Wednesday, September 28, 2011

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள்

இந்த கட்டுரை முலம் யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல......... எனக்குள் இருக்கும் அதங்களை பகிருந்து கொள்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்.........

பிரவீன் : என்ன தம்பி, கையில் தேசிய கொடி, ஷர்ட் இல் ஒரு badge , சுகந்திர தினம் முடிஞ்சு பத்து நாள் ஆகுது இல்ல, இன்னும் அந்த ஷர்ட் மாற்ற வில்லையா.....?
சுந்தர் : அண்ணே இது எல்லாம் ரொம்ப ஓவர், சுகந்திர தினத்தில் மட்டும் தான் கையிலே தேசிய கொடி வைத்து கொள்ள வேண்டுமா?

பிரவீன்: ஆமா வருடத்தில் இரண்டு நாளில்(சுகந்திர நாள் மற்றும் குடியரசு தினம் ) மட்டும் தானே நமக்கு நாட்டு பற்று வருகிறது.....
சுந்தர்: அண்ணே மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் அப்படி இருக்கலாம் எனக்கு என் தாய் நாட்டு பற்று நிறைய இருக்கு.....
பிரவீன்: இருந்தால் சந்தோசம் தான்!, இப்ப எங்க இருந்து வர.......

சுந்தர்: போரட்டத்தில் கலந்து கொண்டு வருகிறேன்.......
பிரவீன் : எதற்காக போராட்டம்?

சுந்தர்: அண்ணே நீங்கள் ஒரு இந்தியரா, நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கு, ஒன்றும் தெரியாத உங்களுக்கு?
பிரவீன்: தெரியுல சொல்லுங்க தம்பி

சுந்தர்: அண்ணா ஹசாரே க்கு அதரவாக போராடி விட்டு வருகிறேன்....

பிரவீன்: மிக்க நல்லது, உங்கள் போராட்டத்தின் நோக்கம் என்ன?

சுந்தர்: கருப்பு பணத்தை கொண்டு வருவதற்காக அண்ணா ஹசாரே போராடி வருகிறார்
பிரவீன்: நான் எதிர்ப்பார்த்தேன் தம்பி இந்த பதிலே...... கருப்பு பணம் வந்ததா?



சுந்தர்: சீக்கிரத்தில் வந்துரும்(1 ,456 லட்சம் கோடி ) !, அதற்க்கு அப்புறம்
  1. "இந்திய பணகார நாடுகளில் முதல் இடத்திற்கு வந்துரும் ஆகிடும், "
  2. "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 60,000 கோடி கிடைக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 கோடி கிடைக்கும்..."
  3. "இன்னும் 20 வருடத்திற்கு நாம் வரி கொடுக்க தேவை இல்லை...."
  4. பெட்ரோலின் விலை வெறும் 25 ரூபாய்,
  5. டீசல் விலை வெறும் 15 ரூபாய்,
  6. பாலின் விலை வெறும் 8 ரூபாய் ,
  7. பீரின் விலை வெறும் 8 ரூபாய்,
  8. வோட்கா வின் விலை வெறும் 20 ரூபாய்
  9. whisky வின் வெறும் 35 ரூபாய்
  10. soda வின் விலை வெறும் 1 .25 ரூபாய்
  11. சிகரட்டின் விலை வெறும்.50 காசு தான்

பிரவீன்: ஹா ஹா ஹா, முட்டாள்கள் இருக்கும் வரை இப்படி தான் எமாற்றி கொண்டு இருப்பார்கள்., மேலை சொன்ன தகவல்கள் எல்லாம் பொய்யானவை கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து பார், நாட்டில் எத்தனை மாவட்டங்கள்/கிராமம் இருக்கு, அதற்க்கு 100 கோடி என்றால் எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட்டு பார்., 80 ரூபாய் உள்ள பெட்ரோலின் விலை 25 ரூபாய் , 80 ரூபாய் உள்ள பீர் இன் விலை 8 ரூபாய் ஆம், எப்படி தம்பி....

சுந்தர்: ஆமாம் அண்ணே , கொஞ்சம் யோசிக்க வேண்டியது விஷயம் தான்.......

