Sunday, February 7, 2016

சாந்தி மந்திரம்

சாந்தி மந்திரம்
=============

எந்த ஒரு காரியத்தை  செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்.

சாந்தி மந்திரங்கள் நம் ரிஷிகளின் அனுபவக் கருவூலங்கள். பொதுவாக, உபநிஷதங்கள், ஸூக்தங்கள், போன்றவற்றைப் படிக்கும் பொழுது, துவக்கத்திலும் கடைசியிலும், இவை ஓதப்படுகின்றன.

வேத மந்திரங்கள் அனைத்தும், இறுதியில் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி என்று நிறைவு பெறுவதைக் காணலாம்.

'சாந்தி'  என்றால் அமைதி , மூன்று  விதமான துன்பங்களிலிருந்து நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்று வகை துன்பங்கள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம்: நம்மால் நமக்கு வரும் துன்பம்; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் நமக்கு வரும் துன்பங்கள்.

3. ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் துன்பம்,   மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை....

மூன்று முறை சொல்லுவதன் மூலம், இந்த மூவகைத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்காகப் பிராத்தனை செய்கிறோம்.



சாந்தி மந்திரம் .
-----------------------

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம்
கரவா வஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
   
(குறிப்பு :  ஒரு எழுத்தின் கீழே போடப்படும் கோட்டிற்கு அந்த எழுத்தைக் கொஞ்சம் மெதுவாகவும், எழுத்தின் மேல் கோடு போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தைக் கொஞ்சம் நீட்டியும், கொஞ்சம் உரத்தும் சொல்ல வேண்டும்.)

பொருள்:
-------------

ஆச்சாரியர்! சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!


 

No comments:

Post a Comment