Friday, January 6, 2017

கன்யாதானம் என்றால் என்ன?

கன்னிகாதானம் என்றால் என்ன?,  இத்தானம் செய்வதால் என்ன பயன்...?

இருப்பவர் இல்லாதவர்களுக்கு அன்பளிப்பாக  கொடுப்பது தானம் என்று கருதப்படுகிறது...  இத்தானங்கள் முறையே அன்னதானம், கண்தானம், பூதானம், என பல வகை தானங்கள் நடைமுறையில் உள்ளது....  இவை அனைத்தும் சிறப்பதானது தான், இதில் சிறந்தது இது தான் என்று முடிவு கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.....  உண்மையில் தேவைபடுவோர்க்கு கொடுக்க படும் அத்தனை தானமும் சிறந்தது தான்.....

கன்னிகாதானம் என்ற சொற்றொடர் பெரும்பாலும் தவறாகவே விளக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதெப்படி இருபது-இருபத்தைந்து வருடம் வளர்த்த பெண்ணை தானமாக கொடுப்பது, ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகிறது.

உண்மையில், மற்ற தானங்களை விட இந்த கண்ணிய தானம் மாறுபட்டது, ஏன்யென்றால் மற்ற தானங்கள் கொடுப்பவர் தானம் கொடுத்த பின் உரிமம் கோர முடியாது..... தானம் பெற்றவர்க்கு அது முழு உரிமை சென்று விடும், கொடுத்தவர் அதற்கு மேல் எந்த உரிமையும் கேட்ட முடியாது.... அல்லவா..... ஆனால் கன்னியா தானம் செய்யப்பட்ட பெண்ணானவள் பிறந்த வீட்டிற்கும், புகந்த வீட்டுற்கும் சமமானவன்..... இரண்டு வீட்டிலும் நடக்கும் சுப துக்க காரியங்களுக்கு பங்கு கொள்ளும் உரிமை பெற்றவள்......    இவள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு சடங்கும் முழுமை அடையாது என்று சாஸ்திரம் சொல்கிறது......  (மேற்கோள்: மனைவி இல்லாமல் செய்யும் எந்த ஒரு யாகமும் பூர்த்தி அடையாது/ செய்யவும் முடியாது, கூட பிறந்தவள்/ மகளின்றி செய்யும் நல்ல காரியங்களும் முழுமை அடையாது, இதற்கு பல சான்றுகள் நம் புராண கதைகளில் சான்று உள்ளது).... அதேப்போல் , அப்பெண்னிற்கு  பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது முதல் அனைத்து சுப காரியங்களுக்கும், அவள் கூட பிறந்த சகோதிரன் கண்டிப்பாக தேவை...... இதன் மூலம்   நாம் புரிந்தகொள்ள வேண்டியவை என்னவென்றால் கன்னியா தானம் (திருமணமானவள்) புகுந்த விடு மற்றும் பிறந்த வீட்டிற்கு பொதுவானவள்.....  பிறந்த வீட்டிற்கும் இவளுக்கும் உள்ள தொடர்ப்பு இறுதிவரை தொடரும்,  இவள் கன்யா தானத்திற்கு பின் புகுந்த வீட்டிற்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைப்பது தவறு....

சரி கன்யா தானம் பற்றி நம் சாஸ்திரங்களில் என்ன சொல்கிறார்கள் என்ற விளக்கத்தை பார்ப்போம்

கன்யாதானம் என்றால் கன்யா + தானம் - இது சரிதான்.

ஆனால், கன்னியையே தானமாக கொடுப்பது என்று சொல்வது ரொம்ப தவறான விளக்கம் .

சமஸ்கிருதத்தில், கன்யாதானம் (கன்யா+தனம்) என்றால், மணமாகாத கன்னியான தம் மகளுக்கு தந்தையின் அன்பளிப்பு / சொத்தில் ஒரு பங்கு / பொருட் பரிசு, என்றே அர்த்தமாகிறது.

kanyAdhana = a girl's property, portion, dowry ; (if a girl dies unmarried her property falls to her brother's share)

மேற்குறிப்பிட்ட இப்படியே தான் சமஸ்கிருதத்தில் பல சுலோகங்களிலும் (hymns & verses) விளக்கப் பட்டுள்ளது. இதையேதான், விவாஹசுக்தம் என்ற திருமண கையேட்டு நூலிலும் விளக்கமளிக்க பட்டுள்ளது.


