- அதரம் மதுரம்
வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
2. வசனம் மதுரம் சரிதம்
மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
- வேணுர் மதுரோ
ரேணுர் மதுர:
பாணிற் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
4. கீதம் மதுரம் பீதம்
மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
5. கரணம் மதுரம் தரணம்
மதுரம்
ஹரணம் மதுரம் ரமணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஹரணம் மதுரம் ரமணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
6. குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
7. கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(உன் தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
8. கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
(ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!)
இதி மதுராஷ்டகம் சம்பூர்ணம்.!
இங்ஙனம் இனியவை எட்டும் நிறைவே!
-ஸ்ரீ வல்லபாச்சார்யர்
No comments:
Post a Comment