Friday, January 27, 2017

காவல்துறையை வசைபாடும் முன் சற்று சந்திப்பீர்....

கலவரத்தில் ஈடுபட்ட அத்தனை காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை......   அவர்கள் செயல் எந்த வகையிலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை

அதேப்போல் ஒரு சில காவலர்கள் தவறு செய்தார்கள் என்பதற்க்காக ஒட்டுமொத்தமாக அத்தனை காவலர்களையும் துரோகிகள்/அரக்கர்கள்  என்று வசைபாடுவது ஏற்க முடியவில்லை.......!

மழை, வெள்ளம்,புயல், என்று பாராமல்  24/7 நமக்காக உழைத்து கொண்டு இருப்பவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி இது தானா....?

உண்மையில் போராட்டம் அறவழியில் நடந்ததால் காவல்த்துறையினர் அவர்களது முழு ஒத்துழைப்பையும் தந்தார்கள் அல்லவா......

போராட்டத்தை கலவரத்தில் தான் முடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வதந்திகள் பரப்பி கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் மறுக்க இயலாது.....

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்று எந்த காவல் துறை அதிகாரிகளோ, தமிழக  அரசோ சொல்லவில்லை......    ஏன் என்றால் அரசுக்கும், காவல் துறைக்கும் தெரியும் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வைத்து தாக்குபவர்கள் அல்ல...... மாறாக  அஹிம்சை முறையில் போராடி வெற்றி பெறுபவர்கள்......

மாணவர்களின் போராட்டம் அமைதியாக வெற்றியடைந்து விட கூடாது என்பதில் ஒரு சில சமூக விரோத அமைப்புகள் முனைப்போடு இருத்தது..... அதனால் தான் காவல்துறையினர் பெண்கள்/குழந்தைகள் மேல்  தடியடி நடத்தியாக வதந்திகள் பரப்பி கலவரத்திற்கு தூபம் இட்டார்கள்......  (இந்த வதந்தி ஆறு நாட்களாகவே பரப்பி கொண்டு தான் இருந்தார்கள்). இவர்களுக்கு உதவும் விதத்தில் ஒரு சில கேடுகெட்ட தொலைக்காட்சிகளில், 'மாணவர்கள் மீது போலீசார் தடியடி' என தவறான செய்தி பரப்பினர்.   இந்த செய்தியின் தாக்கத்தால்  'சீல்' வைக்கப்பட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்டு வன்முறையை வெடிக்க வைத்தனர்.

லத்தியில்லாமல் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். காலியான 'சின்டெக்ஸ்' குடிநீர் தொட்டிகளை ரோடுகளில் உருட்டி விட்டனர்.  காவல் நிலையம் மேல் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன, அவர்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டன.....  இவையெல்லாம் நியாயமா சிந்திப்பீர்....? ஏன் காவலர்களுக்கு உயிர் இல்லையா..... அவர்களுக்கும் குடும்பம் இல்லையா, இவர்கள் மட்டும் தாக்கப்படலாமா..?   இன்று கலவரக்காரர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் ஏன் கலவரத்தில் பாதிக்கப்பட்ட காவல்துறை பற்றி சிந்திக்க மறந்திர்கள்...... 

கலவரக்கார்கள் திட்டமிட்டு காவலர்கள் மேல் தாக்கும்போது காவலர்கள் என்ன செய்ய முடியும்....? ஒன்று திரும்பி தாக்கி கலவரம் செய்பவர்களை  ஒடுக்க வேண்டும் அல்லது அவர்களிடம் அடிபட்டு சாக வேண்டியது தான்.....

காக்கி உடையணிவதால் அவர்கள் வேறு யாரோ என்று நினைக்க வேண்டாம், அவர்களும் தமிழர்கள் தான்..... அவர்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கு, அவர்களுக்குள் ஓடுவது தமிழ் ரத்தம் தான்....

இதில் எத்தனை பேருக்கு கடந்த ஆண்டு ஆம்பூரில் நடந்த கலவரம் தெரியும் என்று தெரியவில்லை.... அன்று வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்ட காவல் துறையினர் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்பட்டனர்... அத்தனை காவலர்களையும் கடுமையாக தாக்கினார்கள் கலவரக்கார்கள்..... ஆண் காவலர், பெண் காவலர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் தாக்கபட்டனர்.... அந்த தாக்குதலில் பெண் காவலர்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளுக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்...... இன்று காவலர்களுக்கு எதிராக MEME'ஸ் போடுபவர்கள் அன்று எங்கு சென்று இருந்தார்கள்...?  கலவரம் செய்தவர்கள் ஆதரவாக ஒரு கோஷ்டி வந்து வழக்கு போட கூடாது என்கிறார்கள்.. அரசும் வாக்கு வங்கி பாதிக்கும் என்று பயந்து நடவடிக்கை எடுக்க முனைப்பு அன்று காட்டவில்லை.... அப்பொழுது மனித உரிமை ஆர்வலர்கள் எங்கு சென்றார்கள்.... ? இப்படி பல நிகழ்வுகள் உண்டு..... எல்லா சந்தர்ப்பங்களும் காவல் துறையினர் தாக்கப்படும் போது அவர்களுக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை மாறாக கலவரக்கார்கள்  மேல் வன்முறை என்று தான் காவலர்கள் மேல் குற்றம் சாட்டப்படுகிறார்கள்  .....(கலவரக்கார்களுக்கு வந்தால் ரத்தம், காவலர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா......? இது எந்த வகையில் நியாயம்..?)

இன்று காவல்துறையை கடுமையாக வசைபாடும் அன்பர்களே, அடுத்து வரும் நாட்களில் நீங்கள் திருவிழா, அரசியல் தலைவர் பொதுக்கூட்டம், கும்பாபிஷேகம்,  போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு பந்தோபஸ்துக்கு வரும் காவலர்களை எங்காவது பார்த்ததால் அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி பாருங்கள் அவர்கள் வலி உங்களுக்கு தெரியும்...... 

கோவையில் பிரதமர் வருகிறார்கள் என்றால் வேலூரில் இருந்து காவலர்கள் அழைத்து வருகிறார்கள்.... ஏன் கோவையில் பந்தோபஸ்து அளிக்க போதிய காவலர்கள் இல்லையா..... உண்மையில் இல்லை, எந்த ஒரு மாவட்டத்திற்கும் போதிய காவலர்கள் இருப்பு இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்....... எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும்   பக்கத்துக்கு மாவட்டங்களில் இருந்து தான் காவலர்கள் அழைத்து வருகிறார்கள்.....  அப்படி பக்கத்துக்கு மாவட்டத்திற்க்காக வரும் காவலர்கள் உண்ண உணவு நடு தெருவில் தான்....   ஒய்வு அப்படினா என்ன .... என்பது தான் அவர்கள் பதில், பந்தோபஸ்திற்கு வரும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க படும் அவஸ்தை பற்றி என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா.....? , வெயில் மழை என்று பாராமல் எத்தனை மணி நேரம் நின்று கொண்டு இருக்க வேண்டும் என்று தெரியுமா, முக்கிய தலைவர்  ஒருவர் மாலை வருவதற்கு காலை முதல் நின்று கொண்டு இருக்க வேண்டும்,   ஒரு வேலை இவர்கள் எங்காவது அசந்து தூங்கிவிட்டால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் காவலர்கள் அலட்சியம் என்று பரப்பி அவர்கள் வேலைக்கே உலை வைப்போம்..... நன்றி கேட்ட மனிதர்கள் நாம்.....

அரசு துறைகள் அத்தனைக்கும் அவர்களின் குறைகளை  வெளிப்படுத்த தனி தனி சங்கங்கள் இருக்கு, ஆனால் தங்கள் குறைகளை வெளிப்படுத்த முடியாத ஒரே அரசு துறை காவல்துறை மட்டும் தான்..... ஏன்யென்றால் காவல் துறைக்கு சங்கங்கள் அமைக்க தடை.....    ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் எத்தனை நடைமுறைகள் அவர்கள் கடக்க வேண்டியிருக்கும் என்று தெரியுமா....?  அப்படி வாங்கும் விடுமுறையும் முழுதாக அவர்கள் கழிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை......

எத்தனையோ தருணங்களில் நமக்கு காவல் துறை உதவி செய்து இருந்திருக்கிறது, என்றாவது அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்து இருக்கிறோமா.......   ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக அத்தனை காவலர்களையும் வசைபாட தான் நம்மால் முடியும்....  தவறு செய்யும் காவல்துறையினர் மேல் புகார் அளிப்போம், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க போராடுவோம்..... அது நம் உரிமை....... அதை விட்டு அத்தனை பேரையும் வசைபாடி நமக்கென்ன லாபம் கிடைத்து விடப்போகிறது ...?  

காவலர்களும் மனிதர்கள் தான்.... அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள் அவர்கள் வலி உங்களுக்கு தெரியும்.......

-பிரவின் சுந்தர் பூ.வெ.

Friday, January 20, 2017

Why I Support O.Panneer Selvam


எனக்கு தமிழக  M.L.A மற்றும் M.P கள் மேல் சிறிதளவும் நம்பிக்கையில்லை......   பணத்திற்க்காகவும், பதவிக்காக இவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்..........

இவர்களுக்கு மத்தியில் நமது முதலமைச்சர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் மேல் மிகந்த மரியாதை உள்ளது, காரணம் இவருடைய நடவடிக்கைகள் தான்....

