரி சுரங்கம் வாங்க State bank of India மூலம் 1 பில்லியன் வரை கடன் வழங்க உதவியது.....

இந்தியாவின் முக்கியமான நகர்களில்(கோவை ரேஸ் கோர்ஸ்,சென்னை இரயில் நிலையம்,விஜயவாடா இரயில் நிலையம்,பூரி,விசாக்கப்பட்டினம் மற்றும் பல ஊர்களில்) இணைய சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.... இந்த திட்டத்தை நமது மத்திய அரசாங்கம் கொடுத்து இருப்பது ரிலைன்ஸ்யின் ஜியோவிடம் தான்.... இதற்காக செலவாகும் பல லட்சம் கோடி ரூபாய் நம் வரி பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது......

இப்படி முழு நேரமாக அம்பானி மற்றும் அதானி அவர்களுக்காக வேலை செய்யும் பிரதமர் கருப்பு பணத்தை ஒழிப்பார் என்று சொல்லுவது நகைப்பாக இருக்கிறது.....

கள்ள நோட்டுகளை ஒழிப்பதும் ஒரு காரணம் என்றால் இதற்கு முன் திரு ரகுராம் ராஜன் இருந்தப்போது 2015 முன் அச்சிடப்பட்ட 500 தாள்கள் செல்லாது என்றும் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் அவகாசம் கொடுத்து மக்கள் மாற்ற வழி செய்தார்கள்.... அன்று யாரும் வங்கி வாசலில் பொழுப்பு கெடுத்து நின்று கொண்டுயில்லை.... அப்படியொரு நிகழ்வு நடந்தது கூட நம்மில் பலருக்கு தெரியாது.... அவ்வளவு சுலபமாக மக்கள் இன்னல்படமால் செய்வது சாமார்த்தியமா..... ? அல்லது இது சாமார்த்தியமா....?

மோடியின் திட்டம் கருப்பு பணத்தை ஒழிப்பதோ அல்லது கள்ள நோட்டை ஒழிப்பதோயில்லை..... முழுக்க முழுக்க எல்லா பரிவர்த்தனைகளை வங்கியின் மூலம் செயல்படுத்த மக்களை நிர்பந்தப்படுத்துவது தான்...... இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு மேலும் வரி விதித்து அவர்களை முழுவதுமாக அழித்து கார்ப்பேரேட் முதலாளிகளின் ஆட்சிக்கு வழிவகுக்க தான் இந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற நாடகம்.....

-பிரவின் சுந்தர் பு.வெ.(Praveen Sundar P.V.)

Wednesday, November 9, 2016

New 500 rs and 1000 Rs Note

இந்த கட்டுரை முலம் யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல......... நான் எந்த கட்சிக்கும் இங்கு ஆதரவாக இல்லை, எனக்குள் இருக்கும் அதகங்களை பகிருந்து கொள்கிறேன் அவ்வளவு தான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.........

சுந்தர்: அண்ணே , கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் மாத்திட்டீங்களா..?
பிரவின் : இல்ல தம்பி, மாத்தணும்....

சுந்தர்: ஆயிரம் இருந்தாலும் மோடி மாஸ் தான் அண்ணே.... எவ்வளவு துணிச்சலான முடிவு பார்த்திங்களா...? கருப்பு பணம் வெச்சி இருக்குறவங்க கண்டிப்பா தூக்கமில்லாமல் பயத்தியமாக தான் அலைவார்கள்....
பிரவின் : எவன் எதை சொன்னாலும் அப்படியே ஆமா போடுவீங்களா டா..... நீங்க சொந்தமா எதையும் யோசிக்க மாட்டிங்களா டா.... நல்லா யோசிச்சி பாரு ..... நிறைய பணம் வெச்சி இருக்கிறவன் வெளிநாட்டுல பதுக்கி வெச்சி இருக்கான் , சுமாரா பணம் வெச்சி இருக்கறவன் ரியல் எஸ்டேட் அப்படின்னு இப்படின்னு முதலீடு செஞ்சி வெச்சி இருக்காங்க.... அதுவும் தன்னோடைய பெயரில் இல்லை... மனைவி, இணைவி, பினாமி இப்படி பிடிக்க முடியாத அளவுக்கு அவங்க உஷாரா தான் இருக்காங்க.... இவர்கள் இந்த புதிய நோட்டுகள் மாற்றத்தால் எந்த பாதிப்பும் அடைய போவதில்லை.....

