Sunday, January 1, 2017

ரயில்வே துறையில் மக்களின் தேவை என்ன .....


2017'ல் நாட்டில் மேலும் 200 ரயில் நிலையங்களுக்கு இலவச WIFI வசதி செய்து தரப்படும்....
- சுரேஷ் பிரபு (மத்திய ரயில்வே அமைச்சர்).

==> ரயில் நிலையங்களில் இன்றளவும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை...... ரயில்வே துறை சார்பாக ₹15 விற்கப்படுகிறது தண்ணீர். குடிக்க தண்ணீர் ₹15, ஆனால் இலவச WIFI.

==> ரயில் நிலையங்களில் சிறுநீர், மலம், கழிக்க ₹5 முதல் ₹20 வரை வசூலிக்க படுகிறது..... அதுவும் சுத்தமானதாகவும்/ சுகாதாரமானதாகவும் இருக்கிறதா, இல்லையா என்பதை வேறு வழியில்லாமல் முகம் சுளிக்க பயன்படுத்தியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்....

==> அடுத்ததாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு..... அதிக விலை, அதற்க்கான தரமும் இருப்பதில்லை....

==> சராசரியாக 15 முதல் 26 பெட்டிகள் முன்பதிவு செய்தவர்களுக்காக, வெறும் 2 முதல் 4 பேட்டிகள் முன்பதிவு செய்யாத சாதாரண பேட்டிகள்..... ஒரு சில ரயில்களில் முன்னாடி 1/2 பெட்டி, பின்னாடி 1/2 பெட்டி, அவ்வளவு தான்..... ஒரு சில ரயில்களில் அதுவும் இருப்பதில்லை....... இருக்கும் குறைந்த அளவு கொண்ட பெட்டிகளில் அலைமோதும் கூட்டம்..... இன்னும் பண்டிகை கால பயணம் என்றால் சொல்லவே வேண்டாம்... அவ்வளவு தர்ம சங்கடங்கள்.....

==> சரி முன்பதிவு செய்து போகலாம் என்றால்..... ஆறு மாதத்திற்கு முன்னாளில் முன்பதிவு செய்ய வேண்டும்.... இல்லையென்றால் அதிலும் கட்டண கொள்ளை.... சிறு எடுத்துக்காட்டு நான் காட்பாடியில் இருந்து கோவை செல்வதாக வைத்து கொள்ளுங்கள்..... டிக்கெட் விலைகள் பின்வருமாறு....

1)- சாதாரண டிக்கெட் விலை (ordinary Ticket for Express Train)- ₹120
2)- சாதாரண டிக்கெட் விலை (ordinary Ticket for Super Fast Train)- ₹135
3)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket - ₹260. (ஆறுமாதம் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்)
4)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket (Special Train )- ₹405.
5)- முன்பதிவு செய்த Sleeper Class Ticket (Suvidha Special Train )- ₹955. (இதுவும் முன்பதிவு செய்யும் நேரம் பொறுத்து விலை கூடலாம்).
6)- முன்பதிவு செய்த Sleeper Class Tatkal Ticket - ₹415.

மேலே கொடுத்து தகவல்கள் அனைத்தும் வெறும் Sleeper Class Coach மட்டும் தான் இன்னும் 3AC, 2AC, என்று பார்த்தால் விலை மரண கொள்ளை......

₹120 எங்கே உள்ளது அதிகபட்சமாக ₹955 எங்கே உள்ளது..... இப்போ சொல்லுங்க முன்பதிவு என்பது சாமானியர்களுக்கு சாத்தியமா என்று..... இதில் வேடிக்கை என்னவென்றால் ₹260 முன்பதிவு செய்தவனும் ஒரே இடத்தில தான் இருப்பான் ₹955 கொடுத்து முன்பதிவு செய்தவனும் ஒரே இடத்தில தான் இருப்பான்..... முன்னவன் 6 மாதத்திற்கு முன்னாடி முன்பதிவு செய்து இருப்பான் பின்னவன் ஒரு வார அல்லது ஒரு நாள் முன்னாடி முன்பதிவு செய்து இருப்பான்....... அதாவது உங்கள் அவசரம் எங்கள் வருமானம்.....

==> கடைசியாக பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு விருப்பமிருந்தால் ₹1 செலவு செய்து Insurance செய்து கொள்ளலாம்.... பயணத்தில் ஏதாவது விபத்து நடந்தால் ரயில்வே நிர்வாகம் ₹10 லட்சம் வரை நஷ்ட ஈடாக கொடுக்கும்... ₹1 ரூபாய் தானே என்று எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...... ஒரு நாளில் 1 கோடி பேர் ரயிலில் பயணிக்கிறார்கள் என்றால் ₹1 கோடி சர்வசாதாரமனாக ரயில்வே துறைக்கு கிடைத்துவிடுகிறது..... மேலும் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கும்/ உயிர்க்கு உத்தரவாதம் தர வேண்டிய முழு கடமையும் ரயில்வேக்கு இருக்கு. ₹1 ரூபாய் கொடுத்தால் நஷ்டஈடு இல்லையென்றால் அதற்கும் ரயில்வே துறைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட முடியமா.....?

ஒருபுறம் ரயில்வே துறையில் மக்களிடம் பகல் கொள்ளையாக கட்டணங்களாக வசூலித்து இலவச WIFI, எல்லா ரயில் நிலையங்களும் AC தங்கும் அறைகள், இன்னொரு புறம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பொது காத்திருப்பு அறைகள்....... இதில் எதை வளர்ச்சி என்று பார்ப்பது....?

நாட்டிற்கு முதலில் தேவைப்படுவது இலவச WIFI அல்லது தரமான அடிப்படை வசதிகளா....?

ஒரு நல்ல அரசு எதை முதலில் செய்ய வேண்டும் .....? சிந்திப்பீர்......?


- பிரவின் சுந்தர் பு.வெ

No comments:

Post a Comment