இவரை சமூக வலைத்தளங்களில் மரண கலாய் கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள், அது உங்கள் உரிமை அதை நான் தடுக்கவில்லை.... ஆனால் சற்று சிந்தியுங்கள் தமிழக பிரச்சனைகளுக்காக எத்தனை முறை கடந்த முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை பார்த்தார்கள்.....?

இலங்கையில் கொத்து கொத்துக்காக நம் சொந்தங்கள் கொல்லப்படும் போது கூட, மந்திரி சபையில் தனக்கான இலாகா பெற்று கொள்ள தான் அப்போதைய முதல்வர் சென்றார்.... மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் கடிதம் எழுதிவிட்டு தன் கடமை முடிந்ததாக நினைத்து கொண்டு இருந்தார்கள். இதில் திமுக அதிமுக எல்லாம் ஒன்று தான்..... யாரும் யோக்கியர்கள் அல்ல.....

கடந்த ஒரு மாதத்தில் ரெண்டு முறை பிரதமரை மக்கள் பிரச்சனைக்காக டெல்லி சென்று சந்தித்தது உள்ளார்..... 




சுனாமி ஏற்பட்டபோது ஹெலிகாப்டரில் தான் அப்போதைய முதல்வர் சென்று பார்த்தார்.... கடந்த மாதம் வந்த வர்தா புயலின் போது நேரில் சென்று பார்த்தது யார்.... நம் முதல்வர் திரு பன்னீர் செல்வம் தான்.....



சென்னை மக்கள் குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் பெற போன வாரம் ஆந்திரா சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து பேசி உள்ளார்.....




இவர் தினமும் தலைமை செயலகம் செல்கிறார், இவர் செல்கிறார் என்பதற்காக போலீஸ் எந்த இடத்திலேயும் போக்குவரத்து நிறுத்தப்படுவதில்லை.....

கடந்த காலங்களில் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அத்தனை பெரும் வசைபாடினார்கள், இப்பொழுது கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது....


மிகவும் எளிமையான மனிதர், இவருக்கும் சிறிது வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே.....!

மக்களுக்காக இவர் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதால் இவர் மேல் கட்சி தலைமை கடுமையான கோபத்தில் உள்ளது..... இவருக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் இருந்தாலும், இவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது மக்களாகிய நம் கடமையும் அல்லவா....... 

மக்களுக்காக போராடும் எளிமையான முதல்வரா அல்லது கடிதம் மூலம் மட்டும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் மற்ற கழக முதல்வர்களா சிந்தித்தது செயல்படுங்கள்.....

-பிரவின் சுந்தர் பூ .வெ

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு - மத்திய அரசு உண்மை நிலவரம்

ஓ.பன்னீர் செல்வம் mixture சாப்பிடுகிறாரா....?


நமது முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் Mixture சாப்பிடுகிறாரா, அல்லது வாயில் கொழுக்கட்டை வைத்து உள்ளாரா என்பது தேவையில்லாத விமர்ச்சனம்...... நமது போராட்டதிற்கு சிறிதுமளவும் பயன்படாத ஒன்று.....
நமது போராட்டத்தின் குறிக்கோள் எவ்வகையிலும் தடம்மாற கூடாது..... நமக்கு சல்லிக்கட்டு வேண்டும், நாட்டு பசுக்கள் பாதுக்காக்க பட வேண்டும், PETA என்ற தீய சக்தி இந்திய நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்....... இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாடு அழிக்க நினைக்கும் எந்த தீய சக்தியும் இனி வரும் காலங்களிலும் அனுமதி தர கூடாது..... மேலும் Animal Welfare Board of India (AWBI) என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்திலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளான பூர்வா ஜோஷிபுரா (Poorva Joshipura) கண்டிப்பாக நிக்க வேண்டும்..... மேலும் இந்த வாரியத்திலுள்ள PETA உறுப்பினர்கள் அத்தனை பேரையும் உடனடியாக நிக்க வேண்டும்....

எனது அருமை சகோதர சகோதிரிகளே, நமது போராட்டம் மாநில அரசுக்கு எதிராதனாக மாற்றுவதில் எந்த பயனுமில்லை........... ஒரு சில விஷமிகள் இதில் அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்கிறார்கள்.....

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இருந்த வரை, சல்லிக்கட்டு விசயத்தில் கடுமையாக போராடினார் என்பதில் யாருக்கும் இங்கு மாற்று கருத்து இருக்க முடியாது.....

புதிதாக பொறுப்பேற்று உள்ள ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், கடந்த முறை பிரதமரை சந்திக்கும் போது எடுத்துரைத்தார் என்பது மறுப்பதற்கில்லை....... இன்றும் பிரதமரை சந்தித்து சல்லிக்கட்டிற்கு அவரசம் சட்டம் பிறப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.......

உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முதல்வர் செல்வி செ. செயலலிதா அவர்கள் தலைமையில் இருந்த அதிமுக அரசு கடுமையான வாதத்தை முன்னிறுத்தியது, அதில் காளையை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தவறு....எங்கள் செல்ல பிராணியை கொடுமைப்படுத்துகிறோம் என்பது ஏற்க முடியாத குற்றசாட்டு என்றும் வலியுறுத்தினார்கள்....

மத்திய அரசும் தன் வாதத்தை கடுமையாக தெரிவித்தது, இருந்தும் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.... ஏன்..?

உன்மையில் சல்லிக்கட்டிற்கு தீர்வு எங்குள்ளது , எப்படி கிடைக்கும்......

சல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு தரும் அதிகாரம் மாநில அரசு கையில் இல்லை, தற்காலிகமான தடை விதிக்கும் அதிகாரமும் மாநில அரசு கையில் இல்லை.....

மத்திய அரசு, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக வாதிட்டாலும், அது செய்த மிக பெரிய தவறு, காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிருந்து காளையை இன்னும் நீக்காமல் இருப்பது தான்... காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிருந்து காளையை எடுத்தாலே போதும்...... உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும்.....

இதற்கு ஏன் தயங்கிறது மத்திய அரசு.....?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை உடைக்கும் வகையில் ஒரு சட்டம் பிறப்பிக்க முடியுமா என்பது சட்ட வல்லுநர்கள் தெளிவு படுத்த வேண்டும்

சல்லிக்கட்டு வழக்கு முழு வாதங்களும் டிசம்பர் 6ஆம் தேதியே முடிந்த நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்காமல், தமிழ் நாட்டில் இவ்வளவு போராட்டம் நடக்கும் போதும் தீர்ப்பு பற்றி கவலைப்படாமல் ஏன் உச்ச நீதிமன்றம் பொறுமை காக்கிறது என்று புரியவில்லை......

மறைந்த முதல்வர் செல்வி சையலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கும் முழு வாதங்களும் முடிந்த ஆறு மாதங்கள் ஆன நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம், மேலும் பல ஆண்டுகளாக ராசீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட முருகன், பேறிவாளன் போன்றோர் விடுதலை செய்ய தொடரப்பட்ட வழக்கும் தேதி குறிப்படாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம், இதில் தான் புதிதாக இணைந்துள்ளது நமது சல்லிக்கட்டு வழக்கும்......

இந்த வழக்கிற்கெல்லாம் எப்பொழுது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து முடித்து வைக்கும்...... ?

இப்பொழுது சொல்லுங்கள் Mixture சாப்பிட்டு கொண்டு இருப்பது யார்.....? நமது முதல்வர் பன்னீர் செல்வமா அல்லது உச்ச நிதிமன்றமா......? சிந்திப்பீர்........!

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு அளிக்காமல் மத்திய அரசோ, மாநில அரசோ எந்த நடவடிக்கை எடுத்தாலும் எல்லாம் தற்காலிகமாக தான் இருக்கும்..... அதை உடனடியாக தவிடு பொடியாக்கி விடுவார்கள்..... People for the Ethical Treatment of Animals (PETA),People for Animals (PFA), Human Society Internationals (HSI), போன்ற அந்நிய தீய சக்திகள்.....

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மத்திய அரசு செய்ய வேண்டியவை.......

விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 11(1)(n) யில் Animal Fighting என்பது குற்ற நடவடிக்கையாகும்.... இந்த சட்டத்திலிருந்து திருத்தும் கொண்டு வர வேண்டும், அதாவது சல்லிக்கட்டு அல்லது ரேக்ளா பந்தயம் அல்லது பாரம்பரியாக நடக்கும் போட்டிகளை Animal Fighting'a கருத கூடாது....
விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 22'ல் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து, காளையை நீக்கும் வகையில், உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்,.

போலீஸ், ராணுவம் பயன்படுத்தும் எந்த விலங்கும், அதேப்போல் அறிவியல் கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும் எந்த விலங்கும், காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகளாக கருதப்படமாட்டாது என்று விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 27'ல் சொல்கிறது.... இந்த பிரிவில் சல்லிக்கட்டு காளைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.....

மேலும் பாரம்பரிய, கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில், தனியாகவும் சட்டம் கொண்டு வரலாம். இது தான் மத்திய அரசு இந்த விசயத்தில் தன்னால் செய்ய முடிந்தது....

எப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருகிறதோ அன்று வரை இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுயில்லை....... அதுவரை அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரும் வாய்ப்புமில்லை...... ஒரு வேலை மத்திய அரசு கொண்டு வந்தாலும் PETA போன்ற அந்நிய பண முதலைகள் அதற்கு தடை வாங்கி விடுவார்கள்....

காத்திருப்போம் உச்ச நீதிமன்றத்தில் நமக்கான தீர்ப்பு விரைவில் வர வேண்டுமென்று......

-பிரவின் சுந்தர் பூ.வெ.