  •  கன்னியை முறையாக தந்தையிடமிருந்து அவளுக்குரிய சொத்துக்களுடன், அவளின்  முழு அனுமதி பெற்றுக் மணந்து கொள்வது "தேவ விவாஹம் (கன்னிகாதானம்)"
  •  மாடு கன்றுகளை கன்னியின் தந்தைக்கு கொடுத்து, ஒருவன் அக்கன்னியை மணப்பது "அர்ஷ விவாஹம்"
  •  சாமானிய முறையில், எந்தக் கொடுக்கல் வாங்கலும் இலலாமல், பெற்றோர்/பெரியவர்கள் பெண்/பிள்ளை பார்த்து, பெற்றோர் சம்மதத்துடன், முன் பின் அறியாதவர்கள், மணம் புரிந்து கொள்வது "பிரஜாபத்ய விவாஹம்"
  •   ஒரு கன்னியை, பணம் கொடுத்து, அதிகாரத்தால், மணந்து கொள்வது "அசுர விவாஹம்"
  •  ஆணும் பெண்ணும், பெற்றோர்களுக்கு தெரியாமல் / அவர்களின் இஷ்டத்துக்கு விரோதமாக, தான் காதலிப்பவரை மணப்பது "கந்தர்வ விவாஹம்"
  •  யுத்தத்தால் மற்றவரை வென்று, அவர் வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்ணை, கட்டாயம் செய்து மணப்பது "ராக்ஷஸ விவாஹம்"
  •  பெண்ணை ஏமாற்றி கபடம் செய்து, பெண்ணுடைய இஷ்டமில்லாமல் மணப்பது "பைசாச விவாஹம்" என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

கன்யா தானம் செய்வதால் பெரும் பயன் என்ன..?

ஒரு தந்தையானவர் தான் வளர்த்த பெண்ணை, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க  கன்யா தானம் செய்து திருமணம் செய்தார் எனில் அவர் தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகின்ற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் சுவர்க்கத்தில் இடம் பெற வழிவகை செய்பவனாகிறான்.... 

தந்தை இல்லாத வீட்டில் கன்யா தானம் யார் செய்வது...?

தந்தை இல்லாத பட்சத்தில், சகோதிரன் கன்யா தானம் செய்யலாம், சகோதிரனும் இல்லாத பட்சத்தில் தாய் வழி வந்த மாமன் செய்யலாம்......  அவரும் இல்லாத பட்சத்தில் தந்தை வழியில் வந்த பெரியப்பா அல்லது சித்தப்பா செய்யலாம்..... இவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் உயிர் தோழனும் செய்யலாம்....

திருமணத்தில் மொய் பணம்(அன்பளிப்பு) தருவது எதற்கு..? 


21 தலைமுறை பயன் பெரும் வகையில் செய்யும் நல்ல காரியத்திற்கு தன்னால் முடிந்த அளவு அன்பளிப்பு கொடுத்து அந்த புணியத்தில் வரும் பயனில் தானும் பங்கு பெறவும் இருக்கலாம்..... (இது என்னுடைய தனி பட்ட கருத்து மட்டுமே)....

பெண் பிள்ளை இல்லாதவர் இந்த தானம் செய்ய முடியாதா...?


இதற்கு தான் நாம் திருமணத்திற்கு செல்லும் போது அன்பளிப்பு அளிப்பது, அதன் மூலம் பெண்னின் தந்தை பெரும் பயனில் ஒரு பங்கு பெறலாம்.... பெண் பிள்ளை இல்லாதோர் முழு பயனும் அடைய வேண்டுமென்றால் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத ஏழை பெண்ணிற்கு, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க திருமணம் தன் சொந்த செலவில் செய்து வைக்கலாம், அப்படி செய்யும் பட்சத்தில் அவருக்கு மறு பிறவி இன்றி நிரந்தரமாக சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.....

இதனால் தான் இத்தானத்தை சிறந்த தானம் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள் போலும்.......!

- பிரவின் சுந்தர் பூ.வெ. 

  

No comments:

Post a Comment