Sunday, June 26, 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுளை வழிபடுவதற்கு நீங்கள் உருவம் ஒன்றைக் கண்டுப்பிடிக்கலாம் ஆனால் அதைவிட மிக நல்ல உருவம் ஏற்கனவே உள்ளது, அது தான் மனிதன்.

நீங்கள் கடவுளை வழிபட ஒரு கோவில் கட்டலாம். அது நல்லது தான். ஆனால் அதை விட மிகவும் நல்லது, மிகவும் உயர்ந்தது ஏற்கனவே இருந்து வரும் மனித உடலே.



செயல்முறை வேதாந்தம் என்ற தலைப்பில் ஸ்வாமி விவேகானந்தர் ...

Wednesday, June 1, 2016

கடோபநிஷத் 1.1.8


விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்குரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறுவதுபோல், விருந்தினரை உபசரித்தல் என்பது இந்தியாவில் ஒரு காலத்தில் வழிபாடாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்துவத்தை இங்கே மந்திரிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

ஆசா ப்ரதீசேஷ ஸங்கதம் ஸூந்ருதாம் ச இஷ்டாபூர்தே புத்ரபசூம்ச்ச ஸ்ர்வான் |
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்யால்பாமேதே ஸயஸ்யானச்னன் வஸதி ப்ராஹ்மனோ க்ருஹே ||
  -( கடோபநிஷத்- 1.1.8)

āśā-pratīkṣe saṁgataṁ sῡnṛtāṁ ceṣṭāpῡrte putra-paśῡṁś ca sarvān
etad vṛṅkte puruṣasyālpamedhaso yasyānaśnan vasati brāhmaṇo gṛhe.

-  ( Katha Upsanishad 1.1.8)

பொருள் : யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்ப புத்தி உடையவனான அவனது நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது.


Meaning : “Of the person in whose house a guest starves, is not being given, even when asked for; of that person, the guest goes away taking all virtues and merits, and also the lives of all his children and cows; all these are destroyed.”

When God is turned out of a house, anything can happen, is what is suggested by this. There is a beautiful story in the Chhandogya Upanishad, of a poor man who went for alms. When people refused him, he asked: “Do you know to whom you are refusing to give? To the Universal Prana!” They were frightened to hear this, and called him back and offered alms. The spiritual man is a godly man; a saint is a divine person. And hence, the atithi who is coming either to bless you or to test you may go away, taking everything of yours, if you turn a deaf ear to him.

When Yama returned to his abode, his courtiers told him: “Lord, a guest has come; an uninvited guest. Who is more important than he! He is God who has come as the universal fire.” Yama answered: “Please him. Let him not burn; give him water!”

மதுராஷ்டகம்





  1. அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்
    ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்
    ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்
    ம‌துராதிப‌தே ரகில‌ம் ம‌துர‌ம்
 (உன் இதழும் இனியது; முகமும் இனியது;
 கண்கள் இனியது; சிரிப்பும் இனியது  
இதயம் இனியது; நடையும் இனியது 
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!) 
2.      வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம் 
(உன் சொல்லும் இனியது; குணமும் இனியது
உடைகள் இனியது; உடலும் இனியது
இயக்கம் இனியது; உலவல் இனியது
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)

  1. வேணுர் மதுரோ ரேணுர் மதுர:
    பாணிற் மதுர: பாதௌ மதுரௌ
    ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்
    மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)

4.      கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
5.      கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
6.      குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
7.      கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
8.      கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
இதி மதுராஷ்டகம் சம்பூர்ணம்.!
இங்ஙனம் இனியவை எட்டும் நிறைவே!
-ஸ்ரீ வல்லபாச்சார்யர்