#NeedJusticesoonforJallikattu
#BanPETA
#WeNeedJalikattuPermanently
#SaveourCountryBreeds

Tuesday, January 10, 2017

தேவை உடனடி தீர்வு - காப்பாறுங்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும்



"Digital India" வை ஊக்குவிக்க பல ஆயிரம் கோடி செலவு செய்து பரிசு தரும் அரசுக்கு,  தொடர்கதையாய் இருக்கும் விவசாயின் துயரங்கள் தெரியாது ஏனோ...? 

தினம் தினம் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகள் அல்ல- நம் நாட்டின் பொக்கிஷங்கள்,  புதைக்கப்படுவது  விவசாயிகள் மட்டுமல்ல- நம் நாட்டின் முதுகெலும்பும் தான், இது இப்படியே போனால் இனி வரும் காலங்களில் விவசாயத்தையும், விவசாயிகள் பற்றியும் நாம் வரலாறு பாடங்களில் தான்  பார்க்க வேண்டும்..

"Digital India" , கடலில் சிலைகள் என பல்லாயிரம் கோடிகள் வீண் செலவு செய்யும் அரசால் விவசாய நாட்டில் விவசாயிகளின் துயரத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியவில்லையே...... என்று கிடைக்கும் இவர்களுக்கு விடிவெள்ளி..?

விவசாயத்தையும், விவசாயியையும் மேம்படுத்த தனியாக வரி வசூலிக்கிறது அரசு, இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் வாடிக்கையாளர் மையங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆலோசனைகள் தருவதாக அரசு சொல்கிறது, இருந்தும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க முடியவில்லையே....

பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதற்கு வட்டியும் கட்டாமல், அசலும் கட்டாமல் சொகுசாக வாழும் அயோக்கியர்கள் அல்ல இவர்கள், வாங்கிய சில லட்சங்கள் கொடுக்க முடியாமல், வளர்த்த செடியும் வாடிய போது மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவிகள்.....  இவர்களை காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்தது அரசு.....? 

பொய்த்து போன மழையை நாம் குறை சொல்ல முடியாது.... மழை பெய்தால் அந்த தண்ணீர் சேமித்து வைக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறதா...?... 

ஒருபுறம் தினம் தோறும் அள்ளப்படும் ஆற்று மணல், தென்னிந்தியா முழுக்க மத்திய அரசின் ரயில்நீர் (Railneer)  பாட்டில்களுக்கு நம் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது, மாநில அரசின் அம்மா குடிநீர் திட்டமும் இம்மாவட்டத்திலிருந்த தான் தண்ணீர் எடுக்க படுகிறது, இது போதாது என்று பெரும்பாலான மது ஆலை நிறுவங்களும் இதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது....   ஒரு புறம் கோடி கணக்கில் லிட்டர் லிட்டராக தண்ணீர் எடுக்க(உறிஞ்ச) படுகிறது மறுபுறம் தண்ணீர் இல்லாமல் பல மாவட்டங்கள் தவிக்கிறது......  

நதி நீர் இணைப்பு செய்து அணைத்து மாவட்டங்களையும் தண்ணீர் கிடைக்க செய்யலாமே. நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள நதிநீர் இணைப்பு திட்டம் என்னானது...? அதற்கு செலவு செய்யலாமே பல ஆயிரம் கோடி..... இதற்காக மாநில அரசைகளை கட்டாயப்படுத்தி இத்திட்டம் கொண்டு வரலாமே......! ஏன் இந்த திட்டம் தொடங்கிய இடத்திலே பல வருடங்களாக அப்படியே தூங்கிக்கொண்டு இருக்கிறது.....? ,

ஒரு வருட காலத்தில், ஆந்திராவில் கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் அவர்கள் சாத்தியப்படுத்தி எப்படி காட்ட முடிந்தது..?, தமிழ்நாடு நதிநீர் இணைப்பிற்குகாக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கேட்ட நிதி, பல ஆண்டுகளாக நிலுவையில் தான் உள்ளது....?. ஒரு வேலை மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால் மத்தியரசே எடுத்து செய்யலாமே.....?

நாட்டின் கட்டமைப்பிற்கு செலவு செய்யுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை, அதற்கு முன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....

பசி என்று வந்தால் டெபிட் கார்டையோ, அல்லது கிரெடிட் கார்டையோ அல்லது பணத்தையோ திங்க முடியாது..... சோறும், காய்கறியும் வேண்டும்......   அதற்கு விவசாயிகளும், விவசாயமும் தேவை.....


#savefarmers

-பிரவின் சுந்தர் பு.வெ

பதறது, பதறது.பதறது நெஞ்சம்.


பதறது, பதறது.பதறது நெஞ்சம்.
விதைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

பதறது, பதறது.பதறது நெஞ்சம்.
விதைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

நமக்கெல்லாம் சோறு போட உழைச்சவனே வயக்காட்டில்

நமக்கெல்லாம் சோறு போட உழைச்சவனே வயக்காட்டில் .
உயிரை உரமாக்கி செத்தானே விவசாயி

பதறது, பதறது.பதறது நெஞ்சம்........
விளைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

சாப்ட்வேர்க்கும் ஹார்ட்வர்க்கும்
சாப்பாடு இவர் தான் தந்தார்..
அவர் செத்தால் காப்பாத்த
ப்ரோக்ராம் யார் தருவார்.....

காவேரிக்கு காத்திருந்து
கண்ணீரில் பயிர் செய்தேன்
பச்சை இலை பழுப்பாச்சே,
உதிரும் முன்பே முடுஞ்சி போச்சே

சோறு போடும் சாமிக்கு,
சோகம் ஒன்று வந்திருக்கு....
காலம் தான் மாறுமா, 
போன உயிர் தான் திரும்புமா

பதறது, பதறது.பதறது நெஞ்சம்........
விளைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

 #save farmers


Friday, January 6, 2017

கன்யாதானம் என்றால் என்ன?

கன்னிகாதானம் என்றால் என்ன?,  இத்தானம் செய்வதால் என்ன பயன்...?

இருப்பவர் இல்லாதவர்களுக்கு அன்பளிப்பாக  கொடுப்பது தானம் என்று கருதப்படுகிறது...  இத்தானங்கள் முறையே அன்னதானம், கண்தானம், பூதானம், என பல வகை தானங்கள் நடைமுறையில் உள்ளது....  இவை அனைத்தும் சிறப்பதானது தான், இதில் சிறந்தது இது தான் என்று முடிவு கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.....  உண்மையில் தேவைபடுவோர்க்கு கொடுக்க படும் அத்தனை தானமும் சிறந்தது தான்.....

கன்னிகாதானம் என்ற சொற்றொடர் பெரும்பாலும் தவறாகவே விளக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதெப்படி இருபது-இருபத்தைந்து வருடம் வளர்த்த பெண்ணை தானமாக கொடுப்பது, ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகிறது.

உண்மையில், மற்ற தானங்களை விட இந்த கண்ணிய தானம் மாறுபட்டது, ஏன்யென்றால் மற்ற தானங்கள் கொடுப்பவர் தானம் கொடுத்த பின் உரிமம் கோர முடியாது..... தானம் பெற்றவர்க்கு அது முழு உரிமை சென்று விடும், கொடுத்தவர் அதற்கு மேல் எந்த உரிமையும் கேட்ட முடியாது.... அல்லவா..... ஆனால் கன்னியா தானம் செய்யப்பட்ட பெண்ணானவள் பிறந்த வீட்டிற்கும், புகந்த வீட்டுற்கும் சமமானவன்..... இரண்டு வீட்டிலும் நடக்கும் சுப துக்க காரியங்களுக்கு பங்கு கொள்ளும் உரிமை பெற்றவள்......    இவள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு சடங்கும் முழுமை அடையாது என்று சாஸ்திரம் சொல்கிறது......  (மேற்கோள்: மனைவி இல்லாமல் செய்யும் எந்த ஒரு யாகமும் பூர்த்தி அடையாது/ செய்யவும் முடியாது, கூட பிறந்தவள்/ மகளின்றி செய்யும் நல்ல காரியங்களும் முழுமை அடையாது, இதற்கு பல சான்றுகள் நம் புராண கதைகளில் சான்று உள்ளது).... அதேப்போல் , அப்பெண்னிற்கு  பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது முதல் அனைத்து சுப காரியங்களுக்கும், அவள் கூட பிறந்த சகோதிரன் கண்டிப்பாக தேவை...... இதன் மூலம்   நாம் புரிந்தகொள்ள வேண்டியவை என்னவென்றால் கன்னியா தானம் (திருமணமானவள்) புகுந்த விடு மற்றும் பிறந்த வீட்டிற்கு பொதுவானவள்.....  பிறந்த வீட்டிற்கும் இவளுக்கும் உள்ள தொடர்ப்பு இறுதிவரை தொடரும்,  இவள் கன்யா தானத்திற்கு பின் புகுந்த வீட்டிற்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைப்பது தவறு....

சரி கன்யா தானம் பற்றி நம் சாஸ்திரங்களில் என்ன சொல்கிறார்கள் என்ற விளக்கத்தை பார்ப்போம்

கன்யாதானம் என்றால் கன்யா + தானம் - இது சரிதான்.

ஆனால், கன்னியையே தானமாக கொடுப்பது என்று சொல்வது ரொம்ப தவறான விளக்கம் .