சுந்தர்: என்ன அண்னே சொல்லுறீங்க.... இதன் மூலம் கருப்பு பணம் ஒழியாதுனு சொல்லுறிங்களா....?
பிரவின் : தம்பி, தெரிஞ்சிக்கோ கையில் 20 லட்சம் (சரியான தொகை நினைவில் இல்லை) மேல் பணம் வைத்து கொள்ள கூடாதுனு ஏற்கனவே சட்டம் இருக்கு தெரியுமா... அப்படி இருக்கும் போது எவனும் ரொக்க பணமாக வைத்து கொள்ள வாய்ப்பு குறைவு தான்.... முன்னாடி சொன்னது போல் எல்லா கருப்பு பணமும் பத்திரமாக தான் இருக்கிறது அதற்க்கு எந்த பாதிப்பும் இல்லை.... சில்லறையாக இருக்கும் சில ஆயிரம் கோடிகள் மாற்றுவதும் பெரிய விஷயமில்லை.....

சுந்தர்: அண்னே, எனக்கு தலையே சுற்றுகிறது, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்...
பிரவின்: சரி கொஞ்சம் பொறுமையாக கேள் தம்பி..... கருப்பு பணம் தடுக்க 500 ,1000 ரூபாய் க்நோட்டுகளை திடீர் என்று நிறுத்தினால் மட்டும் போதாது..... ஒரு சில நாட்களுக்கு மட்டும் தான் இதை தடுத்து நிறுத்த முடியும்.. ஒரேடியாக தடுக்க முடியாது..... உதாரணமாக என்னிடம் சில ஆயிரம் கோடிகள் இருக்கு என்று வைத்துக் கோள் , அதை மாற்றவது ஒன்றும் பெரிய விஷயமில்லை......

1) 08-நவம்பர் க்கு முன், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னாடியே நான் நிறைய நகைகள் வாங்கியதாக கணக்கு காட்ட முடியும் , அதாவது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பிளாட்டினம் அல்லது டைமண்ட் இரட்டை அல்லது முன்று மடங்கு விலை நகை கடைக்கார் இடம் கொடுத்து முன்னாளில் வாங்கியதாக ரசீது வாங்க முடியாது என்று சொல் பார்க்கலாம்.....

2) இரண்டாவது ரியல் எஸ்டேட்டீல் , ரெண்டு மூணு மாதத்துக்கு முன்னாடியே சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் முக்கியமான இடங்களில் இடம் வாங்கியதாக பத்திரங்கள் தயார் செய்ய முடியாதா சொல் பார்ப்போம்.... இதற்கு கூலியாக பத்திர பதிவு அதிகாரிகளுக்கு சில கோடி ரூபாய் கொடுத்தால் போதுமானது......

தம்பி சட்டங்கள் ஆயிரம் இருக்கலாம், ஆனால் அதை நடைமுறை படுத்தும் அதிகாரங்கள் அதிகாரிகள் கையில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள், எல்லாருக்கும் ஒரு விலை உண்டு..... எல்லா சிக்கல்களுக்கும் பணத்தின் மூலம் ஒரு தீர்வும் இருக்கு.....

சுந்தர்: அண்னே , நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி தான், இருந்தாலும் வாங்கும் நகை கடைக்காரர்க்கு அல்லது அந்த அதிகாரிகளுக்கு வரி சிக்கல் வருமல்லவா....

பிரவின்: தம்பி, இரண்டு மடங்கு லாபம் வரும் போது அதில் சிறிய பங்கு வரி கட்டினால் போதும் எவனும் கேட்க மாட்டான் அல்லது வேறு ஒருவர் பெயரில் இவனும் நிலம் வாங்கியதாக பத்திர பதிவு முன்னாளில் செய்தால் போதும் பொறுமையாக மாற்றி கொள்ளலாம்...

சுந்தர்: சரி அப்படியே பார்த்தாலும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு நிறைய பணம் கிடைக்கும் இல்லையா.....?
பிரவின்: கண்டிப்பாக, கிடைக்க வாய்ப்பு இருக்கு,

சுந்தர்: அப்படி வாங்க வழிக்கு..... இது தான் மோடி அவர்கள் ராஜா தந்திரம்...!
பிரவின்: சற்று பலத்த சிரிப்புடன்.... :) :) :) தம்பி முன்னாடி சொன்னது தான் இப்பவும் சொல்லுறேன், பணக்காரர்களுக்கு பெரிய அளவில் இதனால் பாதிப்பு இல்லை, அவர்களுக்கு இது ஒரு சிறிய இடையூறு தான்..... இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்க பட போவது சாமான்ய மற்றும் நடுத்தர குடும்பத்தார் தான்....