பிரவீன் : மேலும் அண்ணா ஹசாரே போராடுவது கருப்பு பணத்திற்காக இல்லை

சுந்தர்: வேற எதற்காக போராடுகிறார்.,
பிரவீன்: அவர் போராடுவது ஊழலை எதிர்த்து,

சுந்தர்: ஆமாம் அண்ணே நானும் கேள்வி பட்ட இருக்கிறேன் , ஜன லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தானே போராடுகிறார்....
பிரவீன்: மிக சரியாக சொன்னாய்,

சுந்தர்: இந்த ஜன லோக்பால் முலம் ஊழலே ஒழித்து விடலாம் இல்லையா அண்ணே!
பிரவீன்: முடியவே முடியாது

சுந்தர்: என்ன அண்ணே சொல்லுரிங்க, இவ்வளவு பெரிய போராட்டங்கள் , மக்கள் எழுச்சி நான் பார்த்தது இல்லை, கண்டிப்பாக ஊழலுக்கு எதிராக வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிரவீன்: முட்டாள் முட்டாள் , போராட்டங்கள் நடுத்துவதால் இங்கு இருந்து லஞ்சமோ , ஊழலலோ ஒழிந்து விடாது.,

சுந்தர்: அப்போழ்து அண்ணா ஹசாரேவை நீங்கள் நம்பவில்லை, அவர் போரட்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை அப்படி தன.,
பிரவீன்: நான் அப்படி சொல்லவே இல்லை., அண்ணா ஹசரேவின் போராட்டம் உண்மையானதாக இருக்கலாம்., ஆனால் அவர்க்கு அதரவு தெரிவிப்பது போல் பலர் சுயவிளம்பரம் தேடி கொள்கிறார்கள்,., பல தவறான மற்றும் அடிப்படை ஆதாரம் இல்லாத விஷயங்களை சொல்லி அண்ணா ஹசாரே அதிரியுங்கள் என்று கேட்பதும்., எடுத்துகாட்டு நீ மேல சொன்ன கருப்பு பணம் விவகாரம் போல்., தேர்வுக்கு பயந்து கல்லூரிக்கு செல்லாமல் கேட்டால் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு சென்றோம் என்று சொல்வதும், தவறா இல்லையா...... சிலர் அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பது போல் நடிப்பதும்., அவர் போராட்டத்தை அசிங்க படுத்தி கொண்டு இருப்பது போல் இருக்கிறது.,

மேலும் ஊழலை எதிர்த்து போராட எனக்கும் உனக்கும் எந்த ஒரு தகுதியும் இல்லை என்று நான் சொல்வேன்
சுந்தர்: என்ன அண்ணே சொல்லுரிங்க

பிரவீன்: ஆமாம் தம்பி, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல் பார்ப்போம்
சுந்தர்: கேளுங்க அண்ணே சும்மா டான் டான்னு சொல்லுறேன்

பிரவீன்: நீங்கள் கல்லூரியில் சேர donation செலுத்துவது லஞ்சம் இல்லையா., தினந்தோறும் டிராபிக் போலீஸ் க்கு தருவது லஞ்சம் இல்லையா., அல்லது கோவிலில் சிக்கிரம் சென்று சாமி பார்க்க ஸ்பெஷல் தரிசனம் என்று பணம் கொடுத்து செல்வது லஞ்சம் இல்லையா........
சுந்தர்: அண்ணே அது எப்படி லஞ்சம் ஆகும்.,

பிரவீன்: பின்னே உனக்கு முன்னாடி வருபவர் காத்து கொண்டு இருக்க நீ பணம் கொடுத்து ரசிது வாங்கி கொண்டு முன்னாடி செல்வது லஞ்சம் இல்லையா சொல் பார்க்கலாம்.,தினம் தினம் லஞ்சம் ஒரு பக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறோம் , மறு பக்கம் ஊழலே ஒழிப்போம் என்று போராடுவது வேடிக்கையாக இருக்கிறது., உன் மனதை தொட்டு சொல் என்னால் லஞ்சம் தராமல் இருக்க முடியும் என்று நம்புகிறாய ?
சுந்தர்: கண்டிப்பாக முடியாது அண்ணே!