சமஸ்கிருதத்தில், கன்யாதானம் (கன்யா+தனம்) என்றால், மணமாகாத கன்னியான தம் மகளுக்கு தந்தையின் அன்பளிப்பு / சொத்தில் ஒரு பங்கு / பொருட் பரிசு, என்றே அர்த்தமாகிறது.

kanyAdhana = a girl's property, portion, dowry ; (if a girl dies unmarried her property falls to her brother's share)

மேற்குறிப்பிட்ட இப்படியே தான் சமஸ்கிருதத்தில் பல சுலோகங்களிலும் (hymns & verses) விளக்கப் பட்டுள்ளது. இதையேதான், விவாஹசுக்தம் என்ற திருமண கையேட்டு நூலிலும் விளக்கமளிக்க பட்டுள்ளது.


  •  கன்னியை முறையாக தந்தையிடமிருந்து அவளுக்குரிய சொத்துக்களுடன், அவளின்  முழு அனுமதி பெற்றுக் மணந்து கொள்வது "தேவ விவாஹம் (கன்னிகாதானம்)"
  •  மாடு கன்றுகளை கன்னியின் தந்தைக்கு கொடுத்து, ஒருவன் அக்கன்னியை மணப்பது "அர்ஷ விவாஹம்"
  •  சாமானிய முறையில், எந்தக் கொடுக்கல் வாங்கலும் இலலாமல், பெற்றோர்/பெரியவர்கள் பெண்/பிள்ளை பார்த்து, பெற்றோர் சம்மதத்துடன், முன் பின் அறியாதவர்கள், மணம் புரிந்து கொள்வது "பிரஜாபத்ய விவாஹம்"
  •   ஒரு கன்னியை, பணம் கொடுத்து, அதிகாரத்தால், மணந்து கொள்வது "அசுர விவாஹம்"
  •  ஆணும் பெண்ணும், பெற்றோர்களுக்கு தெரியாமல் / அவர்களின் இஷ்டத்துக்கு விரோதமாக, தான் காதலிப்பவரை மணப்பது "கந்தர்வ விவாஹம்"
  •  யுத்தத்தால் மற்றவரை வென்று, அவர் வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்ணை, கட்டாயம் செய்து மணப்பது "ராக்ஷஸ விவாஹம்"
  •  பெண்ணை ஏமாற்றி கபடம் செய்து, பெண்ணுடைய இஷ்டமில்லாமல் மணப்பது "பைசாச விவாஹம்" என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

கன்யா தானம் செய்வதால் பெரும் பயன் என்ன..?

ஒரு தந்தையானவர் தான் வளர்த்த பெண்ணை, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க  கன்யா தானம் செய்து திருமணம் செய்தார் எனில் அவர் தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகின்ற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் சுவர்க்கத்தில் இடம் பெற வழிவகை செய்பவனாகிறான்.... 

தந்தை இல்லாத வீட்டில் கன்யா தானம் யார் செய்வது...?

தந்தை இல்லாத பட்சத்தில், சகோதிரன் கன்யா தானம் செய்யலாம், சகோதிரனும் இல்லாத பட்சத்தில் தாய் வழி வந்த மாமன் செய்யலாம்......  அவரும் இல்லாத பட்சத்தில் தந்தை வழியில் வந்த பெரியப்பா அல்லது சித்தப்பா செய்யலாம்..... இவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் உயிர் தோழனும் செய்யலாம்....

திருமணத்தில் மொய் பணம்(அன்பளிப்பு) தருவது எதற்கு..? 


21 தலைமுறை பயன் பெரும் வகையில் செய்யும் நல்ல காரியத்திற்கு தன்னால் முடிந்த அளவு அன்பளிப்பு கொடுத்து அந்த புணியத்தில் வரும் பயனில் தானும் பங்கு பெறவும் இருக்கலாம்..... (இது என்னுடைய தனி பட்ட கருத்து மட்டுமே)....

பெண் பிள்ளை இல்லாதவர் இந்த தானம் செய்ய முடியாதா...?


இதற்கு தான் நாம் திருமணத்திற்கு செல்லும் போது அன்பளிப்பு அளிப்பது, அதன் மூலம் பெண்னின் தந்தை பெரும் பயனில் ஒரு பங்கு பெறலாம்.... பெண் பிள்ளை இல்லாதோர் முழு பயனும் அடைய வேண்டுமென்றால் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத ஏழை பெண்ணிற்கு, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க திருமணம் தன் சொந்த செலவில் செய்து வைக்கலாம், அப்படி செய்யும் பட்சத்தில் அவருக்கு மறு பிறவி இன்றி நிரந்தரமாக சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.....

இதனால் தான் இத்தானத்தை சிறந்த தானம் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள் போலும்.......!

- பிரவின் சுந்தர் பூ.வெ. 

  

Sunday, January 1, 2017

Aadhar Enabled Payment System என்றால் என்ன?

Aadhaar Enabled Payment System(AEPS)
================================

Aadhaar Enabled Payment System(AEPS)  என்பது ஆதார் கணக்கின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டமாக கருதப்படுகிறது...  இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு அப்போதையை காங்கிரஸ் அரசால் நடைமுறைப்படுத்திய திட்டம்.....  இத்திட்டம் இன்றளவும் நடைமுறையில் தான் உள்ளது.....

இத்திட்டம் நமது இன்றைய பிரதம மந்திரி பொய்யர் திரு மோ(ச)டி அவர்களால் இன்னும் இரண்டு வாரங்களில் துவக்கப்படவுள்ளது என்பது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்..... இந்தியர்கள் அடிமுட்டாள்கள் அவர்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் என்று திரு  மோடி அவர்கள் நினைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது....

காங்கிரஸ் ஆட்சியில் செய்த மிக பெரிய தவறு.... அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை விளம்பரப்படுத்தாதது தான்.....  மக்களிடம்  இவர்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் கொண்டு சேர்க்காதலால் தான்.... அவை எல்லாம் இன்று புதிய திட்டங்கள் போல் திரு மோடி அவர்கள் அறிவித்து கொண்டு இருக்கிறார்.....

சரி Aadhaar Enabled Payment System(AEPS) இத்திட்டத்தின் சாதக, பாதக விஷயங்களை பற்றி தெளிவாக அலசுவோம்.....

AEPS- இத்திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்...?
ஆதார் எண் கொண்ட எந்த ஒரு இந்திய குடிமகனும், இந்தியாவில் இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.....

AEPS- இத்திட்டத்திற்கு செயற்படுத்த அடிப்படை தேவைகள் என்ன..?

இத்திட்டத்தின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கியின் சார்பாக இருக்கும் முகவர் (Business Correspondent), பணம் செலுத்துபவர், பணம் பெறுபவர் என அனைவரும் தங்கள் வங்கி கணக்கை ஆதார்'ல் இணைத்து இருக்க வேண்டும்....  மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த POS கருவி, கை ரேகை பதிவு செய்ய biometric கருவி......ஆதார்'ல் இணைக்கப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தவோ, பெறவோ முடியாது.....

AEPS மூலம் என்னென்ன வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியும்....?

AEPS திட்டத்தின் கீழ் Balance Enquiry, Cash Withdraw, Cash Deposit, Funds Transfer. போன்ற சேவைகள் நாம் செய்ய முடியும்....

AEPS- மூலம் என்னென்ன வங்கி பரிவர்த்தனைகள் நாம் செய்ய முடியாது.....?

AEPS திட்டத்தின் மூலம் Bill Payments செய்ய முடியாது....

AEPS திட்டம் செயல்படுத்தும் Business Correspondent என்பவர் யார்....  ? யாரெல்லாம் இந்த Business Correspondent ஆக இருக்க முடியும்?

தனிமனிதர்கள் (ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்/ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள்/முன்னாள் ராணுவ  வீரர்கள்), மேலும் சிறு தொழில் முனைவோர், மற்றும் அங்கீரிக்கப்பட்ட எந்த ஒரு தொழில் புரிபவர்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.....


எதை மையமாக கொண்டு இந்த பரிவத்தனைகள் நடக்கும்....?
ஆதார் எண் கள் (செலுத்துபவர்,தொழில் முனைவோர்) மற்றும் இருவரின் கை ரேகை..... இந்த திட்டத்தில் கை ரேகை தான் கடவுச்சொல்..... 

இத்திட்டம் செயல்படும் முறை....

முதலில் வாடிக்கையாளர் தங்கள் வங்கி கணக்கிலுள்ள இருப்பு நிலை (Balance Enquiry) அறிய விரும்பினால்...  

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) சொல்ல வேண்டும்.   அடுத்தது தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் இருப்பு நிலை வரும்.....

இரண்டாவதாக பணம் எடுக்க விரும்பினால்.....

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள  வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும் கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் கழிக்க பட்டு சம்பந்த பட்ட பணம் கொடுக்கப்படும்....

மூன்றாவதாக பணம் செலுத்த விரும்பினால்.....

 இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் வரவு(Deposit)  வைக்க வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும் கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....
 
கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு, பரிவர்த்தகனைக்கான ரசீது கொடுக்கப்படும்....

கடைசியாக  வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் (Fund Transfer)  செலுத்த வேண்டுமென்றால்.....

  இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும், பின் பணம் பெறுபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும், பின் அவர் வங்கியின் அடையாள எண்ணை (Bank identification Number) IIN பதிவு செய்ய வேண்டும்.   கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு பற்று வைக்கப்பட்டு, பெறுபவரின் கணக்கிற்கு பணம் மாற்றப்படும், முடிவில் பரிவர்த்தகனைக்கான ரசீது கொடுக்கப்படும்....

வாடிக்கையாளர் இரண்டு அல்லது அதற்கும் மேல் வங்கி கணக்குகள் ஆதார்'ல் இணைத்து இருந்தால்...?