சுந்தர்: என்ன அண்னே புது குண்டு போடுறீங்க.... இதன் மூலம் எப்படி இவர்கள் பாதிப்பு அடைவார்கள்..?
பிரவின் : தம்பி கருப்பு பணம் சம்பாத்திக்கும் வழி முறைகள் முடக்கப்படவில்லை, பதுக்கி வைக்கும் முறைகள் தான் தற்காலிகமாக தடை செய்பட்டுள்ளது..... அதாவது இந்த நடவடிக்கையின் மூலம் நான் ஒரு கோடி இழந்ததாக வைத்துக்கொள், கண்டிப்பாக இதை நான் மீண்டும் சம்பாதித்து விடுவேன்.... என்னிடம் பதவி இருக்கிறது.... முன்னாடி 1000 ரூபாய் வாங்கி இருந்தால் இப்பொழுது 2000 ரூபாய் வாங்குவேன்.... அவ்வளவு தான், ஒரு மாசத்துல நான் விட்டது சம்பாத்திவிடுவேன்..... நாட்டில் லஞ்சம்,ஊழல் தடுக்காமல் எப்படி கருப்பு பணத்தை ஒழிக்க முடியும்..? அதனால முற்றிலும் இந்த நடவடிக்கையின் மூலம் லஞ்சம் கொடுத்து கொடுத்தே பழகி போன நடுத்தர மக்களுக்கு தான் பாதிப்பு ....

மேலும் நாட்டில் உள்ள மொத்த பணத்தில் 75 முதல் 80 சதவிகிதம் வரை பணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தான்..... அதை திடீருனு செல்லாது என்று சொன்னால் எவ்வளவு கஷ்டம் என்று யோசித்து பார்த்தாயா..? கையில் பணம் இருந்தும் உபயோகப்படுத்த முடியாமல் எவ்வளவு சிரமம் தெரியுமா..? எடுக்காட்டாக ஒருவர் சொல்கிறார் எனது தந்தைக்கு இன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், வங்கியில் பணம் இருக்கிறது ஆனால் வங்கியும் இல்லை ஏ.டி.எம் இல்லை எப்படி பணம் எடுப்பது......? நாளை முகர்த்த நாள் திருமண செலவு எப்படி செய்வது..... ? ஒரு நாளைக்கு 4000 ஆயிரம் வரை மட்டுமே மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும், அதிகப்பட்சமாக ஒரு வாரத்திற்கு 20,000 வரை மட்டுமே எடுக்க முடியும்..... நம்பிக்கையின் பெயரில் காசு வாங்காம வேலை செய்து கொடுப்பார்களா சொல்லு பார்ப்போம்.... இப்படி சொல்ல வேண்டுமென்றால் எத்தனையோ சங்கடங்கள் நடுத்தர மக்களுக்கு தான்....

8ஆம் முன்னதாக ஏ.டி.எம். ல் பணம் 3000 ரூபாய் எடுப்பதாக வைத்து க்கொள்..... ஐந்து 500 ரூபாய் நோட்டுக்களும் ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் தான் வரும்..... இப்படி மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நோட்டை இப்படி திடீரென்னு செல்லாது என்றால் எப்படி.....? இதே ஒரு 20 அல்லது 25க்கு மேல் இந்த அறிவிப்பு வந்தால் கண்டிப்பாக நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்பு அடைய மாட்டார்கள் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள் இப்படி ஒரு அறிவிப்பு தேவையா..? எந்த முதலாளியும் ஒண்ணா தேதி ஆனா டான்னு இங்க சம்பளம் தருவதுயில்லை..... 5 , 10 ஒரு சிலர்க்கு 15 ஆம் தேதி மேல் சம்பளம் கொடுக்குறாங்க.... சரியாக சம்பளம் கொடுத்து பணம் கையில் இருக்கும் போது இந்த நடவடிக்கையால் தேவையில்லாத அலைச்சல் தான் மிச்சம் ....

