திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விலை போகிவிட்டார். அவரை திமுக அல்லது பாஜக ஆட்டி வைக்கிறது என்ற கருத்து மிகமிக கேவலமான கருத்து..... எதிர்கட்சியினரிடமும் நட்பு பாராட்டி சேர்ந்து ஆட்சி நடத்துவது குற்றமா..? இன்னும் எத்தனை காலம் தான் எதிர்ப்பு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவார்கள்..?
திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாசத்தை உலகுறியும்..... தனக்கு நடந்த அவமானங்களை வெளியே சொன்னது குற்றமா..? அவர் சுமத்திய அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளது.... இந்த 60 நாட்களில் அவருக்கு இவர்கள் கொடுத்த மன உளைச்சல் அளவே கிடையாது.....
கட்சிக்கு தன்னால் பங்கம் ஏற்பட்டு விட கூடாது என்று தான் ஒவ்வொரு தொண்டனும் அமைதியாக இருக்கிறான்... அதை இவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு செய்த அரசியல் மிகவும் கீழ்தரமானது... திருமதி சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் அறிக்கைகளும் பேட்டிகளும் மிகவும் எரிச்சல் தரக்கூடியதாக இருந்தது.....
திருமதி சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தார் செய்யும் கேவலமான அரசியலுக்கு உடன்படுபவர்கள் விசுவாசி, உடன்படாதவர்கள் விலை போகிவிட்டார்கள் என்பது சனநாயகத்திற்கு எதிரான ஒரு கருத்து....
இன்று பன்னீர் செல்வத்தின் பெட்டிக்கு திமுக மற்றும் பாஜக காரணம் என்று சொல்வது, உண்மையை திசை திருப்பம் செயலாக தான் பார்க்க முடிகிறது. காரணம் பின்வரும் நிகழ்வுகள்.....
நிகழ்வு 1: இதுவரை உள்ள நடைமுறையில், தமிழகத்தை ஆளும் முதல்வர் டெல்லி சென்றால் அவரை அங்குள்ள எம்.பி கள் வரவேற்று முதல்வர் செல்லும் வரை அவர் கூட இருந்து அவரை வழியனுப்புவது தான் முறை... ஆனால் திரு பன்னீர் செல்வம் அவர்கள் முதல் முறை டெல்லி சென்ற போது அவரை வரவேற்க திரு தம்பிதுரை மட்டும் தான் விமான நிலையத்திற்கு வந்தார், அவரும் முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பின் போது முதல்வர் தன்னிச்சையாக பேசுகிறார் என்று காரணம் காட்டி பாதியிலே சென்று விட்டார்..... பிரதமருடன் சந்திப்பு முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் வேளையில் அவரை வழியனுப்ப ஒருவரும் செல்லவில்லை.... துணைக்கு போன அப்போதய தலைமை செயலர் திரு ராம் மோகன் ராவ் கூட தனுக்கு டெல்லியில் வேலை இருப்பதாக கூறி விலகி கொண்டார்.... இது முதல்வருக்கு நடக்கும் அவமானமல்லவா, இதே நடைமுறையை செல்வி செயலலிதா அவர்களுக்கு செய்து இருப்பார்களா...? இப்படி புறக்கணித்தவர்கள் மேல் ஏன் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை..? இந்த நிகழ்வில் எங்கே திமுக பாஜகவை தொடர்பு படுத்த முடியும்.....?
நிகழ்வு 2: ஒரு முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ கள், அவருக்கு எதிராகவும் , தொடர்ந்து வேறு ஒருவருக்கு ஆதரவாகவும் பேட்டியளித்து வரும் நிலையில் ஏன் இதை கட்சியின் தலைமை தடுக்கவில்லை..? இது யார் தவறு...? இதில் உச்சகட்டமாக மக்களவை துணை சபாநாயகர் (கட்சி பாகுபாடு இன்றி பொதுவாக செயல்பட வேண்டியவர்) அவருடைய லெட்டர் பைடில் திருமதி சசிகலா தான் முதல்வராக வேண்டும் என்று சொல்லுவது எவ்வகையில் நியாயம்....? கட்சியும் தலைமையும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்ற இற வெங்காய கதைகள் பேசுபவர்கள், ஏன் செல்வி செயலலிதா அவர்கள் இறந்த அன்றை திருமதி சசிகலாவை முன்மொழிந்து இருந்திருக்க கூடாது....?
நிகழ்வு 3: சல்லிக்கட்டு விசயத்திற்க்காக பிரதமரை சந்திப்பதாக திரு தம்பிதுரை அவர்கள் தலைமையில் எம்.பி.கள் முதல் முறை சென்ற போது அவர்கள் திருமதி சசிகலா சார்பாக தான் சென்றார்கள், அங்கு எந்த ஒரு இடத்திலும் முதல்வர் பெயர் சொல்லவேயில்லை...... அவர்களின் முழு துதியும் சசிகலா மேல் தான் இருந்தது.... இது முதல்வருக்கு அவமானம் இல்லையா...?
நிகழ்வு 4: இதே பிரச்னை முன்னிறுத்தி முதல்வர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் பிரதமரை சந்திக்க சென்ற போது வேண்டுமென்றே போட்டியாக திரு தம்பிதுரை சார்பாக பிரதமரை சந்திக்க சென்றது கேவலமாக இல்லையா...? இது தமிழ்நாட்டிற்க்கே ஒரு இழுக்காக தெரியவில்லையா...? மத்தியரசின் துணையால் சல்லிக்கட்டிற்கு நடுத்துவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு இருந்த நிலையில் மத்தியரசை வசைபாடியது தேவையா..?. இப்படி தொடர்ந்து தன்னிசையாக செயல்பட்டு வந்த திரு தம்பிதுரையை ஏன் கட்சியின் தலைமை கட்டுப்படுத்தவில்லை..? இவர்களையெல்லாம் கட்டுப்படுத்தாமல் பண்ணீர் மேல் மட்டும் நடவடிக்கை ஏன்..? சென்னை மெரினா கலவரத்தில் தவறு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க விசாரணை குழு அமைத்ததனாலா..?
இதுப்போல பல நிகழ்வுகளை சொல்லிக்கொன்டே போகலாம்..... செய்யும் தவறு எல்லாம் இவர்கள் செய்து விட்டு மற்றவர்கள் மேல் பழிபோடுவது தவறு......
இன்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை பொருளார் பதவியிலிருந்து நீக்குவதாக திருமதி சசிகலா கூறுகிறார்.... முதலில் அவருக்கு அந்த தகுதி உள்ளதா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.... இரண்டாவது திரு ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினால் கட்சிக்கு தான் பாதிப்பு அவருக்கு அல்ல....
திருமதி சசிகலாவின் கையில் அதிமுக என்பது குரங்கு கையில் பூமாலை என்பது போல தான் உள்ளது.... புரட்சி தலைவர் என்றும் எங்கள் இதய தெய்வம் திரு எம்.சி.ஆர் அவர்கள் தொடங்கிய கட்சியை, செல்வி செயலலிதா அவர்கள் அரண் போல காத்து வந்த மாபெரும் இயக்கத்தை குழி தோண்டி புதைக்காமல் சசிகலா விடமாட்டார் போல் இருக்கிறது....
சசிகலா புஷ்பா முதல் கே.பி.முனிசாமி, பி.எச்.பாண்டியன்,மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர் செல்வம் என்று எதிர்ப்பாளர்கள் பட்டியல் நீண்டுக்கொன்டே போகிறது......
-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:
Post a Comment