வழக்கமாக இத்திட்டம் மூலம் ஒரு கணக்கிற்கு மட்டும் தான் பரிவர்த்தனை செய்ய முடியும்....  வாடிக்கையாளர் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் அதில் ஏதோ ஒன்றை முதன்மையான கணக்காக (Primary Account) எடுத்துக்கொண்டு அதன் மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.... எந்த வகையில் முதன்மை கணக்கை அது தேர்வு செய்யும் என்பதற்கு சரியான தகவல்கள் வகுக்கப்படவில்லை......

இத்திட்டம் மூலம் எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.....?

RBI வழிகாட்டுதலின் படி உங்கள் கணக்கின் மூலம் எவ்வளவு பரிவர்த்தனை செய்ய முடியுமோ அவ்வளவும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம்......

இத்திட்டத்தின் மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் பெறப்படுமா..?
இதுவரை சேவை கட்டணம் வசூலிக்க படவில்லை..... பின்னாளில் வங்கிகள் விருப்பப்பட்டால் சேவை கட்டணம் வசூலிக்கலாம் அதற்கு தடையில்லை என்கிறது National Payment Corporation of India(NCPI) .....  

இத்திட்டத்தின் மூலம் செய்யும் பரிவர்த்தனை தவறு நடந்தால் (Transaction Failure).

இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் Transaction Failure க்கு முழு பணமும் திருப்ப செலுத்த பட்டுவிடும்.... சராசரியாக .... 23.00 மணி நேரத்தில் பணம் திருப்பி அனுப்பப்படும் என்கிறார்கள்.... 

பணம் வைத்துள்ளவர் இறக்கும் பட்சத்தில் பணம் எடுக்க முடியமா...?

கண்டிப்பாக முடியும், வங்கி கணக்கு வைத்துயிருப்பவர் தன் Nominee குறிப்பிட்டு இருந்தால், அந்த நபர்  தன்னை வங்கியில்  nominee என்று உறுதிப்படுத்தி கொண்டு  பின் சம்பந்த பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம்....  ஒரு வேலை தன் கணக்கில் Nominee குறிப்படாமல் இருந்தால் கடினம் தான்....

உண்மையில் இத்திட்டத்தின் மூலம் Debit/Credit Card மாற்றாக இதை எடுத்துக்கொள்ள முடியுமா.....?


கண்டிப்பாக கருத முடியாது, ஏனெனில் பற்று அட்டைகளை (Debit/Credit Card) யார் வேண்டுமென்றாலும் (தந்தையின் அட்டையை மகனோ) பயன்படுத்திக்கொள்ளலாம், கடவுச்சொல்(Pincode) தெரிந்துயிருந்தால், ஆனால் AEPS மூலம் சம்பந்த பட்டவர் மட்டும் தான் பயன்படுத்த முடியும்....., அவரின் கை ரேகை இல்லாமல் எந்த ஒரு பரிவத்தனையும் செய்ய முடியாது.....

பற்று அட்டைகளை (Debit/Credit Card) எவ்வயதினரும் பயன்படுத்தலாம், (18 வயதுக்குவுட்பட்டவர்கள் தங்கள் பெற்றோர் பற்று அட்டைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் AEPS மூலம் அப்படி உபயோக படுத்த முடியாது.......

பற்று அட்டைகளை (Debit/Credit Card) மூலம் அணைத்து Bill Payments, Online Shopping, Online booking,  செய்ய முடியும்..... ஆனால் AEPS மூலம் தற்போதைய நிலையில் Bill payments அல்லது Online Shopping/Online booking, செய்ய முடியாது... 

நடைமுறையில் எத்தனை பேர் தங்கள் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணை  இணைத்துள்ளார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்....

இத்திட்டம் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது....  ஏனினும் மக்களிடம் இப்படி ஒரு திட்டம் நடைமுறையில் இருப்பது கூட தெரியாமல் இருப்பது வேதனை தான்.....  எது எப்படியோ.... இனி வரும் காலங்களிலாவது மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்......


-பிரவின் சுந்தர் பு.வெ.

Liberalised Remittance System

நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பணமோசடி 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் தடை முன் மோடி மூலம் நடத்தப்பட்டது ... 

கடந்த ஆண்டு (மே 26, 2015) இந்திய ரிசர்வ் வங்கி LRS (Liberalised Remittance System). இது இந்தியாவில் இருந்து ஒரு தனிப்பட்ட ஒரு நிதி ஆண்டில் வெளிநாட்டு கணக்கில் இரண்டு கோடி ரூபாய் வரை மாற்ற முடியும் அதாவது டாலர் 250,0000 வரை "தாராளமயமாக்கப்பட்ட remittance திட்டம்" (Liberalised Remittance System) க்கான அடுக்கில் அதிகரித்துள்ளது .. 

மோடி ஆட்சியைப் வரும் முன் இந்த LRS வரம்பு வெறும் 75,000 அமெரிக்க டாலர்களாகும். அவர் 2014 மே 26 ம் தேதி பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், ரிசர்வ் வங்கி அடுத்த மாதம்மே LRS அளவு 1,25,000 ஆக அதிகரித்துள்ளார். மீண்டும் இந்த அளவை கடந்த ஆண்டு 250,000 டாலர் ஆக அதிகரித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியின் இந்த LRS அதிகரிப்பு காரணமாக, ஜூன் 2015 முதல் remittance சுமார் 3.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (30,000 கோடி ரூபாய்) கடந்த 11 மாதத்தில் இந்தியாவில் இருந்து மாற்றப்பட்டது இருந்தது. வரலாற்று சராசரியை பணம் அனுப்பும் விட கிட்டத்தட்ட 300% அதிக பணம் அனுப்பும் இந்த திடீர் எழுச்சி பற்றி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து தெளிவான விளக்கம் இல்லை.

வெளிநாடுகளில் இந்த மகத்தான அளவு parcelling, இப்போது 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் தடை, ஊழல் எதிர்ப்பு, கள்ள மற்றும் கறுப்பு பணம் எதிர்ப்பு என்று நாடகம் ஆடும் மோடி ....

How Participatory Notes creates Black economy

இந்திய பொருளாதாரத்தை கெடுக்க பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டு இந்திய சந்தையில் விட்டு.... அதில் வரும் பணத்தில் தான் தீவிரவாத நடவடிக்கைக்கு பயன்படுகிறது என்று ஒரு போலி தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.....

உண்மையில் அப்படி நடப்பதில்லை.....

பார்ட்டிசிபேட்டரி நோட் (பங்கேற்கும் குறிப்பு) மூலமாக முதலீடு செய்பவர் யார் எனத் தெரிவிக்காமலே அந்நிய நாட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரூ 1.73 லட்சம் கோடி ரூபாய் இந்த வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளதாக மத்திய பொருளாதார புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை மூலமாகத்தான் கார்ப்பரேட்டுகளும், மூலதன சூதாடிகளும், பண முதலைகளும் தங்களுக்கு தேவையான கருப்பு பணத்தை கொண்டு வரவும், வெளியேற்றவும் செய்கின்றனர். 

பார்ட்டிசிபேட்டரி நோட் மூலமாக தாவுத் இப்ராஹிம், அல்லது பாகிஸ்தான் ISI உளவு அமைப்பு கூட முதலீடு செய்யலாம்.... அவர்கள் பாகிஸ்தானிலிருந்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... உலகின் எந்த முலையிலிருந்தும் முதலீடு செய்யலாம்.....

இந்த முறை மூலம் இந்தியாவில் பணம் எடுப்பது சுலபமா அல்லது பாகிஸ்தானில் ஒரு பணம் அச்சடிக்கும் இயந்திரம் வைத்து விடிய விடிய அச்சடித்து அதை ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்களை எல்லாம் ஏமாற்றி இந்தியாவிற்க்குள் கொண்டுவந்து அதை அனைவருக்கும் பிரித்து கொடுப்பது சுலபமா ....?

கள்ள பணத்தை தடுத்து நிறுத்த தான் இந்த 500 மற்றும் 1000 நோட்டு செல்லாததற்கு காரணமென்று சொல்லாது பொய்....... மற்றும் மக்களை ஏமாற்றும் செயல்....
----------------------------------------------------
Participatory Notes commonly known as P-Notes or PNs are instruments issued by registered foreign institutional investors (FII) to overseas investors, who wish to invest in the Indian stock markets without registering themselves with the market regulator, the Securities and Exchange Board of India - SEBI.
SEBI permitted foreign institutional investors to register and participate in the Indian stock market in 1992.
Investing through P-Notes is very simple and hence very popular amongst foreign institutional investors.
----------------------------------------

மின்னணு பரிமாற்றமே அரசின் லட்சியம்....- மோடி...

மின்னணு பரிமாற்றமே அரசின் லட்சியம்....- மோடி...

மின்னணு பரிமாற்றமே, அல்லது ரொக்கமில்லா பண பரிவர்த்தனை (Cash Less Economy) என்பது எவ்வளவு சாத்தியம் இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்....

பற்று அட்டைகள் தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருப்பது நான்கு, (Master Card,Maestro Card,Visa Card, Rupay Card).

Rupay Card தவிர மற்ற எல்லா அட்டைகளும் வெளிநாட்டு நிறுவனங்களுடையது, இதன் மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கும் நமது வங்கி இவர்களுக்கு கட்டணம் செலுத்தும்..... இது பாதுகாப்புடையது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை, இருந்தாலும் நாம் செய்யும் உள்ளூர் வர்த்தகத்திற்கும் நாம் தேவையில்லாமல் இவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை தடுக்கவே Rupay Card அறிமுகப்படுத்தபட்டது.

கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பற்று அட்டை(Visa Card) பழுதுடைந்ததினால் புதியதாக விண்ணப்பித்த போது, என் தலையில் வலுக்கட்டாயமாக இந்த Rupay Card கட்டிவிட்டார்கள். வாங்கியது முதல் நான் பட்ட சிரமங்களுக்கு அளவேயில்லை..... என்னுடைய வங்கியில் உள்ள A.T.M ல் இந்த புதிய Rupay Card Detect ஆகவில்லை... பெரும்பாலும் A.T.M இது Detect ஆக வில்லை, சரி போன போகுது, நாம் மின்னணு பரிவத்தனைகள் செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மின்னணு பரிவத்தனைகளில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான இணையதளங்கள் தவிர, ஒரு சில தனியார் நிறுவன இணையதளங்கள் தவிர, பெரும்பாலும் Rupay Card அங்கீகரிக்க படுவதில்லை, (Most of the Websites Accept Master Card, Maestro Card, Visa Card, Only Few websites Accept Rupay card for E-transactions).

ஆக மின்னணு பரிவத்தனை மூலமும் பண செலவு செய்ய முடியவில்லை, A.T.M லும் பணம் எடுக்க முடியாமால், நான் பட்ட வேதனைகள் என்னனென்று சொல்ல.... பிறகு போய் வங்கி மேலாளரிடம் சண்டைப்போட்டு மீண்டும் Visa Card வாங்குவதற்குள் ஒரு முழு மாசம் முடிந்தது.....

இதில் இருந்து சொல்லுவது என்னவென்றால், வெளிநாட்டு பற்று அட்டைகள்(Master Card, Maestro Card, Visa Card,) தரும் சேவை நம் Rupay Card தருவதில்லை. மேலும் உள்நாட்டு அரசு சார்ந்த பண பரிவத்தனைகளுக்கு நாம் இந்த Rupay Card பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லா பரிவத்தனைகளுக்கும் இந்த Rupay Card உபயோகப்படுத்த வேண்டுமென்றால் இதுவும் மற்ற வெளிநாட்டு அட்டைகள் போல் உலகளவில் அங்கீரிக்க பட வேண்டும், அப்பொழுது தான் நமக்கு உண்மையில் பயன் அளிக்கும்... அதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாம் தண்ட செலவு கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது....

மோடி அவர்கள் சொன்னது போல் எல்லா பரிவத்தனைகளும் இந்த பற்று அட்டைகள் பயன்படுத்துவதால் யாருக்கு லாபம்..... நம் நாட்டிற்க்கா, அல்லது வெளிநாட்டிற்க்கா..... சிந்திப்பீர்.....? இப்பொழுது புரிந்திருக்கும் ஏன் மோடியின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது என்று....!

சரி அடுத்து பற்று அட்டை பயன்படுத்தாமல் மின்னணு பரிமாற்ற (Internet Banking) பயன்படுத்தலாம் என்று கேட்பவர்களுக்கு......

தாராளமாக பயன்படுத்தலாம்..... நமது நிதியமைச்சர் கூற்றுப்படி நமது மொத்த பரிவர்த்தனைகளில் வெறும் 10% மட்டும் தான் இந்த மின்னணு பரிமாற்றம். இந்த 10% சதவிகித்தில் உள்ள ஒரு சிலர் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளுக்கு இரயில் முன்பதிவு செய்ய ஒரே நேரத்தில் முயற்சி செய்தால் Server down ஆகிறது..... இப்படி இருக்கும் போது நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நடைப்பெற்றால் என்ன நடக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.....

தற்போது 10% பேர் பயன்படுத்தும் இந்த மின்னணு பரிமாற்றத்தில் பெரும்பாலும் பரிவர்த்தனைகள் தோல்வி அடைவத்தில்லை ஒரு வேளை தோல்வி அடைந்து (பணம் தவறாக கழித்து கொள்ள பட்டால்), நம் பணம் நம் கணக்கிற்கு மீண்டும் வர 3 முதல் 10 வேலை நாட்களாகும்.

மோடியின் இந்த நடவடிக்கையின் (500 மற்றும் 1000 செல்லாது என்பதன்)மூலம் நாம் கண்டிப்பாக மின்னணு பரிமாற்றத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம். இதனால் இந்த 10% பேர் உயர தான் போகிறது.... அதிகப்படியான பயனாளர்களை சமாளிக்கும் அளவு நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளதா....? தோல்வி அடையும் பரிவர்த்தனைகள் பணம் திருப்பி வர நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்தால் அதுவரை அந்த பரிவர்த்தனை தடைப்படுகிறது அல்லவா..... எடுத்துக்காட்டிற்கு மின் கட்டணம் கடைசி நாளில் செலுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நாள் என்பதால் அதிகப்படியான பயனாளர்கள் பயன்பாட்டால் ஒரு வேலை என்னுடைய பரிவர்த்தனை தோல்வி அடைந்து என் பணம் கழித்துக்கொள்ளப்பட்டால், எனக்கு தெரியும் என் பணம் எனக்கு 3 முதல் 10 நாட்களுக்குள் வந்துவிடும் என்று......அதே நேரம் அன்று கட்டணம் செலுத்த வில்லை என்றால் என்னுடைய இணைப்பை துண்டித்து போய் விடுவார்கள், நான் கட்டினேன், பணம் பிடித்தம் செய்ய பட்டுள்ளது, வரும் வரை பொறுத்து கொள்ளுங்கள் என்றால் ஏற்ப்பார்களா..... சொல்லுங்கள் பார்போம்.... (Due to heavy Load on Server, if my Transactions fails and my Money is deducted from my account. I Know my Money will back by another 3 to 10 working days. But EB Staff does not bother about those things, they will disconnect my connection,). பணம் திரும்ப என் கணக்கிற்கு வரும் வரை மின் கட்டணம் செலுத்த முடியாது..... அல்லது வேறு ஒரு பணத்தை கொண்டு தான் பரிவர்த்தனை செய்ய முடியும்..... வேறு பணமில்லாத பட்சத்தில் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியது தான்.....

இப்படி நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு..... இதை எல்லாம் சரிப்படுத்தாமல், அவரச கதியில் இப்படி நம்மை மின்னணு பரிமாற்றத்திற்கு நம்மை நிர்ப்பந்திப்பது ஏன் என்று தான் புரியவில்லை.....

எல்லா பரிவர்த்தனைகளும் ரொக்கமில்லாமல் மின்னணு பரிவர்த்தனை என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று....... இதற்கு நம் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் முன்னேற வேண்டியுள்ளது

பின்குறிப்பு: நான் கூறியவை எல்லாம் படித்த மக்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் நிலைமை அய்யோப்பாவம்.....

-பிரவின் சுந்தர் பு .வெ

கடன் மற்றும் பற்று அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் யாருக்கு லாபம் ?

கடன் மற்றும் பற்று அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் முழுவதுமாக நீக்கினால் தான், மக்களுக்கு பயன் அளிக்கும்..... இதை நடைமுறைப்படுத்தும் வரை பணமில்லா பரிவர்த்தனை (Cashless Economy) சாத்தியமில்லை.....

நடைமுறையில் இரயில் இணையத்தில் முன்பதிவு செய்ய பரிவர்த்தனை கட்டணமாக ரூபாய் 25 வரை பிடித்தம் செய்ய படுகிறது.... அரசு பேருந்தில் முன்பதிவு செய்ய ரூபாய் 25 பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்க படுகிறது.... தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் இணையத்தில் செலுத்த, வங்கியை பொறுத்து ரூபாய் 10 முதல் 15 வரை வசூலிக்க படுகிறது.... இணைய பரிமாற்றம் (Netbanking) மூலம் பணம் அனுப்ப குறைந்தபட்சம் ரூபாய் 3 ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கும் பிடித்தம் செய்யப்படுகிறது...

State bank of India இல் Cash Deposit machine(CDM) மூலம் பணம் செலுத்தினால் ரூபாய் 25 பிடித்தம் செய்யப்படுகிறது....

மேலும் POS பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது, ஒவ்வொரு பரிவத்தனைக்கும் 1% முதல் 2.5% வரை பிடித்தம் செய்யப்படுகிறது.....
இப்படி ஒவ்வொரு முறையும் கடன் மற்றும் பற்று அட்டை பயன்படுத்தும் போது கட்டணங்கள் வசூலிப்பதால் சிரமத்திற்குள்ளாவது நடுத்தர வர்கத்தினர் தான்.....

பிரதமர் சொல்கிறார் 2000 வரை பற்று மற்றும் கடன் அட்டையில் செய்யும் பரிவர்தனைகளுக்கு சேவை வரி பிடித்தம் செய்ய படாது என்று.....
நடைமுறையில் பிடித்தும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...... நேற்று இரயிலில் முன்பதிவு செய்த போது 150 ரூபாய்க்கு 14 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது..... இது மோடி அவர்கள் சொல்லவதை வங்கிகள் பின்பற்று வதில்லை என்று நினைப்பதா.... அல்லது மோடி பொய் வாக்குறுதிகள் தருகிறார் என்று நினைப்பதா....?

Cashless Economy vs Cashless People

மோடியின் திட்டத்தால் கருப்பு பணம் ஒழிந்து விட்டது என்று நேற்று வரை கொக்கரித்தவர்களுக்கு.....

திட்டம் செயல்படுத்திய விதத்தால் தான் இன்று தோல்வி அடைந்தது.... கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தூக்கம் இல்லாமல் சுற்றுகிறார்கள், என்றெல்லாம் பேசினார்கள்.