பிரவீன்: மேலும் உன்னால் ., ஒரு புரோக்கர் அல்லது driving school இல்லாமல் license வாங்க முடியுமா சொல் பார்க்கலாம்?, அரசு துறைகளிலும் , தனியார் துறைகளிலும் தற்போது ஊழல் நன்றாக வளர்ந்து விட்டது.., இதை எந்த ஒரு சட்டத்தால் திருத்த முடியாது., பிறர் சட்டம் ஏற்றினால் லஞ்சம் ஓழியும் என்று பகல் கனவு காண்பதை விட... முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவோம்........ இன்று ஊழலை எதிர்த்து ஒன்று கூடிய நாம் அப்படியே லஞ்சம் ஒரு ரூபாய் என்றாலும் கொடுக்க மாட்டோம் என்று உருதி எடுத்து கொள்வோம்.,

கடைசியாக .,
ஊழல் இல்லா நாட்டை உருவாக்குவோம், முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி விட்டு.........
இவன்
பிரவீன் சுந்தர் பு. வெ.

மரண தண்டனை

இந்த கட்டுரை முலம் யார் மனதையும் புண்ப்படுத்துவது   என் நோக்கம் அல்ல., எனக்குள் இருக்கும் கேள்விகளும் விடைகளும் அவ்வளவே......

பிரவீன்: என்ன தம்பி லோக்பால் மசோதா ஏற்றியாச்ச ?, உங்கள் போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சா?
சுந்தர்:  இல்ல அண்ணே!, சீக்கிரத்தில் ஏற்றி  விடுவார்கள்...

பிரவீன்: சந்தோசம் சந்தோசம் , அப்புறம் என்ன ஏதோ போரட்டத்தில் கலந்து கொண்டதாக உன் விட்டில் கூறினார்கள்...
சுந்தர்: முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோர்க்கு தூக்கு தண்டனை  ரத்து செய்ய கோரி போராட்டம். மேலும் இவர்கள் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி தீயிட்ட எங்கள் விர மங்கை செங்கொடி அவர்களுக்கு  அஞ்சலி   செலுத்த சென்றோம்.....

பிரவீன்: விர மங்கையா? தம்பி அவள் தமிழ் உணர்வு கொண்டவளாக இருக்கலாம் அது தவறு அல்ல, ஆனால் அதற்காக உயிர் விடுவது எந்த வகையில் நியாயம்.... இவளை இவ்வளவு நாள் வளர்த்த இவர் குடும்பத்துக்கு  என்ன பயன் இந்த தற்கொலையால்., போராளி என்பவன் கடைசி வரை போராடுபவன் தான், உயிரே மாயித்து கொள்ளுபவன்  அல்ல....... நாளை நிதிமன்ற  கதவுகள்  அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து விட்டால், போன அவள் உயிர் திரும்ப வருமா சொல் பாப்போம்?
சுந்தர்: அண்ணே அவள் மரணம் தமிழர்களே தட்டி எழுப்பியது. அதனால் தான் இன்று தூக்கு தண்டனை எதிர்த்து அனைவரும் போராடுகிறார்கள்....  

பிரவீன்: அவள் தமிழர்களே தட்டி எழுப்பினாலோ இல்லையோ , அரசியல்வாதிகளையும்  , பத்திரிகை நிருபர்களையும் தட்டி எழுப்பி விட்டால், இவர்களுக்கு ஒரு நல்ல  இடம் அமைத்து விட்டால், இன்னும் கொஞ்ச பிரபலம் அடைய......

சுந்தர்: அண்ணே, அவள் அந்த மூன்று பேர் மரணத்தில் இருந்து காப்பாற்ற  இவள் இறந்தால் ....
பிரவீன்: சரி யார் அந்த மூன்று பேர்?, சுகந்திர போராட்ட தியாகிகளா, இல்லை நம் நாட்டில் உள்ள குறைகளை எதிர்த்து போராடியவர்களா , நம் நாட்டிக்காக உளவு பார்த்து எதிரி நாட்டில் சிக்கி கொண்டவர்களா ? யார் இவர்கள்?

