Showing posts with label RajahMundry. Show all posts
Showing posts with label RajahMundry. Show all posts

Tuesday, July 21, 2015

Godavari Maha Pushkaram


இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

கோதாவரி ஆறு- இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய நதி கோதாவரி. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரியம்மகேஷ்வர் பகுதியில் பிரம்மம் கிரி மலையில் தொடங்கும் கோதாவரி, தெலங்கானா மாநிலத்தின் தர்மபுரி, காலேஷ்வரம், பாசரா, பத்ராசலம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ராஜமுந்திரி, நரசாபுரம், கொவ்வூரு, அந்தர்வேதி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கோதாவரி நதியில் ராஜமுந்திரி அருகே பாபி கொண்டலு எனும் இடத்தில் பல்வேறு துணை நதிகள் கலக்கின்றன. அதன் பிறகு அகண்ட கோதாவரி நதியாக வங்கக் கடலில் கலக்கிறது. பூர்ணா (தெற்கு), ப்ரவரா, இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசார, சபரி வைன்கங்கா மற்றும் வார்த ஆறுகள் கோதாவரியின் கிளை ஆறுகளாகும்.

பகீரதனின் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கை நதி திரேதா யுகத்தை சேர்ந்ததாகும். ஆனால் சுமார் 1,465 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கோதாவரி, அதற்கு முந்தைய கிரேதா யுகத்தைச் சேர்ந்த புண்ணிய நதி என கூறப்படுகிறது. வனவாசம் சென்ற ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் கோதாவரி நதிக்கரையில் சில நாட்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கோதாவரி நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும்.  இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாட படுகிறது.

 மேலும் 144 வருடங்களுக்கு ஒரு முறை மஹா புஷ்கரம் கொண்டாப்படுகிறது. ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1857 ஆம் ஆண்டு இந்த மஹா புஷ்கரம் கோதாவரியில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இந்த ஆண்டு (2015) கோதாவரி ஆற்றில் மகாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது இது ஜூலை 14 முதல் 25 வரை கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அடுத்த மஹா புஷ்கரம் கோதாவரி ஆற்றில் வரும் 2159 ஆண்டு கொண்டாப்படும்.

ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும் கோவில்கள் வருமாறு:–
-----------------------------------------------------------

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).