நாடெங்கிலும் பல இடங்களில் கோடி கணக்கில் புதிய 2000 நோட்டு வருமான வரி சோதனையில் சிக்கி வருகிறது.... இவையெல்லாம் கருப்பு பணம் என்பது நாடு அறிந்ததே. இவர்கள் எப்படி இவ்வளவு பணம் மாற்றினார்கள்..? இது நிர்வாகத்தின் திறமையின்மை உணர்த்தவில்லையா.....? கருப்பு பணம் மாற்றவே முடியாது என்று கொக்கரித்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.....

சாமான்யன் வங்கிகளோ அல்லது ஏ.டி.எம்'ல் 10,000 ரூபாய் பணம் எடுக்க முடியாமல் கஷ்ட படும் நிலையில் இவர்களிடம் மட்டும் எப்படி எவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது..... இது நிர்வாகத்தின் திறமையின்மை உணர்த்தவில்லையா.....?

ஒரு புறம் வங்கிகளில் பணமில்லை,ஏ.டி.எம்' லும் பணமில்லை , மறுபுறம் கோடி கணக்கில் ஒரு சிலர் வீட்டில் புதிய நோட்டுகள் கட்டு காட்டாக சிக்குகிறது.....

கருப்பு பணம் உருவாகும் இடத்தை சுத்தம் செய்யாமல், எங்கோ பயனற்ற இடத்தில் செய்வதால் என்ன பயன்.... அது மீண்டும் மீண்டும் உருவாக தான் செய்யும்.

மோடியின் நிர்வாக திறமையில்லாமையால் ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்படுத்தியது தான் மிச்சம்.....

மொத்தத்தில் Cash Less Economy நோக்கி இந்தியா செல்கிறதோ இல்லையோ, ஆனால் Cashless People (at any Form) ஆக மாற்றி விட்டார்கள்.....

மோடியின் துக்ளக் தர்பாரின் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று......


அன்று: டிசம்பர் 31 வரை மக்கள் தங்களின் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.... மார்ச் 31 வரை ரிசர்வு வங்கிகள் செலுத்தாலும் ஆதலால் மக்கள் பிதியைடைந்து வங்கிகளில் முந்தியடிக்க வேண்டாம்.....

இன்று: டிசம்பர் 30 வரை ஒருவர் 5000 மட்டுமே வங்கிகளில் செலுத்த முடியும்.... அதுவும் தகுந்த விளக்கமளித்து , வங்கியதிகாரி திருப்தியடையும் பட்சத்தில் பணம் ஏற்கப்படும்..... (அதானே வங்கிக்கு வருகிறவர்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு, வங்கிக்கு வராமல் ரிசர்வு வங்கி மூலம் நேரடியாக வீட்டிற்கு வரும் சேகர் ரெட்டி போன்ற பண முதலாளிகளுக்கு இல்லை..... இவர்கள் திருட்டு தனத்தை பிடிக்க துப்புயில்லை, 5000 கொண்டு வரும் சாமானியர்களை திருடர்களாக சித்திரித்து இவர்கள் மேல் தான் மோடியின் அஸ்திரம் எல்லாம்.....)

அன்று: மக்கள் 2,50,000 வரை டெபாசிட் செய்யும் பணத்திற்கு வரி கிடையாது, அதற்கு மேல் கட்டும் பணத்திற்கு 50% வரி வசூலிக்க படும்.....
 
இன்று: அரசியல் கட்சிகள் தாங்கள் நன்கொடையாக பெற்ற பணத்திற்கு வரி வசூலிக்க பட மாட்டாது..... அவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் செலுத்தலாம்....

மோடி சொன்னது : ஏ.டி.எம் களில் மக்கள் 2500 வரை ஒரு நாளில் எடுத்து கொள்ளலாம், டிசம்பர் 15 க்கு மேல், கட்டுப்பாடு கொஞ்ச கொஞ்சமாக தகர்க்க படும்.
நடைமுறையில் நடப்பது: ஏ.டி.எம் களில் மக்கள் 2000 மட்டுமே எடுக்க முடியும். 1500, 500 எடுக்க முடியாது.... 500 முதல் 2000 க்குள் எடுக்க வேண்டுமென்றால் வங்கிகளில் கால்கடுக்க நின்று தான் எடுக்க வேண்டும், மேலும் டிசம்பர் 21 ஆகி விட்டது இன்னும் வரும் 2000 எடுக்கவே படாத பட்டு தான் எடுக்க முடிகிறது....

மோடி சொன்னது : வங்கிகளில் வாரம் ஒன்றிற்கு 24,000 வரை எடுத்து கொள்ளலாம்....
நடைமுறையில் நடப்பது: வங்கிகளில் 4000 முதல் 5000 மேல் தருவதில்லை.... கேட்டால் பணம் இல்லை என்று தான் பதில் வருகிறது.....

அருண் ஜெட்லி சொல்லுவது: ரிசர்வு வங்கியிடம் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது.
சாமானியனின் கேள்வி: உண்மையாகவே பணம் கையிருப்பில் இருந்தால் வங்கியிடம் கொடுத்து பண தட்டுப்பாடை குறைக்க வேண்டியது தானே....

அருண் ஜெட்லி சொன்னது அன்று: செல்லாது என்று அறிவிக்க பட்ட பணதிற்கு ஈடாக புதிய பணம் வரை ஏப்ரல் மாதம் வரை ஆகலாம்..... அதுவரை மக்கள் நாட்டிற்க்காக பொறுமைக்காக்க வேண்டும்.....
  
இன்று: செல்லாது என்று அறிவிக்க பட்ட பணதிற்கு ஈடாக புதிய பணம் அச்சிடப்படமாட்டாது, மக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்..... காகித பணத்தை கொஞ்சமாக கொஞ்சமாக குறைத்து கொள்ள வேண்டும்.....
அருண் ஜெட்லி சொல்லுவது: புதிய 10,20, 50 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது....

சாமானியனின் கேள்வி: ஒரு புறம் பிளாஸ்டிக் கில்லா சமுதாயம் உருவாக்க பிரச்சாரம் மறுபுறம் பிளாஸ்டிக்கில் பணம் அச்சிட பேச்சுவார்த்தை..... சபாஷ் இப்படி தான் இருக்க வேண்டும்....

அருண் ஜெட்லி நேற்று சொன்னது: புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளிவரும். அதில் L என்ற தொடரில் இருக்கும்....

சாமானியனின் கேள்வி: இதுக்கு முன்னாடி வெளியிட்ட புதிய 500 ரூபாய் இது வரை மக்களின் புழக்கத்திற்கு வந்தபாடுயில்லை , அதற்குள் 50 ரூபாய் நோட்டு வேறவா...... (ரெய்டுகளில் மாட்டும் பணம் கூட 2000 தான் இருக்கிறது அப்ப இந்த புதிய 500 தாள்கள் எங்க தான் இருக்கு....?)

மோடி நவம்பர் 8 அன்று சொன்னது: பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்..... பெட்ரோல், டீசல் விலை குறையும்...
நடைமுறையில் நடப்பது: பெட்ரோல் / டீசல் ஏற்றம்..... ரயில் கட்டணம் ஏற்றப்படும் என்று சூசக தகவல்..... பெரும்பாலான ரயில்வே துறை தனியாரிடம் தாரை வார்க்கப்படும்......

Opinion on Modi's Government

I am Not Modi's Enemy or Congress Fan..... Once i too trust Modi Completely and hope on Modi that he leads to New India.....

But later only recognizing his Plans and Initiatives are only eye washer..... While seeing from outside, it looks very good but going deeper, it always favors to Big shots only...... Implementations are very poor and inexperience manner.... Getting Money from common people as Tax for everything except Breathing air (Maybe in future they put tax for that too)....... this is really disgusting.....

Swach Bharat Mission- Getting money as a tax from Every Indian and every transaction.... my question is whether India is Cleaned..?

To Clean River Ganga- Spent crores of amount, Special Minister for this project.... Whether Ganga is Cleaned...?

Krish Kalyan Cess Tax to help Farmers, whether farmers problem is solved....

Education Cess tax: Where this amount goes..? As Most of Education institutions is managed by Benami of Politicians....

Already discuss more on drawbacks on Demonetization and Black Money......

Among those 2 and half years of Modi's Administration , what is Complete Project, which helps people right Now..?

But One thing really have to appreciate, External Affairs Minister , Mrs Sushma Swaraj is a Good pick, he did Good on his Job and Suresh prabhu, Railway minister, did some good initiatives on Railway, but Suvidha Trains are really robbery.....

மோடியின் பிம்பிளிக்கி பிலாபி.....

இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் மானியத்தை விட்டுத்தர கோரி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அவரின் அந்த அழைப்பை ஏற்று பெரும்பாலான நாட்டு மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்தனர்.
இது ஒரு புறம் என்றால் திரு மத்திய நிதியமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்கள் ரயில்வே துறை கட்டுமான பணிகளை மேம்படுத்த தேவையான நிதி சுமை மக்கள் தான் ஏற்க வேண்டும் என்றும், வரும் பட்ஜெட்டில் ரயில் கட்டணம் ஏற்றப்படும் என்பதை மறைமுகமாக சொல்கிறார்.....
பண மதிப்பிழிக்க நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை மக்கள் சிறிது காலத்திற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.......

இப்படி மக்கள் மேல் நேரடியாக சுமைகளை ஏற்றுவது ஒரு புறம் என்றால்............ மோடியின் அரசின் மற்றொரு கோர முகம் ....