சுந்தர்: அண்ணே முன்று பெரும் அப்பாவி தமிழர்கள், இவர்கள் நமது முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.இவர்கள் வெறும் கை பாவைகள் தான், இவர்களை வழி முறை படித்தியவர்கள்  பலர் இன்று நிம்மதியாக உலவி கொண்டு இருக்கும் பொது இவர்களே மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்     

பிரவீன்: சரி இவர்கள் செய்த குற்றம் என்ன?
சுந்தர்: முருகன்  கொலைக்கு திட்டம் திட்டியது , சாந்தன் battery வாங்கி கொடுத்தது,  பேரறிவாளன், பெயர் குழப்பத்தில்  மாட்டி கொண்டவன் அவ்வளவு தான்.,

பிரவீன்: தம்பி சாந்தன் battery  வாங்கி கொடுத்தது தப்பு இல்லை ஆனால் எதற்காக வாங்கி கொடுத்தான் என்பது தான் இங்கு கேள்வி?  பேரறிவாளன், பெயர் குழப்பத்தில்  மாட்டி கொண்டவன் என்றால் என் அவரால் இது நாள் வரை அதே நிருப்பிக்க  முடியவில்லை., மேலும் இவர்கள் அப்பாவி தமிழர்கள் என்று சொல்லுவதே நான் ஏற்று கொள்ள மாட்டேன்.... திட்டமிட்டு செய்த கொலை அது., இதற்காக நன்றாக திட்டமிட்டு பல முறை ஒத்திகை பார்த்து பின் நடைமுறை படுத்திய கோர தாண்டவம்  அது?

சுந்தர்: அண்ணே நீங்க நினைக்கிற  மாதிரி ராஜீவ் காந்தி ஒன்றும் அவ்வளவு நல்லவர் இல்லை, அவரை இவர்கள் இல்லை என்றாலும் வேறு யாராவது  கொலை செய்து இருப்பார்கள்....

பிரவீன்: நல்லா இருக்கு தம்பி, எல்லோரும் ஒரு நாள் மரணம் அடைய வேண்டியவர்கள் தான் அதற்காக நான் போய் அவர்களே இன்றே கொலை செய்ய முடியுமா சொல் பார்ப்போம்?    மேலும் ராஜீவ் காந்தி நல்லவரா இல்லையா என்பது முக்கியம் அல்ல, ஒரு உயிரே எடுக்கும்  உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது?.

சுந்தர்:  அண்ணே அவர் இலங்கை தமிழர்களே நம்ப வைத்து துரோகம்  செய்தார், அதனால்   அவருக்கு  அந்த தண்டனை தேவை தான்....

பிரவீன்: சரி தம்பி, நீ சொல்வதே நான் ஏற்று கொள்கிறேன்., துரோகம் செய்தது ராஜீவ் காந்தி அவரை மட்டும் கொலை செய்யலாமே அதை விட்டு பொது நிகழ்ச்சியில் குண்டு வைத்து ., அதனால்  அப்பாவி மக்கள் 18 பேர்  இறந்தனர் அதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறாய்.... அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் இப்படி கொடிய மரணம் அடைய.,  அவர்கள் பிணத்தை உறிவினர்கள் தொட்டு கும்மிட முடியாத நிலை, கை தனியாக, கால் தனியாக, உடல் தனியாக., அவர்களை பார்த்தல் உனக்கு பாவமாக இல்லையா ?

சுந்தர்: பாவம் தான் அண்ணே, அதற்காக இவர்களுக்கு மரண தண்டனை தேவை தானா?
பிரவீன்: கண்டிப்பாக தேவை தம்பி,
சுந்தர்: இல்ல அண்ணே, இவர்களுக்கு ஆயுள் தண்டனை தரலாம் இல்லையா?
பிரவீன்: தம்பி தண்டனைகள் கடுமையாக கடுமையாக குற்றங்கள் குறையும் என்று நம்புபவன் நான். இவர்களுக்கு கருணை அளித்தால் நாளை அப்துல் கசாப், தருமபுரி பேருந்துக்குள்  மாணவிகளே  எரித்தவன் என்று எல்லாருக்கும் கருணை அளிக்க வேண்டும்.,  இது தேவையா?,  தூக்கு தண்டனை இருக்கும் போதே இன்று கொலைகள் சர்வ சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது, அது இல்லாமல் போனால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விடும்.....

