Sunday, January 1, 2017

Aadhar Enabled Payment System என்றால் என்ன?

Aadhaar Enabled Payment System(AEPS)
================================

Aadhaar Enabled Payment System(AEPS)  என்பது ஆதார் கணக்கின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டமாக கருதப்படுகிறது...  இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு அப்போதையை காங்கிரஸ் அரசால் நடைமுறைப்படுத்திய திட்டம்.....  இத்திட்டம் இன்றளவும் நடைமுறையில் தான் உள்ளது.....

இத்திட்டம் நமது இன்றைய பிரதம மந்திரி பொய்யர் திரு மோ(ச)டி அவர்களால் இன்னும் இரண்டு வாரங்களில் துவக்கப்படவுள்ளது என்பது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்..... இந்தியர்கள் அடிமுட்டாள்கள் அவர்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் என்று திரு  மோடி அவர்கள் நினைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது....

காங்கிரஸ் ஆட்சியில் செய்த மிக பெரிய தவறு.... அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை விளம்பரப்படுத்தாதது தான்.....  மக்களிடம்  இவர்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் கொண்டு சேர்க்காதலால் தான்.... அவை எல்லாம் இன்று புதிய திட்டங்கள் போல் திரு மோடி அவர்கள் அறிவித்து கொண்டு இருக்கிறார்.....

சரி Aadhaar Enabled Payment System(AEPS) இத்திட்டத்தின் சாதக, பாதக விஷயங்களை பற்றி தெளிவாக அலசுவோம்.....

AEPS- இத்திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்...?
ஆதார் எண் கொண்ட எந்த ஒரு இந்திய குடிமகனும், இந்தியாவில் இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.....

AEPS- இத்திட்டத்திற்கு செயற்படுத்த அடிப்படை தேவைகள் என்ன..?

இத்திட்டத்தின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கியின் சார்பாக இருக்கும் முகவர் (Business Correspondent), பணம் செலுத்துபவர், பணம் பெறுபவர் என அனைவரும் தங்கள் வங்கி கணக்கை ஆதார்'ல் இணைத்து இருக்க வேண்டும்....  மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த POS கருவி, கை ரேகை பதிவு செய்ய biometric கருவி......ஆதார்'ல் இணைக்கப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தவோ, பெறவோ முடியாது.....

AEPS மூலம் என்னென்ன வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியும்....?

AEPS திட்டத்தின் கீழ் Balance Enquiry, Cash Withdraw, Cash Deposit, Funds Transfer. போன்ற சேவைகள் நாம் செய்ய முடியும்....

AEPS- மூலம் என்னென்ன வங்கி பரிவர்த்தனைகள் நாம் செய்ய முடியாது.....?

AEPS திட்டத்தின் மூலம் Bill Payments செய்ய முடியாது....

AEPS திட்டம் செயல்படுத்தும் Business Correspondent என்பவர் யார்....  ? யாரெல்லாம் இந்த Business Correspondent ஆக இருக்க முடியும்?

தனிமனிதர்கள் (ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்/ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள்/முன்னாள் ராணுவ  வீரர்கள்), மேலும் சிறு தொழில் முனைவோர், மற்றும் அங்கீரிக்கப்பட்ட எந்த ஒரு தொழில் புரிபவர்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.....


எதை மையமாக கொண்டு இந்த பரிவத்தனைகள் நடக்கும்....?
ஆதார் எண் கள் (செலுத்துபவர்,தொழில் முனைவோர்) மற்றும் இருவரின் கை ரேகை..... இந்த திட்டத்தில் கை ரேகை தான் கடவுச்சொல்..... 

இத்திட்டம் செயல்படும் முறை....

முதலில் வாடிக்கையாளர் தங்கள் வங்கி கணக்கிலுள்ள இருப்பு நிலை (Balance Enquiry) அறிய விரும்பினால்...  

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) சொல்ல வேண்டும்.   அடுத்தது தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் இருப்பு நிலை வரும்.....

இரண்டாவதாக பணம் எடுக்க விரும்பினால்.....

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள  வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும் கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் கழிக்க பட்டு சம்பந்த பட்ட பணம் கொடுக்கப்படும்....

மூன்றாவதாக பணம் செலுத்த விரும்பினால்.....

 இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (Issuer Identification Number- IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் வரவு(Deposit)  வைக்க வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும் கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....
 
கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு, பரிவர்த்தகனைக்கான ரசீது கொடுக்கப்படும்....

கடைசியாக  வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் (Fund Transfer)  செலுத்த வேண்டுமென்றால்.....

  இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களிடம்  சென்று தங்கள் ஆதார் எண்ணை சொல்ல வேண்டும், பின் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் அடையாள எண்ணை (IIN) எண்ணை சொல்ல வேண்டும்.   எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும், பின் பணம் பெறுபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும், பின் அவர் வங்கியின் அடையாள எண்ணை (Bank identification Number) IIN பதிவு செய்ய வேண்டும்.   கடைசியாக தங்கள் கைரேகையை Biometric கருவியில் பதிவு செய்ய வேண்டும்.....

கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு பற்று வைக்கப்பட்டு, பெறுபவரின் கணக்கிற்கு பணம் மாற்றப்படும், முடிவில் பரிவர்த்தகனைக்கான ரசீது கொடுக்கப்படும்....

வாடிக்கையாளர் இரண்டு அல்லது அதற்கும் மேல் வங்கி கணக்குகள் ஆதார்'ல் இணைத்து இருந்தால்...?

வழக்கமாக இத்திட்டம் மூலம் ஒரு கணக்கிற்கு மட்டும் தான் பரிவர்த்தனை செய்ய முடியும்....  வாடிக்கையாளர் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் அதில் ஏதோ ஒன்றை முதன்மையான கணக்காக (Primary Account) எடுத்துக்கொண்டு அதன் மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.... எந்த வகையில் முதன்மை கணக்கை அது தேர்வு செய்யும் என்பதற்கு சரியான தகவல்கள் வகுக்கப்படவில்லை......

இத்திட்டம் மூலம் எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.....?

RBI வழிகாட்டுதலின் படி உங்கள் கணக்கின் மூலம் எவ்வளவு பரிவர்த்தனை செய்ய முடியுமோ அவ்வளவும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம்......

இத்திட்டத்தின் மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் பெறப்படுமா..?
இதுவரை சேவை கட்டணம் வசூலிக்க படவில்லை..... பின்னாளில் வங்கிகள் விருப்பப்பட்டால் சேவை கட்டணம் வசூலிக்கலாம் அதற்கு தடையில்லை என்கிறது National Payment Corporation of India(NCPI) .....  

இத்திட்டத்தின் மூலம் செய்யும் பரிவர்த்தனை தவறு நடந்தால் (Transaction Failure).

இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் Transaction Failure க்கு முழு பணமும் திருப்ப செலுத்த பட்டுவிடும்.... சராசரியாக .... 23.00 மணி நேரத்தில் பணம் திருப்பி அனுப்பப்படும் என்கிறார்கள்.... 

பணம் வைத்துள்ளவர் இறக்கும் பட்சத்தில் பணம் எடுக்க முடியமா...?

கண்டிப்பாக முடியும், வங்கி கணக்கு வைத்துயிருப்பவர் தன் Nominee குறிப்பிட்டு இருந்தால், அந்த நபர்  தன்னை வங்கியில்  nominee என்று உறுதிப்படுத்தி கொண்டு  பின் சம்பந்த பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம்....  ஒரு வேலை தன் கணக்கில் Nominee குறிப்படாமல் இருந்தால் கடினம் தான்....

உண்மையில் இத்திட்டத்தின் மூலம் Debit/Credit Card மாற்றாக இதை எடுத்துக்கொள்ள முடியுமா.....?


கண்டிப்பாக கருத முடியாது, ஏனெனில் பற்று அட்டைகளை (Debit/Credit Card) யார் வேண்டுமென்றாலும் (தந்தையின் அட்டையை மகனோ) பயன்படுத்திக்கொள்ளலாம், கடவுச்சொல்(Pincode) தெரிந்துயிருந்தால், ஆனால் AEPS மூலம் சம்பந்த பட்டவர் மட்டும் தான் பயன்படுத்த முடியும்....., அவரின் கை ரேகை இல்லாமல் எந்த ஒரு பரிவத்தனையும் செய்ய முடியாது.....

பற்று அட்டைகளை (Debit/Credit Card) எவ்வயதினரும் பயன்படுத்தலாம், (18 வயதுக்குவுட்பட்டவர்கள் தங்கள் பெற்றோர் பற்று அட்டைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் AEPS மூலம் அப்படி உபயோக படுத்த முடியாது.......

பற்று அட்டைகளை (Debit/Credit Card) மூலம் அணைத்து Bill Payments, Online Shopping, Online booking,  செய்ய முடியும்..... ஆனால் AEPS மூலம் தற்போதைய நிலையில் Bill payments அல்லது Online Shopping/Online booking, செய்ய முடியாது... 

நடைமுறையில் எத்தனை பேர் தங்கள் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணை  இணைத்துள்ளார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்....

இத்திட்டம் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது....  ஏனினும் மக்களிடம் இப்படி ஒரு திட்டம் நடைமுறையில் இருப்பது கூட தெரியாமல் இருப்பது வேதனை தான்.....  எது எப்படியோ.... இனி வரும் காலங்களிலாவது மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்......


-பிரவின் சுந்தர் பு.வெ.

1 comment:

  1. Thanks for sharing this knowledgeable talk with us. I want to read more. Also visit my website page - Aadhaar Enabled Payment System.

    ReplyDelete