சுந்தர்: அண்னே, நாட்டில் ஒரு பெரிய அதிரடி நடவடிக்கை எடுக்கும் போது ஒரு சில சங்கடங்கள் நாம் சகித்து கொண்டு தான் ஆக வேண்டுமல்லவா....
பிரவின்: என்னோட முன்னோர்கள் சரியாக தான் சொன்னார்கள், நல்லா வயிறார சாப்பிட்டு இருக்கிறவன் தான் நிதி நேர்மை, நாடு, தேசம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு சுத்திட்டு இருப்பான்னு, பசியோட இருக்குறவனுக்கு நாடு, நாட்டு பற்று எல்லாம் தெரியாது, அவனுக்கு சோறு இருந்தால் போதும், தேச பற்று எல்லாம் நானும் பேசுகிறேன் எனக்கும் சோறு கிடைச்ச அப்புறம்.... அதாவது உங்கள மாதிரி நல்லா இருக்குறவனுக்கு பிரச்னையில்லை ஒரு வாரம் கூட சமாளிப்பீர்கள், நாங்கள் அப்படியில்லை, ஒரு நாளைக்கு வெளிய சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 300 ரூபாய் தேவை.....உன்னோட மனசாட்சி தொட்டு சொல் நீ வைத்துள்ள பணத்தில் எத்தனை 100 ரூபாய் 50 ரூபாய் பணம் வைத்து இருக்கிறாய்.... ? கையிலுள்ள பணம் மாற்றும் வரை செலவிற்க்கு என்ன செய்வது என்று சொல்...?

சுந்தர்: சரி அண்னே , அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு என்று சொல்லுங்கள்....
பிரவின் : அப்படி கேள் சொல்லுறேன்.... முதலில் வங்கிக்கு வரும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அறிவிப்பின்றி வங்கியில் பிடித்தம் கொள்ளவேண்டும், அதற்க்கு பதிலாக 100 ரூபாய் நோட்டுக்களாக தர வேண்டும், வாடிக்கையாளர்கள் கேட்டால் 500 ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறை என்று சொல்ல வேண்டும்... புழக்கத்தில் 100 மற்றும் 50 ரூபாய் பெருவாரியாக விட வேண்டும்.... ஏ.டி.எம் இல் கூட 100 மற்றும் 50 ரூபாய் தாள்கள் மட்டுமே வர வேண்டும்.... இப்படி செய்வது மூலம் சாமான்யர்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் அரிதாக தான் இருக்கும்.... ஒரு கட்டத்தில் 500 மற்றும் 1000 தாள்கள் வங்கிக்கு வராமல் மொத்தமாக முடக்கப்பட்டாக ரிசர்வு வங்கி நினைக்கும் போது இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் கண்டிப்பாக பயன் கிடைத்து இருக்கலாம்.....! அதை விடுத்து புதிய 500 மற்றும் 1000 பதில் 2000 எந்த வகையில் கருப்பு பணத்தை முடக்கும்....?

மேலும் இன்றளவும், உங்கள் பணம் எங்கு இருந்து வந்தது எப்படி சம்பாதித்தீர்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை, உங்கள் விவரம் ரகசியமாக வைத்து கொள்ளப்படும் என்று கருப்பு பணம் முதலீடு செய்ய எத்தனையோ வங்கிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறது.....

சுந்தர்: அதெயெல்லாம் சரி அண்னே, கருப்பு பணம் மட்டும் இங்க பிரச்சனையில்லை, கள்ள பணமும் இங்க பிரச்னை தன, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நம்ம பணத்தை போல் போலி நோட்டுகள் தயாரித்து அதை நம் நாட்டில் புழக்கத்தில் விட்டு நம் பொருளாதாரத்திற்கு பெரும் தல வலியாக இருக்கிறார்கள் அல்லவா.....
பிரவின்: ஏற்று கொள்கிறேன் தம்பி உங்கள் வாதத்தை, புதிய நோட்டுகளில் நானோ தொழில் நுட்பம் எதுவும் இல்லை என்று தெளிவாக தெரிவித்து விட்டார்கள்.... அப்படி இருக்கும் போது புதிய தாள்களையும் கண்டிப்பாக போலி தயாரிக்க வாய்ப்பு உள்ளது அல்லவா....... ஒரு வேலை புதிய நோட்டுகள் போலி தயாரிக்க பட்டால் அதையும் இதைப்போல் முன்னறிவிப்பு இன்றி செல்லாது என்று அறிவித்து விடுவார்களா....?

சுந்தர்: ஆமா அண்னே , நீங்கள் சொல்வதும் சரி தான்.... சரி வங்கி திறந்து இருப்பார்கள் கையில் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் மாற்றி விட்டு வருகிறேன்....

பிரவின்: சந்தோசம் தம்பி, நானும் வங்கி சென்று மாற்ற வேண்டும்.... கடைசியாக ஒன்று சொல்கிறேன்..... பணம் இருந்தால் எப்படிப்பட்ட இடையூறுகளையும் இங்கு சமாளித்து விடலாம்..... பணக்காரன் கஷ்டப்பட்டதாக இங்கு சரித்திரமில்லை.....

சாமானியர்களுக்கு இடையூறு இல்லாமல் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நாங்கள் எங்கள் முழு ஆதரவு தருகிறோம்........

இவன்
-பிரவின் சுந்தர் பு.வெ.