1) விளம்பரத்திற்கு செய்த செலவு 1100 கோடி.....
2) குஜராத்தில் நர்மதா அணையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ஒதிக்கீடு செய்த பணம் இது வரை ₹2,989 கோடி.....
3) மும்பையில் ₹3600 கோடியில் அரேபியன் கடற்கரையில் சத்ராபதி சிவாஜி சிலை கட்ட நிதி ஒதிக்கீடு.....
4) மும்பை தாதர் இந்து மில் வளாகத்தில் ₹425 கோடி செலவில் அம்பேத்கர் சிலை நிறுவ நிதி ஒதிக்கீடு....
5) மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிக்க ₹340 கோடி ரூபாயில் பரிசு திட்டம்.

இப்படி தான் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறது மத்திய அரசு......

இது தேவைதானா...? நாட்டின் வளர்ச்சி வேலை வாய்ப்பை படித்த பட்டதாரிகளுக்கு ஏற்படுத்தி கொடுப்பதில் உள்ளதா அல்லது சிலைகள் மற்றும் வேற்று விளம்பரங்களுக்கு செலவு செய்வதில் உள்ளதா..?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போதும், இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விலை குறையவில்லை அதற்கு மோடி அரசு கொடுத்த பதில் பெட்ரோல்/டீசல் விலை குறைந்தாலும், இங்கு யாரும் விலை குறைக்க போவதில்லை, இதன் மூலம் தனியாருக்கு தான் லாபம் அடைவார்கள் அந்த லாபத்தை ஏன் மத்தியரசே பெற்று கொள்ள கூடாது என்று வெளிப்படையாக கூறினார்கள்..... உண்மையில் பெட்ரோல்/டீசல் விலை குறைந்தாலே இங்கு பல பொருட்களின் விலை விழிச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது......

மோடியின் அரசு ஏழைகளுக்கான அரசு என்று சொல்லுவது வெறும் அரசியல் ஏமாற்று வேலை தான்..... உண்மையில் மோடியின் நடவடிக்கைகள் எல்லாம் ஏழைகளை நசுக்க தான்......

மக்கள் அரசிடம் எதிர்ப்பார்ப்பது என்ன....?

ஒரு பிச்சைக்காரனுக்கு இலவசமாக கோட் சூட் கொடுத்து விட்டு அவன் முன்னறியதாக நினைத்து கொண்டு இருக்கிறது மத்திய/மாநில அரசு...... உண்மையில் அது அல்ல முன்னேற்றம், அவனுக்கு தேவையான அடிப்படை கல்வி, சுகாதாரமான உணவு, அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு வேலை இதை செய்தால் போதும், வளர்ச்சி தானாக வரும்...... இதை எந்த அரசும் செய்வதுமில்லை, செய்ய விருப்பப்படுவதுமில்லை...... உன்மையில் கோட் சூட் போட்டாலும் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் தான், அவன் வாழ்க்கை தரம் முன்னேறாத வரை

ரயில்வே துறையில் மக்களின் தேவை என்ன .....


2017'ல் நாட்டில் மேலும் 200 ரயில் நிலையங்களுக்கு இலவச WIFI வசதி செய்து தரப்படும்....
- சுரேஷ் பிரபு (மத்திய ரயில்வே அமைச்சர்).

==> ரயில் நிலையங்களில் இன்றளவும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை...... ரயில்வே துறை சார்பாக ₹15 விற்கப்படுகிறது தண்ணீர். குடிக்க தண்ணீர் ₹15, ஆனால் இலவச WIFI.

==> ரயில் நிலையங்களில் சிறுநீர், மலம், கழிக்க ₹5 முதல் ₹20 வரை வசூலிக்க படுகிறது..... அதுவும் சுத்தமானதாகவும்/ சுகாதாரமானதாகவும் இருக்கிறதா, இல்லையா என்பதை வேறு வழியில்லாமல் முகம் சுளிக்க பயன்படுத்தியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்....

==> அடுத்ததாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு..... அதிக விலை, அதற்க்கான தரமும் இருப்பதில்லை....

==> சராசரியாக 15 முதல் 26 பெட்டிகள் முன்பதிவு செய்தவர்களுக்காக, வெறும் 2 முதல் 4 பேட்டிகள் முன்பதிவு செய்யாத சாதாரண பேட்டிகள்..... ஒரு சில ரயில்களில் முன்னாடி 1/2 பெட்டி, பின்னாடி 1/2 பெட்டி, அவ்வளவு தான்..... ஒரு சில ரயில்களில் அதுவும் இருப்பதில்லை....... இருக்கும் குறைந்த அளவு கொண்ட பெட்டிகளில் அலைமோதும் கூட்டம்..... இன்னும் பண்டிகை கால பயணம் என்றால் சொல்லவே வேண்டாம்... அவ்வளவு தர்ம சங்கடங்கள்.....

==> சரி முன்பதிவு செய்து போகலாம் என்றால்..... ஆறு மாதத்திற்கு முன்னாளில் முன்பதிவு செய்ய வேண்டும்.... இல்லையென்றால் அதிலும் கட்டண கொள்ளை.... சிறு எடுத்துக்காட்டு நான் காட்பாடியில் இருந்து கோவை செல்வதாக வைத்து கொள்ளுங்கள்..... டிக்கெட் விலைகள் பின்வருமாறு....

1)- சாதாரண டிக்கெட் விலை (ordinary Ticket for Express Train)- ₹120
2)- சாதாரண டிக்கெட் விலை (ordinary Ticket for Super Fast Train)- ₹135
3)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket - ₹260. (ஆறுமாதம் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்)
4)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket (Special Train )- ₹405.
5)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket (Suvidha Special Train )- ₹955. (இதுவும் முன்பதிவு செய்யும் நேரம் பொறுத்து விலை கூடலாம்).
6)- முன்பதிவு செய்த Sleeper Class Tatkal Ticket - ₹415.

மேலே கொடுத்து தகவல்கள் அனைத்தும் வெறும் Sleeper Class Coach மட்டும் தான் இன்னும் 3AC, 2AC, என்று பார்த்தால் விலை மரண கொள்ளை......

₹120 எங்கே உள்ளது அதிகபட்சமாக ₹955 எங்கே உள்ளது..... இப்போ சொல்லுங்க முன்பதிவு என்பது சாமானியர்களுக்கு சாத்தியமா என்று..... இதில் வேடிக்கை என்னவென்றால் ₹260 முன்பதிவு செய்தவனும் ஒரே இடத்தில தான் இருப்பான் ₹955 கொடுத்து முன்பதிவு செய்தவனும் ஒரே இடத்தில தான் இருப்பான்..... முன்னவன் 6 மாதத்திற்கு முன்னாடி முன்பதிவு செய்து இருப்பான் பின்னவன் ஒரு வார அல்லது ஒரு நாள் முன்னாடி முன்பதிவு செய்து இருப்பான்....... அதாவது உங்கள் அவசரம் எங்கள் வருமானம்.....

==> கடைசியாக பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு விருப்பமிருந்தால் ₹1 செலவு செய்து Insurance செய்து கொள்ளலாம்.... பயணத்தில் ஏதாவது விபத்து நடந்தால் ரயில்வே நிர்வாகம் ₹10 லட்சம் வரை நஷ்ட ஈடாக கொடுக்கும்... ₹1 ரூபாய் தானே என்று எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...... ஒரு நாளில் 1 கோடி பேர் ரயிலில் பயணிக்கிறார்கள் என்றால் ₹1 கோடி சர்வசாதாரமனாக ரயில்வே துறைக்கு கிடைத்துவிடுகிறது..... மேலும் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கும்/ உயிர்க்கு உத்தரவாதம் தர வேண்டிய முழு கடமையும் ரயில்வேக்கு இருக்கு. ₹1 ரூபாய் கொடுத்தால் நஷ்டஈடு இல்லையென்றால் அதற்கும் ரயில்வே துறைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட முடியமா.....?

ஒருபுறம் ரயில்வே துறையில் மக்களிடம் பகல் கொள்ளையாக கட்டணங்களாக வசூலித்து இலவச WIFI, எல்லா ரயில் நிலையங்களும் AC தங்கும் அறைகள், இன்னொரு புறம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பொது காத்திருப்பு அறைகள்....... இதில் எதை வளர்ச்சி என்று பார்ப்பது....?

நாட்டிற்கு முதலில் தேவைப்படுவது இலவச WIFI அல்லது தரமான அடிப்படை வசதிகளா....?

ஒரு நல்ல அரசு எதை முதலில் செய்ய வேண்டும் .....? சிந்திப்பீர்......?


- பிரவின் சுந்தர் பு.வெ

மனக்குறை நீக்கும் பொன்மொழிகள்

மனிதர்களுடைய பாராட்டுதலை ஒருபோதும் எதிர்பார்க்காதே. ஏனென்றால் எந்த அடிப்படையில் ஒன்றைப் பாராட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்களைவிட உயர்ந்த ஒன்றைக் காணும்போது  அவர்கள் அதை விரும்புவதும் இல்லை.உன்னுள் இறைவனது சாந்நித்யம் உள்ளது. நீ அதை வெளியே தேடுகிறாய். உள்ளே பார். அது உனக்குள்ளேயே இருப்பதை உணர முடியும். பலம் பெறுவதற்காகவே நீ பிறருடைய பாராட்டை எதிர்பார்க்கிறாய். அந்த வழியில் நீ ஒருபோதும் பலம் பெறமாட்டாய். உண்மையில் உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளேயே இருக்கிறது.
-  அன்னை