Sunday, February 7, 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


பற்றற்று இரு! ஆனால் செயல்கள் தொடர்ந்து நடைபெறட்டும். இடைவிடாமல் தொடரட்டும். உனது மூளை மையங்கள் விழிப்புடன் செயல்படட்டும். ஒரு அலை கூட மனத்தை வெல்ல அனுமதிக்காதே. ஒரு அன்னியன் போல், ஒரு யாத்திரீகன் போல் இவ்வுலகில் செயல்படு. ஓயாமல் உன் கடமையைச் செய். அதே நேரத்தில் உன்னை பந்தப்படுத்திக் கொள்ளாதே. பந்தம் பயங்கரமானது என்பதை நினைவில் கொள்.

செயலற்று   இருப்பதை முற்றிலும் தவிர்த்து விடு. செயலில் ஈடுபடும் போது எதிர்ப்பைத் தவிர்க்க முடியாது. மனம் மற்றும் உடல் சம்பந்தமான எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எதிர்ப்பிதில் வெற்றி பெற்ற பின்னரே அமைதி வரும். 
  - சுவாமி விவேகானந்தர்.

No comments:

Post a Comment