சுந்தர்: அண்ணே பொதுவாக தூக்க தண்டனை தேவையா?
பிரவீன்: கண்டிப்பாக  தேவை, மேலும் கொலை செய்யும் எல்லாருக்கும் தூக்கு தண்டனை தருவது இல்லை, அவர்கள் கொலை செய்ய வேண்டியதற்க்கான காரணம்,  நோக்கம், எல்லாம் ஆராய்ந்து     பிறகு தான் தூக்கு தண்டனை தருகிறார்கள்.

சுந்தர்: சரி அண்ணே தூக்கு தண்டனை தருவதால் கொலைகள் குறைந்து விட்டதா?
பிரவீன்: நல்ல  கேள்வி தம்பி!, ஒரு வழுக்கு விசாரித்து முடிவு தெரிவதற்குள் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகிறது,  மேலும் தூக்கு தண்டனை கொடுத்து விட்டால் குடியரசு தலைவர் இடம் கருணை மனு என்று பெயரில் ஒரு 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்., பின்னாளில் 30 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தார் என்று சொல்லி தப்பித்து விடலாம் என்ற எண்ணம் உள்ள வரை தூக்கு தண்டனையும் நிறை வேறாது, குற்றங்களும் குறையாது.  தூக்கு தண்டனை என்பது என்னை பொறுத்த வரை வளைகுடா நாடுகளில் செய்வது போல் திறந்த வெளியில் தண்டனை தர வேண்டும் அப்பொழுது தான் மக்களுக்கு  அதன் மீது ஒரு பயம் இருக்கும்.,


சுந்தர்: அண்ணே தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டி மனித நேயம் போராடுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து?
பிரவீன்: முட்டாள் தனமான போராட்டம், மனித நேயம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான், அரக்கர்களுக்கு அல்ல, திவரவாதம்  செய்பவன், குழந்தைகளே பாலியல் பலாத்காரம் செய்பவர்கள், இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை தேவையா இல்லையா ?, தம்பி, உனக்கும் எனக்கும் இந்த சம்பந்தமும்  இல்லை, நாளை நான் ஒரு குண்டு வெடிப்பில் கை தனியாக கால் தனியாக, சிதறி கிடந்தேன் என்றால்!, என்  பிணத்தை பார்க்கும் பொது உனக்கு என்ன தோன்றும் , அண்ணன் தான் இறந்து விட்டார், அவரை இந்த நிலைமைக்கு காரமானவரே  விட்டு விடலாம் என்று நினைப்பியா    இல்ல அவனுக்கு மரண தண்டனை வேண்டும் என்று போரடுவியா.....
சுந்தர்: கண்டிப்பாக குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன்.,     
 பிரவீன்: பிறகு என்னை தம்பி, அவர்கள் விட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தால் அவர்கள் குற்றவாளிகளுக்கு   ஆதரவு தெரிவிப்பார்களா  என்பது தான் என் சந்தேகம்?

சுந்தர்: எப்பொழுதும்  எட்டியும் போட்டியும்மாக இருக்கும் நமது அரசியல் கட்சிகளே மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் ஏற்றி இருக்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து?

பிரவீன்: இங்கு தீர்மானம் ஏற்றுவதால் ஒன்றும் ஆகிவிடாது , நமது முதல்வர் இந்த தீர்மானம் ஏற்றியதன்  முலம் தருமபுரி பேருந்து வழக்கில் உள்ளவரை மறைமுகமாக காப்பற்ற செய்யும் அரசியல் அவ்வளவு தான்... இந்த விஷயத்தில்  எல்லா  அரசில்வாதிகளும் அரசியல் செய்ய தான் பார்க்கீறார்கள், உண்மையில் இவர்களுக்கு மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்பது கோரிக்கையும் அல்ல..... அல்லது அந்த மூன்று பேர் மேல் அக்கறையும் அல்ல , சாக கிடக்க இருப்பவர்களிடம் கூட அரசியல் செய்யும் அரக்கர்கள் தான் நம் அரசியல்வாதிகள் .,

