மனிதர்களுடைய பாராட்டுதலை ஒருபோதும் எதிர்பார்க்காதே. ஏனென்றால் எந்த
அடிப்படையில் ஒன்றைப் பாராட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களைவிட உயர்ந்த ஒன்றைக் காணும்போது அவர்கள் அதை
விரும்புவதும் இல்லை.உன்னுள் இறைவனது சாந்நித்யம் உள்ளது. நீ அதை வெளியே தேடுகிறாய். உள்ளே பார். அது உனக்குள்ளேயே இருப்பதை உணர
முடியும். பலம் பெறுவதற்காகவே நீ பிறருடைய பாராட்டை எதிர்பார்க்கிறாய்.
அந்த வழியில் நீ ஒருபோதும் பலம் பெறமாட்டாய். உண்மையில் உனக்குத் தேவையான
வலிமை உனக்குள்ளேயே இருக்கிறது.
- அன்னை
- அன்னை
No comments:
Post a Comment