சுந்தர்: என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க...
பிரவீன்: ஆமா தம்பி, உயிர் போகும் விஷயத்தில் கூட இவர் கடிதம்  முலம் தான் தெரிவிப்பார் ., ஆனால் மயிர் போகும் விஷயம் (மந்திரி பதவிக்கு ) இவர் டெல்லி போவதும் என்ன என்று சொல்வது., அதே போல் சோனியா காந்தி , வெளி நாடுகளில்  சிகிச்சை மேற் கொண்டு இருக்கிறார் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான், அப்படி இருக்கும் பொது இவர் யாருக்கு கடிதம் அணிப்பினார்  என்பது அவர்க்கு தான் வெளிச்சம்.(யாருமே இல்லாத விட்டுல யாருக்குட கடிதம்  எழுதுற)  , மேலும் தூக்கு தண்டனை ரத்து செய்ய பரிந்துரைப்பது உள்துறை அமைச்சகத்தின் வேலை, இதை பற்றி இவர் எத்தனை முறை சிதம்பரமிடம்  பேசினார் என்பதும் அவர்க்கு தான் வெளிச்சம்.,

சுந்தர்: சரி அண்ணே இப்ப அந்த மூணு பேருக்கு ஆயுள் தண்டனையா  இல்ல தூக்க தண்டனையா எது கிடைக்கும்?
பிரவீன்: நியாமாக  பார்த்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை தான் தர வேண்டும், ஆனால்  மனித நேயம், மன்னாகட்டி   என்ற பெயரில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் என்று நினைக்கிறன்.

முடிவுரை : நிதிமன்றத்தின் முன் தண்டனை பெறுவது என்னமோ சின்ன சின்ன தவறுகள் செய்பவர்கள் தான்., நீங்கள் தவறு செய்ய நினைத்தால் பெரிய பெரிய தவறாக செய்யுகள் அப்பொழுது  தான் கருணை, மனிதநேயம் என்று சொல்லி சுலபமாக தப்பித்து விடலாம்.......  

Saturday, September 24, 2011

இரோம் ஷர்மிளா (ஒரு உண்மை அமைதி போராளி).

உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,....தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் வெளிச்சம்......! ஏழு நாள் உண்ணா விரதம், பனிரெண்டு நாள் உண்ணா விரதம் என்று ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அது மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டது.........


ஒரு பக்கம் அண்ணா ஹசாரே 12 நாள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளா 12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும்  வியப்பு அளிக்கிறது...

யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்?
 இவர் அருணாச்சல் பிரதேஷம்,அசாம்,மணிப்பூர்,மேகாலயா, மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில்  நடைமுறையில்  உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை.... 


ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958 ]) என்றால் என்ன ? அவ்வளவு பயங்கர  சட்டமா இது?

  • கண்டிப்பாக ,இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மத்திய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
  • இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
  • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
  • இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
  • இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
  • ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பது தான் இதன் பொருள்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையாகிவிட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் என  விடையளிக்கிறது இராணுவம்.




இரோம் ஷர்மிளாவும் உண்ணா விரதமும்..........

1958 அன்று உருவாக்க பட்ட இச்சட்டத்தின் முலம் பலரை கொன்று குவித்தது இராணுவம், அம்மக்களின்  போராட்டங்களுக்கு  ஒரு விடை கிடைத்த  பாடும் இல்லை, நவம்பர் 2 2000 அன்று  மணிப்பூர் மாநிலத்தில் உள்ள  இம்பால் டவுனில் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டு இருந்த   10 அப்பாவி மக்களை கண்முடித்தனாக  சுட்டு கொன்றது.,அதில் 62 வயது மூதாட்டியும் , 18 வயது Sinam Chandramani, 1988 இல் National Child Bravery Award விருதை பெற்றவர் என்பது கூறிப்பட வேண்டிய ஒன்று .

அப்பொழுது   28 வயது ஆன இரோம் ஷர்மிளா , இச்சட்டத்தை  எதிர்த்து நவம்பர் 4 முதல் உண்ணா விரதத்தை தொடங்கினர்.முன்று நாட்களுக்கு பிறகு (நவம்பர் 7 2000 ) அன்று இவர்  அம்மாநில அரசால் தற்கொலை முயற்சி ("attempt to commit suicide"  under section 309 of the Indian Penal Code) என்று கைதி செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை  இவருக்கு முக்கின்  முலம் திரவ அகாரம் (nasogastric intubation )கொடுக்க பட்டு வருகிறது. இவரை ஒரு வருட காலம் மட்டும் தான்  கைது செய்து சிறையில் வைக்க சட்டம் உள்ளதால் இவரை விடுதலை செய்வதும் மீண்டும் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது..    மனித உரிமைகள் என்று எல்லாம் இருந்தும் இவரை  பன்னிரண்டு ஆண்டு உண்ணா விரதம் இருக்க வைத்து  தான் பார்த்து கொண்டு இருக்கிறது. இவரும் பன்னிரண்டு ஆண்டுகளாக தன் உடலை மட்டுமே ஆயுதமாக  வைத்து போராடி கொண்டு இருக்கிறார்.    

  உண்மையில் உண்மையான போராட்டங்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்றும் முக்கியத்துவம் கொடுத்ததும் இல்லை , பத்திரிகை நண்பர்களும் அதை பெரிது படுத்துவதும் இல்லை....... தன் குடும்பம், தன் பிள்ளை என்று இருக்காமல் , தன் மக்கள் என்று   போராடும் இவருக்கு ஏனோ பாதிக்க பட்ட மாநில மக்கள் தவிர வேறு மாநில மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை,   

தமிழ் இழ பிரச்னை என்றால் தமிழன் மட்டும் தான் போராட வேண்டும்,தெலங்கான   பிரச்னை என்றால் தெலுங்கு  வாழ் மக்கள் மட்டும் தான் போராட வேண்டும் என்று  இருக்கிறதா என்ன....!  இந்தியர்கள் எல்லாம் என் சகோதிர சகோதரிகள்  என்று சொல்லும் நாம் வேறு மாநிலத்தில் உள்ளவர்க்கு ஒரு பிரச்னை என்றால்  ஏன் குரல் கொடுப்பது இல்லை..  இச்சட்டத்தின் முலம் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், சகோதரி இரோம் ஷர்மிளா விற்கும் என் அதரவு தெரிவித்து கொள்கிறேன்., அங்கு நடக்கும் மனித உரிமை மிரல்களே கடுமையாக கண்டிக்கிறேன்....
 
ஜனநாயக உரிமைகள் , போராடும்  உரிமை ஆகியவற்றில் நமக்கு உண்மையாக அக்கறை இருந்தால் , எந்த ஒரு இந்தியனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறதோ,அங்கே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு இந்தியர்களாகிய  நாம்   குரல் கொடுப்போம்...    

Thursday, February 3, 2011

Dont Hurt Others through Your Words

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்..

ஒரு சிறுவன் இருந்தான். பெரிய கோவக்காரன். எப்போது சினம் கொண்டாலும் சினம் வரச் செய்தவரைத் திட்டித் தீர்த்துவிடுவான். அவன் தந்தை ஒரு நாள் அந்தச் சிறுவனை அழைத்து ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்து 'தம்பி. இனி மேல் ஒவ்வொரு முறை நீ யாரையாவது கோவித்து சுடுவார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் நம் வீட்டு வேலியில் இந்தப் பையிலிருந்து ஒரு ஆணியை எடுத்து அறைய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் ஒரு ஆணியையும் அறையாமல் இருந்தால் அப்போது எனக்கு வந்து சொல்' என்று சொன்னார். பையனும் அப்படியே செய்து வந்தான்.

முதல் நாள் வேலியில் 37 ஆணிகள் இருந்தன. மறு நாள் அந்த எண்ணிக்கை குறைந்தது. நாட்கள் செல்ல செல்ல ஆணியை அறைவதை விட சினத்தை அடக்குவதும் சினம் கொள்ளாமல் இருப்பதும் பையனுக்கு எளிதாக இருந்தது. சில வாரங்களில் சினம் கொள்வதே இல்லாத நாட்களும் வந்தன. ஆணிகளை அறைவதும் நின்றது. ஒரு மாதம் எந்த ஆணியும் அறையாமல் நாட்கள் சென்ற பின் தன் தந்தையிடம் பையன் சென்று சொன்னான். மிக்க மகிழ்ந்த அந்தத் தந்தை 'மகனே. இப்போது உனக்குப் புதிய வேலை. நீ அறைந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு. எல்லா ஆணிகளும் பிடுங்கிய பின் வந்து சொல்' என்றார். ஆணிகளை அறைவதை விட அதைப் பிடுங்குவது பெரும் வேலையாக இருந்தது. எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பின் தந்தையிடம் வந்து சொன்னான் சிறுவன். தந்தை அவனை அழைத்துக் கொண்டு வேலி அருகில் சென்று 'பார்த்தாயா. நீ எல்லா ஆணிகளையும் பிடுங்கி விட்டாய். ஆனாலும் ஒவ்வொரு ஆணி இருந்த இடத்திலும் ஒரு துளை இருப்பதைப் பார். இந்த துளைகள் அவ்வளவு விரைவில் மறையாது. நீ சினம் கொண்டு சுடு சொற்கள் சொல்வது இந்த வேலியில் ஆணிகளை அறைவது போலத் தான். எவ்வளவு தான் ஆணிகளை அறைந்த பின் அவற்றை நீக்குவது போல் மன்னிப்பு கேட்டாலும் இந்த வேலியில் இருக்கும் துளைகளைப் போல் சினத்தினால் ஏற்பட்ட வடுக்கள் என்றுமே மனத்தில் இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்'.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.


நன்றி "கூடல்"

Thursday, January 6, 2011

Philosophy of Life

ஒரு கல்லூரியில் வாழ்க்கைத் தத்துவ வகுப்பு.

பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

பின்னர் பேராசிரியர் ஜாடிக்குள் சிறு சிறு கற்கண்டுகளைப் போட்டார்.. வெல்லக்கட்டிகளின் இடைவெளியில் கற்கண்டுகள் புகுந்து இடத்தை அடைத்துக்கொண்டன.. பின்னும் வினவினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

அதன் பின்னர், சீனியை ஜாடிக்குள் விட்டார்.. மென் துகள்கள் வெல்லக்கட்டிகளுக்கும், கற்கண்டுகளுக்கும் இடையில் இருந்த வெளியை நிரப்பின.. மீண்டும் கேள்வி எழுப்பினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

இம்முறை, மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.. "ஆம் அய்யா..!"

புன்னகைத்த பேராசிரியர், இம்முறை ஜாடிக்குள் இரண்டு கோப்பை பாலை ஊற்றி, "இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?" என்று வினா எழுப்பினார்..

மாணவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. எவராலும் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.. ஏற்கனவே சிலமுறை கூறி, தவறாகிப் போய்விட்டதல்லவா..?

பேராசிரியர் இப்போது சொன்னார்..

மாணவச் செல்வங்களே.. இதுதான் வாழ்க்கை.. வெல்லக்கட்டிகள் உங்கள் வாழ்வின் மகத்தான விடயங்களை குறிப்பவை.. கடவுள், பெற்றோர், கல்வி, உறவுமுறை, நற்பழக்கங்கள் போன்றவை..

கற்கண்டுகள், உங்கள் வேலை, இல்லம், கார் போன்ற முக்கியமான அம்சங்களைக் குறிப்பவை.

சீனி, மற்ற சிறு சிறு விடயங்களின் மாதிரி வடிவம்.. திரைப்படம், கேளிக்கை, உல்லாசப்பயணங்கள் போன்றவை.

உங்கள் வாழ்வில் சீனிக்கே முன்னுரிமை கொடுத்தால், வெல்லக்கட்டிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.. கற்கண்டுகளால் உங்கள் வாழ்வை இட்டு நிரப்ப வகையில்லாமல் போய்விடும்..

எனவே எதை முதலில் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வாழ்வை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் திட்டமிடுங்கள்..!